** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 16 July 2015

16/07/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்தது
நேற்றைய நமது நிப்டி 69 புள்ளிகள் உயர்ந்து 8523 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 3 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 10 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8543 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
தொடர்ந்து 8 மாதமாக மொத்த விலைக் குறியீட்டெண் (டபிள்யூபிஐ) பணவீக்கம் ஜூன் மாதத்தில் மைனஸ் 2.4 சதவீதமாக இருந்தது. காய்கறி மற்றும் எரிபொருள் விலை குறைவாக இருந்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பருப்பு விலைகள் ஜூன் மாதத்தில் சற்று உயர்ந்து காணப்பட்டன.
கடந்த மே மாதத்தில் ஒட்டுமொத்த விற்பனை விலை குறியீட்டெண் பணவீக்கம் மைனஸ் 2.36 சதவீதமாக இருந் தது. இது ஜூன் மாதத்தில் மேலும் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மொத்த விற்பனை விலை குறியீட்டெண் தொடர்ந்து மைனஸ் நிலையில் இருக்கிறது. கடந்த ஆண்டு இது 5.66 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் சில்லரை பணவீக்கம் வெளியானது. அது 8 மாதத்தில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 5.4 சதவீதமாக இருந்தது.
சில்லரை பணவீக்கமும், ஒட்டுமொத்த விற்பனை விலைக் குறியீட்டெண்ணும் நேரெதிர் நிலையில் இருப்பதனால் எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்று கணிப்பது மிகவும் சிரமமாக இருக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து சரிவில் இருப்பதால் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை ரிசர்வ் வங்கி மூன்று முறை வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தனது கடன் கொள்கையை ரிசர்வ் வங்கி வகுக்கிறது. அடுத்து வரும் பணவீக்க விவரம் மற்றும் பருவ மழை பொழிவு இவற்றின் அடிப்படையில் அடுத்தகட்ட கடன் கொள்கை அமையும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவித்துள்ளது.
கடந்த மாதம் கோதுமை, பழங்கள், பால் பொருள்கள் விலை கணிசமாக உயர்ந்திருந்தது. அதேசமயம் ஒட்டுமொத்த விற்பனை விலை பணவீக்கம் உணவுப் பொருள்களைப் பொறுத்தமட்டில் 2.88 சதவீதமாக சரிந்திருந்தது. இது மே மாதத்தில் 3.80 சதவீதமாக இருந்தது.
காய்கறிகள் விலை 7.07 சதவீதம் சரிந்தது. உருளைக்கிழங்கு விலை 52 சதவீதம் சரிந்தது. அதேசமயம் பருப்பு வகைகள் 33 சதவீதம் உயர்ந்திருந்தது. முந்தைய மாதத்தில் இது 22.84 சதவீதமாக இருந்தது.
ஜூன் மாதத்தில் எரிபொருள் சார்ந்த பொருள்களின் பணவீக்கம் மைனஸ் 10.3 சதவீதமாக இருந்தது.
உற்பத்தித் துறை சார்ந்த பொருள்களின் பணவீக்கம் மைனஸ் 0.77 சதவீதமாக இருந்தது. இது முந்தைய மாதத்தில் மைனஸ் 0.64 சதவீதமாக இருந்தது. சிமென்ட், உலோகம் அல்லாத கனிமங்களின் விலை மற்றும் போக்குவரத்து சாதனங்கள் அதன் உதிரி பாகங்களின் விலை குறைந்திருந்தது.
ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையில் வட்டிக் குறைப்பு நடவடிக்கை இருக்காது என்றே நிபுணர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். ஏற்கெனவே அறிவித்த வட்டிக் குறைப்பு நடவடிக்கையை வங்கிகள் முழுமையாக செயல்படுத்தும் வரை புதிய வட்டிக் குறைப்பை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த மாதம் ரெபோ வட்டி விகிதம் 7.50 சதவீதத்திலிருந்து 7.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
நிப்டி சப்போர்ட் 8500,8480
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8550,8580
16-Jul-2015Details
Dividends
Cera Sanitaryware Ltd
Coromandel International Ltd
Hitachi Home & Life Solutions (India) L
Mahindra & Mahindra Ltd
Mahindra Holidays & Resorts India Ltd
Persistent Systems Ltd
Persistent Systems Ltd
Thermax Ltd
UPL Ltd
Va Tech Wabag Ltd
Zydus Wellness Ltd
Board Meetings
CMC Ltd
Cyient Ltd
D B Corp Ltd
Delta Corp Ltd
Fag Bearings India Ltd
Mindtree Ltd
PMC Fincorp Ltd
AGM
Cyient Ltd
Karnataka Bank Ltd
Results
Cyient Ltd
D B Corp Ltd
Delta Corp Ltd
Fag Bearings India Ltd
Mindtree Ltd
PMC Fincorp Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.