** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 28 March 2016

28/2/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கிய நிலையில் வர்த்தகம் முடியும் சமயத்தில் சிறு ஏற்றத்துடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 19 புள்ளிகள் உயர்ந்து 7716 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 13 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 120 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7746 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் ரூ.29,000 கோடி வரி செலுத்துமாறு வருமான வரித்துறை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் இந்த ஆண்டில் முன் தேதியிட்டு விதிக்கப்பட்ட வரி தொடர்பாக நோட்டீஸ் பெறும் இரண்டாவது நிறுவனமாகும். முன்னதாக வோடோபோன் நிறுவனத்திற்கு இதுபோன்ற நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடும் முன்பே தாய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி நிறுவனத்திற்கு பங்கு களை மாற்றி ஆதாயமடைந்ததாக வும் அதற்கு வரி செலுத்துமாறும் வருமான வரித்துறை கூறியிருந்தது. கெய்ர்ன் நிறுவனம் 10,247 கோடி ரூபாய் ஆதாய மடைந்துள்ளதாக மதிப்பீட்டு வரைவு ஒன்றை 2014-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி வருமான வரித்துறை கெய்ர்ன் நிறுவனத் துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் கடந்த மாதம் இறுதி மதிப்பீட்டு உத்தரவை வருமான வரித்துறை அனுப்பியுள்ளது.
பங்குகளை மாற்றியதன் மூலம் ரூ.10,247 கோடியும் அதற்கு வட்டி மொத்தம் 18,800 கோடி ரூபாயும் மதிப்பீட்டு உத்தரவில் கூறப்பட்டிருந்ததாக கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் கூறியுள்ளது.
நிறுவனங்களுக்கு முன் தேதியிட்டு வரி விதிக்கப்படாது என்று மத்திய அரசு குறிப்பிடும் அதே நேரத்தில்தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016-17-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் முன் தேதியிட்டு வரி விதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அடிப்படை தொகையை கட்டினால் வட்டி மற்றும் அபராதம் ஆகியவற்றிலிருந்து சலுகை அளிக்கப்படும் என்று ஒருமுறை சமரச தீர்வு ஒன்றை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்புக்கு முன்பே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வருமான வரி விதிகள் படி, மதிப்பீட்டு உத்தரவு வழங்கிய 2 வருடங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கெய்ர்ன் நிறுவனம் சர்வதேச தீர்ப்பாயத்தை நாடியுள்ளது.
எங்களுடைய நிறுவனத் திற்குள் மறு சீரமைப்பு செய்வதற்கு எப்படி முன் தேதியிட்டு வரி விதிக்கமுடியும் என்று கெய்ர்ன் நிறுவனம் இதை எதிர்த்து வருகிறது
வீடியோகான் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ரூ.4428 கோடிக்கு பார்தி ஏர்டெல் நிறுவனம் வாங்கி உள்ளது.
பீகார், அரியானா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் (கிழக்கு), உத்திர பிரதேசம் (மேற்கு) மற்றும் குஜராத் ஆகிய 6 வட்டங்களில் தொலைத் தொடர்பு சேவை வழங்குவதற்கு பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு 1800 மெகா ஹெட்ஸ் பேண்ட் அளவிற்கு ஸ்பெக்ட்ரம் உரிமை தேவைப்படுகிறது. இதற்காக வீடியோகான் டெலிகம்யூனிகேஷன் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. இதன்படி, இந்த 6 வட்டங்களில் வீடியோகான் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்பெக்ட்ரம் உரிமத்தை, ரூ.4428 கோடிக்கு ஏர்டெல் நிறுவனம் வாங்கி உள்ளது.
இந்த ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான ஒப்பந்தம் 2032 ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோகானின் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வாங்கப் போவதாக ஏர்டெல் அறிவித்ததன் காரணமாக பங்குச்சந்தையில் ஏர்டெல் நிறுவன பங்குகள் 2.89 சதவீதம் கூடுதலாக வர்த்தகமாகின.
நிப்டி சப்போர்ட் 7700,7680
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7740,7760
28 mar details
dividends
dlf
twl

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 80000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM