** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 10 October 2015

வெற்றி ஒன்றே வேத மந்திரம்.........
http://www.panguvarthagaulagam.blogspot.in/
ஒரு கட்டிடத்தின் ஒட்டுமொத்த பலமும் அதன் அடித்தளத்தை சார்ந்தே அமைந்திருப்பதை போல, நமது இலக்கிற்கான செயல்பாடுகள் அனைத்தும் நாம் மேற்கொள்ளும் ஆரம்பகட்ட வரையறைகளைப் பொருத்தே அமையும். ஒரு பணியின் நல்ல தொடக்கம் என்பது அதன் பாதி வெற்றிக்கு சமம்.
முதலில் நமக்கு என்ன தேவை? நமது இலக்கு எது? என்பதை மிகத் தெளிவாக நம் மனதில் பதிவேற்றம் செய்துக்கொள்ள வேண்டும். இலக்கு இல்லாத பயணம், துடுப்பு இல்லாத படகினைப் போன்றது. அடுத்ததாக, எடுத்துக்கொண்ட இலக்கினை என்னால் செய்ய முடியும் என்ற எண்ணத்தை நம் மனதில் ஆழப்பதிய வேண்டும். அதற்குபிறகு, செயல்பாட்டு திட்டங்களை தெளிவாக அமைத்துக்கொள்ள வேண்டும். 
நமக்கு ஏற்படும் தோல்விகளில் இருந்தும், நாம் செய்யும் தவறுகளில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன. ஒவ்வொரு தோல்வியிலும் அதற்கு நிகரான வெற்றிக்கு தேவையான விதை இருக்கின்றது.