** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 16 November 2015

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
http://www.panguvarthagaulagam.blogspot.in/
1. தொடர் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கபடும் நிலை உள்ளதால் மேல் நிலை தொட்டிகளில் நீர் நிரப்பிக் கொள்ளவேண்டும்.
2. அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்திருக்கவும். முக்கிய தேவையின்றி வீட்டினை விட்டு வெளியில் வருவதை தவிர்க்கவும்.
3.கூடுமான வரை பொது போக்குவரத்தை பயன்படுத்தவும்.
4.தேங்கிய நீரில் குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்.கவனமாக இருக்கவும்.
5.வயதானவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களது உடல் நிலையை தொடர்ந்து கண்காணிப்பது நலம்.
6.வாகனங்களை இயக்கும் முன் வாகனத்தின் நிலை, செல்லும் பாதை ஆகியவற்றின் பாதுகாப்பு நிலையை முன்கூட்டியே உறுதிபடுத்துங்கள்.
7.மரம் அருகில் நிற்காதீர்கள் வண்டிகளையும் நிறுத்தாதீர்கள்.
8.மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகள் இருப்பு வையுங்கள் (இன்வெர்ட்டர் இருந்தாலும் )
9.மின்சாரம் இருக்கும்போதே தேவையானதை மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
10.அவசர கையிருப்புக்கு ATM மில் பணம் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
11.மருந்து மாத்திரைகள் அவசரத்தேவைக்கு வாங்கி வையுங்கள், மழையால் கடைகள் மூடப்பட்டால் சிரமம்.
12.ப்ரெட்,முட்டை போன்ற உணவுப்பொருட்கள் அவசரநிலையில் உணவிற்கு உதவும்.
13.தாழ்வான பகுதியிலிருப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்க உறவினர்கள் வீடுகளுக்கோ அல்லது அரசு தரும் உதவிகளை ஏற்று பாதுகாப்புடன் இருக்கவும்..