** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 8 October 2015

8/10/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று எழுச்சி காணப்பட்டன. ரிசர்வ் வங்கி இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6வது நாளாக உயர்வுடன் முடிந்தன. நேற்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குச்சந்தைகள், முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்ததால் ஏற்றம் அடைய தொடங்கின. தொடர்ந்து உயர்வுடன் இருந்த பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே முடிந்தன. 
நேற்றைய நமது நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 8177 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 122 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8197 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டம், கடந்த நிதி ஆண்டு ரூ.13 ஆயிரத்து 102 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக, வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் பி.ரமேஷ்பாபு தெரிவித்தார்.
உதகை பாரத ஸ்டேட் வங்கிக் கிளை தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி, வாடிக்கையாளர் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் தலைமை வகித்தார். இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் சீனிவாசன், வாடிக்கையாளர்களை கவுரவித்து நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக பாரத ஸ்டேட் வங்கி சென்னை வட்ட முதன்மைப் பொது மேலாளர் பி.ரமேஷ்பாபு பங்கேற்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பணப் பரிவர்த்தனை மட்டுமின்றி, சமூக சேவையையும் அங்கமாக கருதி பாரத ஸ்டேட் வங்கி செயல்படுகிறது. இதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.ஐ. அறக்கட்டளை உருவாக்கப் பட்டது. லாபத்தில் ஒரு பங்கு நிதி அறக்கட்டளைக்கு ஒதுக்கப் பட்டு, கல்வி மற்றும் சமூக மேம் பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தப் படுகிறது. நாடு முழுவதும் பாரத ஸ்டேட் வங்கிக்கு 14 வட்டங்கள் உள்ளன. சென்னை வட்டத்தில் 1086 கிளைகள் உள்ளன. இதில், 12 ஆயிரத்து 356 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த நிதி ஆண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.13 ஆயிரத்து 102 கோடி.
சென்னை வட்டத்திலுள்ள எஸ்.பி.ஐ. வங்கிகளில் குறைந்த \வட்டியில் வீட்டுக் கடன் மட்டு மின்றி, வைப்புத் தொகையைவிட அதிகமாக கடனும் வழங்கப் பட்டுள்ளது. ‘முத்ரா’ திட்டத்தின் கீழ், 24 ஆயிரம் பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அனை வருக்கும் வங்கிக் கணக்கு (ஜன்தன் யோஜனா) திட்டத்தின் கீழ், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
வரும் காலத்தில் பணப் பரிவர்த்தனைகள் முழுவதும் செல்போனில் நடைபெறும் என்பதால், வங்கி சார்பில் ‘பட்டி’ (BUDDY) என்ற பிரத்யேக ‘செயலி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக கணக்கு வைத் திருப்பவர்கள், இல்லாதவர்கள் என அனைவரும் பணப் பரிவர்த்தனை செய்யலாம்.
மேலும், பெண் குழந்தை களின் நலனுக்காக ‘சுகன்யா சம்ருதி’ திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. இதில் தொடர்ந்து பணம் செலுத்தி வந்தால், 14 ஆண்டுகளுக்குப் பின்னர், குழந்தையின் உயர்க் கல்வி அல்லது திருமணத்துக்கு பயன் படும். இதற்கு, ஸ்டேட் வங்கியில் தான் அதிகபட்சமாக 9.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உதகை வங்கியின் முதன்மை மேலாளர் மாதைய்யன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், வங்கி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிப்டி சப்போர்ட் 8166,8144,8100
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8199,8222,8250
08-Oct-2015Details
Board Meetings
DLF Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.