** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 23 June 2015

23/06/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்‌த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது பங்குமுதலீட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 128 புள்ளிகள் உயர்ந்து 8353 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 103 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8373 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஜூன் இரண்டாவது வாரத்தில் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் சரிந்தது. ஆனால் கடந்த வாரத்தில் மட்டும் 890 புள்ளிகள் அளவுக்கு சென்செக்ஸ் உயர்ந்து முடிந்தது.
பருவ மழை சராசரியை விட அதிகமாக இருந்தது, அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தை தள்ளிவைத்தது ஆகிய காரணங்களால் முதலீட்டாளர் களிடையே நம்பிக்கை அதிகரித் தது. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்று சவுதி அரேபியா தெரிவித்தது ஆகிய காரணங்களால் சென்செக்ஸ் உயர்ந்தது. இதனால் தொடர்ந்து ஆறு வர்த்தக தினங்களாக பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன.
ஜூன் 1 மற்றும் 2வது வாரங் களில் முதலீட்டாளர்களின் நம்பிக் கையை குறைக்கும் விதமாக பல செய்திகள் இருந்தன. பருவமழை குறித்த சந்தேகம் இருந்தது. தொழில் உற்பத்தி குறியீடு 1 முதல் 1.5 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் 4.1 சதவீதமாக இருந்தது. நுகர்வோர் பணவீக்கமும் 5 சதவீத அளவில் இருந்ததால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை உயர்ந்தது.
ரிலையன்ஸ் 12% உயர்வு
கடந்த வாரத்தில் மட்டும் ரிலையன்ஸ் பங்கு சுமார் 12 சதவீதம் உயர்ந்து முடிந்தது. 2008-ம் ஆண்டு பொருளாதார மந்த நிலைக்கு பிறகு ரிலை யன்ஸ் பங்கில் பெரிய ஏற்றம் இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு பங்குச்சந்தையில் பெரிய ஏற்றம் இருந்தாலும் அந்த ஏற்றத்திலும் ரிலையன்ஸ் பங்கு உயரவில்லை. கடந்த பல வருடங்களில் இல்லாத அளவுக்கு ரிலையன்ஸ் பங்கு குறைவான விலையில் வர்த்தகமானது.
ரிலையன்ஸ் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானியின் பேச்சு முதலீட் டாளர்களுக்கு நம்பிக்கை அளிப் பதாக இருந்ததால் பங்கின் விலை உயர்ந்தது. இந்த நிறுவனம் 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தற்போதைய மதிப்பை விட இன்னும் இரண்டு ஆண்டுகளில் இரு மடங்கு அளவுக்கு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். அதாவது 50 வருட வளர்ச்சியை இரு வருடங்களில் அடைய திட்டமிட்டிருப்பதாக தெரிவித் ததால் முதலீட்டாளர்களின் நம்பிக் கை உயர்ந்தது.
ரிலையன்ஸ் ஜியோ வெளியீடு, மூடிய பெட்ரோல் பங்குகளை திறந்தது உள்ளிட்ட நடவடிக் கையால் சர்வதேச தரகு நிறுவ னங்கள் ரிலையன்ஸ் பங்குக்கான இலக்கு விலையை உயர்த்தின. இதனால் கடந்த ஆறு மாதங்களாக 850 முதல் 870 ரூபாயில் வர்த்தகமான இந்த பங்கு கடந்த வெள்ளி அன்று 1000 ரூபாயை தொட்டது. வர்த்தகத்தின் முடிவில் 996 ரூபாயில் முடிவடைந்தது.
இதனால் கடந்த வாரத்தில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ34,743 அளவுக்கு உயர்ந்தது.
ஏற்ற இறக்கம்
வரும் வாரத்தில் டெரிவேட்டிவ் கான்ட்ராக்ட் முடிய இருப்பதால் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
தவிர, சந்தை போக்கினை தீர்மானிக்கும் எந்த முக்கியமான தகவல்களும் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் இந்த வாரத்தில் இல்லை என்பதால் குறுகிய கால சந்தையின் போக்கினை பருவமழை தீர்மா னிக்கும் என்று அவர்கள் தெரி வித்தார்கள்.
சென்செக்ஸ் குறியீட்டில் இணைகிறது லுபின்
சென்செக்ஸ் குறியீட்டில் இன்று மாற்றம் நடக்க இருக்கிறது. மின் துறையில் செயல்பட்டு வரும் நிறுவனமான டாடா பவர் இந்த குறியீட்டில் இருந்து வெளியேறுகிறது. அதற்கு பதிலாக மருந்து நிறுவனமான லுபின் இந்த குறியீட்டில் இணைகிறது. இதற்கான அறிவிப்பு மே மாதம் 22-ம் தேதி வெளியானது.
இன்று முதல் இது நடைமுறைக்கு வருகிறது. மே மாதம் அறிவிப்பு வெளியான தினத்தில் டாடா பவர் பங்கு ஐந்து சதவீதம் சரிந்தது. மாறாக, லுபின் பங்கு 4.6 சதவீதம் வரை உயர்ந்து முடிந்தது. சென்செக்ஸ் குறியீட்டில் மட்டுமல்லாமல் பி.எஸ்.இ. 100, பி.எஸ்.இ 200 ஆகிய குறியீடுகளிலும் இன்று சில மாற்றங்கள் நடக்க இருக்கிறது. பி.எஸ்.இ 100 குறியீட்டில் இருந்து அதானி பவர் வெளியேறுகிறது.
நிப்டி சப்போர்ட் 8322,8280,8250
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8370,8399,8444
23-Jun-2015Details
Dividends
Central Bank of India
Indian Bank
UCO Bank
AGM
Polaris Consulting & Services Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.