** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 16 November 2015

16/11/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் துவங்கிய பங்குச்சந்தைகள் நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன. நாட்டின் தொழில்துறை உற்பத்தி சரிந்தது, பணவீக்கம் உயர்ந்தது போன்ற காரணங்களால் 
 வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து சரிவுடன் இருந்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன
நேற்றைய நமது நிப்டி 62 புள்ளிகள் சரிந்து 7762 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 202 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 7742 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7740,7710,7666
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7760,7780,7800
ஜேகே வங்கி நிகர லாபம் 13.5% உயர்வு
ஜம்மு காஷ்மீர் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 13.5 சதவீதம் உயர்ந்து 196 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 172 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
ஆனால் வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு குறைந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,883 கோடி ரூபாய் அளவுக்கு இருந்த மொத்த வருமானம் இப்போது 1,847 கோடி ரூபாய்க்கு சரிந்துள்ளது.
இந்த காலாண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 4.73 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 6.46 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 2.46 சதவீதத்தில் இருந்து 2.78 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் 17.20 சதவீதம் உயர்ந்து 354 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 302 கோடி ரூபாயாக இருந்தது.
ஜிஎம்ஆர் இன்பிரா நஷ்டம் ரூ.399 கோடி
ஜி.எம்.ஆர் இன்பிரா நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நஷ்டம் 399 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. மின்சார நிலையங்கள் மூலம் கிடைக்கும் செயல்பாட்டு லாபம் மற்றும் விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றின் காரணமாக நஷ்டம் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 609 கோடி ரூபாயாக நிகர நஷ்டம் இருந்தது.
நிறுவனத்தின் மொத்த விற்பனை சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 2,636 கோடி ரூபாயாக இருந்த மொத்த விற்பனை இப்போது 3,070 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
நிறுவனம் செலுத்த வேண்டிய வட்டி கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் போது 33 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது. கடந்த நவம்பர் 13-ம் தேதி இயக்குநர் குழுமம் முடிவெடுத்ததில் ராவா செக்யூரிட்டி சர்வீசஸ் நிறுவனம் துணை நிறுவனமாக மாற்றப்பட்டது.
கட்டுமானம்,சாலைகள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்களை செயல்படுத்தி வருகிறது ஜிஎம்ஆர் குழுமம்.
வெல்ஸ்பன் கார்ப் நிகர லாபம் ரூ.101 கோடி
பைப் தயாரிக்கும் நிறுவனமான வெல்ஸ்பன் கார்ப் நிறுவனத்தின் நிகர லாபம் பல மடங்கு உயர்ந்து 101 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 5.25 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. ஆனால் நிறுவனத்தின் மொத்த வருமானம் 4 சதவீதம் உயர்ந்து 2,503 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,412 கோடி ரூபாயாக இருந்தது.
நிறுவனத்தின் செலவுகள் சிறிதளவு குறைந்திருக்கிறது. கடந்த வருடம் 2,326 கோடி ரூபாயாக இருந்த செலவுகள் இப்போது 2,312 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.
நிறுவனத்தின் வசம் 8.52 லட்சம் டன் அளவுக்கு ஆர்டர்கள் உள்ளன. இதன் மதிப்பு சுமார் 5,200 கோடி ரூபாய் ஆகும். அமெரிக்கா மற்றும் இதர சந்தைகள் சிறப்பாக உள்ளதால் அதிக ஆர்டர்கள் இருப்பதாக நிறுவனத்தின் தலைவர் பி.கே. கோயங்கா தெரிவித்தார்.
16-Nov-2015Details
Dividends
Credit Analysis & Research Ltd
Hexaware Technologies Ltd
Page Industries Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.