** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 12 February 2016

12/2/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்த நிலையில், நேற்று (பிப்.11ம் தேதி) கடும் சரிவை சந்தித்தன. ஒரே நாளில் சென்செக்ஸ் 807 புள்ளிகளும், நிப்டி 239 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்தன. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.3 லட்சம் கோடி இழப்பாகியுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாரத்திற்கு மேலாகவே உலகளவில் பங்குச் சந்தைகளில் மந்தமான சூழலே நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் மந்தமாக இருந்து வந்தன. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்த நிலையில், நேற்றும் சரிவு நிலை தொடர்ந்தது.
நேற்றைய வர்த்தகம் துவங்கும் போது, சென்செக்ஸ் 148.20 புள்ளிகள் உயர்ந்து 23,610.70 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 29.50 புள்ளிகள் சரிந்து 7,186.20-ஆகவும் இருந்தது. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கம், குறிப்பாக ஹாங்காங் பங்குச்சந்தை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4 சதவீதம் சரிந்தது. இதன்காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் சரிவுடன் இருந்தன.
சென்செக்ஸ் 1665 புள்ளிகள் வீழ்ச்சி : இந்த நிலையில் மதியத்திற்கு மேல் பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன. வர்த்தகம் முடியும் போது மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 807.07 புள்ளிகள் சரிந்து 22,951.83-ஆக சரிந்தது.இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவாகும். கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 1665 புள்ளிகள் சரிந்துள்ளது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 239.35 புள்ளிகள் சரிந்து 6,976.35-ஆக முடிந்ததுடன் 7000 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
கடும் சரிவு ஏன்.?
பங்குச்சந்தைகள் கடுமையாக சரிய கீழ்க்கண்ட காரணங்கள் சொல்லப்படுகிறது. அவை:
* அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதாக வெளியான தகவல்...* ரூபாயின் மதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூ.68.29ஆக சரிந்தது...* ஹாங்காங் பங்குச்சந்தை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது* அந்நிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறியது* முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது
3 லட்சம் கோடி இழப்பு : பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் இன்று அநேக பங்குகள் சரிவுடன் முடிந்தன. இதனால் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.3 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நேற்றைய நிப்டி 239 புள்ளிகள் சரிந்து 6976 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 254 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன் 7036 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஸ்டேட் வங்கி லாபத்தில் 67% சரிவு.
வாராக்கடன் சுமையினால் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) லாபம் 67% சரிவடைந்து டிசம்பர் 31, 2015-ல் முடிவடைந்த காலாண்டு இறுதியில் ரூ.1,259.49 கோடியாக உள்ளது. 
எஸ்பிஐ குழுமம் 2014-15, அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.3,828.20 கோடி நிகர லாபம் ஈட்டியது. 
நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டு இறுதியில் எஸ்பிஐ-யின் லாப விகிதம் 61.6% சரிவு கண்டு 1,115.34 கோடியாக இருந்தது. இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டின் போது நிகர லாபம் ரூ.2,910.06 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
டிசம்பர் மாத காலாண்டில் செயல்படாத சொத்துக்களுக்கான ஒதுக்கீடு ரூ.7,644.52 கோடியாகும். கடந்த ஆண்டின் இதே காலாண்டு பகுதியில் செயல்படாத சொத்துக்கள் ரூ.5,327.51 கோடியாக இருந்தது. 
இந்நிலையில் 2015 டிசம்பர் மாதம் வரையிலான, வாராக்கடன்களின் ஒரு பகுதியை உள்ளடக்கிய, ஒட்டுமொத்த செயல்படாத சொத்துக்கள் ரூ.72,791.73 கோடியாகும். இது இதற்கு முந்தைய நிதியாண்டு டிசம்பர் முடிவில் ரூ.61,991.45 கோடியாக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 6955,6888
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7044,7133
12 feb details
results
adani ports
andhra bank
bpcl
canara bank
ceat
corp bank
hpcl
m&m
sun tv
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 74000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM