** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 14 July 2015

14/07/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வார வர்த்தகத்தின் முதல்நாளில், ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 99 புள்ளிகள் உயர்ந்து 8459 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 217 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8469 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பிரசல்சில் நடைபெற்ற ஐரோப்பிய மண்டல நிதியமைச்சர்கள் கூட்டத்தில், கிரீஸ் கடன் பிரச்னைக்கு, ஒருவழியாக தீர்வு காணப்பட்டுள்ளது.
கிரீஸ், பன்னாட்டு நிதியத்திற்கு, 10,500 கோடி ரூபாய் கடன் தவணை வழங்குவதற்கான, 'கெடு', ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, 'கடனை திரும்ப செலுத்த தவறிய நாடு' என்ற பட்டியலில் கிரீஸ் சேர்க்கப்பட்டது. அந்நாட்டு வங்கிகள் மூடப்பட்டன; 1,000 வங்கிக் கிளைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டன. அவற்றிலும், ஏ.டி.எம்.,களிலும் அன்றாடம் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், கிரீஸ் மக்கள், குறிப்பாக ஓய்வூதியதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.ஏற்கனவே, 2010 முதல், இரு தவணைகளில் ஐரோப்பிய நாடுகளிடம் கடனுதவி பெற்ற கிரீஸ், வாக்குறுதிப்படி, சிக்கன நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த தவறியதால், இத்தகைய சிக்கலை சந்தித்தது.அதனால், அந்நாடு, மூன்றாவது தவணையாக, மூன்று ஆண்டுகளில், 6.08 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரி வந்தது.
ஆனால், தொழில் துறையில் தனியார்மயம், ஓய்வூதிய குறைப்பு, மதிப்பு கூட்டு வரி உயர்வு உள்ளிட்ட, ஆறு முக்கிய சீர்திருத்தங்களை செயல்படுத்தினால் மட்டுமே, மீண்டும் கடன் வழங்கப்படும் என, ஐரோப்பிய கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்து விட்டது.இதனால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து கிரீஸ் வெளியேறும் சூழல் உருவானது.இதை தவிர்க்கவும், சிக்கன நடவடிக்கை தொடர்பான மக்களின் கருத்தை கேட்கவும், கடந்த, 5ம் தேதி கிரீசில் பொதுஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில், சிக்கன நடவடிக்கைக்கு எதிராக பெரும்பான்மை மக்கள் ஓட்டளித்தனர்.எனினும், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியை உணர்ந்த கிரீஸ், மெல்ல தன் நிலையில் இருந்து இறங்கி வந்தது.
ஐரோப்பிய கூட்டமைப்பின் பெரும்பான்மை நிபந்தனைகளை ஏற்று, பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், புதிய சீர்திருத்த திட்டத்தை, பிரசல்சில், ஐரோப்பிய மண்டல நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் வழங்கினார்.இத்திட்டம் குறித்து, ஐரோப்பிய நிதியமைச்சர்கள் நேற்று முன்தினம் துவங்கி, நேற்று காலை வரை, விடிய விடிய விவாதித்தனர். 17 மணி நேர ஆலோசனைக்கு பின், கிரீஸ் அளித்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, கடனுதவித் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தப்படி, கிரீசுக்கு, 6.08 லட்சம் கோடி ரூபாய் கடன் கிடைக்கும். இதில், 2.45 லட்சம் கோடி ரூபாய், வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிடப்படும். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்திற்கு, ஐரோப்பிய நாடுகளின் பார்லிமென்ட் ஒப்புதல் வழங்க வேண்டும்.அதுமட்டுமின்றி, பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் அளித்த சிக்கன திட்டம், கிரீஸ் பார்லிமென்டிலும் நிறைவேற வேண்டும்.நாளை மறுநாள், கிரீஸ் பார்லிமென்டில், சிக்கன திட்டம் தொடர்பான தீர்மானத்தை, அலெக்சிஸ் சிப்ராஸ் தாக்கல் செய்ய உள்ளார். இதனிடையே, சிக்கன நடவடிக்கைகளுக்கு கிரீசில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
* கிரீஸ் மொத்த கடன் - 22.40 லட்சம் கோடி ரூபாய்
* ஐரோப்பிய நாடுகளின் கடனுதவி - 16.80 லட்சம் கோடி ரூபாய்
* மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் - 177 சதவீதம்
* கடந்த, 2010 முதல், பொருளாதார வளர்ச்சி, 25 சதவீதம் சரிவு
* வேலையில்லா திண்டாட்டம் 26 சதவீதமாக உயர்வு
நிப்டி சப்போர்ட் 8430,8380,8350
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8470,8500
14-Jul-2015Details
Dividends
ALSTOM India Ltd
Lupin Ltd
Novartis India Ltd
Board Meetings
DCB Bank Ltd
NIIT Technologies Ltd
AGM
Canara Bank
Hindustan Construction Company Ltd
Zensar Technologies Ltd
EGM
Texmaco Rail & Engineering Ltd
Results
DCB Bank Ltd
NIIT Technologies Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.