** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 10 November 2016

10/11/2016...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
''கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி , அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பாலும், அமெரிக்க அதிபர் தேர்தல் மீதான எதிர்பார்ப்பாலும் இந்திய பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. 
காலையில் வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 1700 புள்ளிகளும், நிப்டி 475 புள்ளிகளும் சரிவை சந்தி்த்தன. ஆனால் மதியத்திற்கு பிறகு பங்குச்சந்தைகளில் சரிவிலிருந்து கொஞ்சம் மீண்டன. குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பங்குச்சந்தைகள் உயர தொடங்கின. 
நேற்றைய நிப்டி 111 புள்ளிகள் சரிவுடன் 8432 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 250 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன் 8492 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.

அசோக் லேலண்ட் நிகர லாபம் 71% உயர்வு

ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 71 சதவீதம் உயர்ந்து ரூ.294 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.172 கோடியாக நிகர லாபம் இருந்தது.
ஆனால் நிறுவனத்தின் வருமானம் 6.8 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.5,274 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ.4,911 கோடியாக இருக்கிறது. அந்நிய செலாவணி மூலம் கடந்த காலாண்டில் ரூ.6.56 கோடி லாபம் அடைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.157 கோடி நஷ்டமடைந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 2.57 சதவீதம் உயர்ந்து 91.75 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
ஹெச்டிஎப்சி வங்கி நிகர லாபம் 20% உயர்வு
தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 20 சதவீதம் உயர்ந்து ரூ.3,455 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் லாபம் ரூ.2,869 கோடியாக இருந்தது. மொத்த வருமானம் ரூ.17,324 கோடியில் இருந்து ரூ.19,970 கோடியாக உயர்ந்திருக்கிறது.
மொத்த வாராக்கடன் 1.02 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 0.9 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடனும் 0.2 சதவீதத்தில் இருந்து 0.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வாராக்கடன் மற்றும் இதர செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.640 கோடியில் இருந்து ரூ.749 கோடியாக அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் அரையாண்டில் நிகர லாபம் 20.3 சதவீதம் உயர்ந்து ரூ.6,694 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.5,565 கோடியாக இருந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 1.05 சதவீதம் சரிந்து 1,250 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
கோடக் மஹிந்திரா நிகர லாபம் 28% உயர்வு
தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 28 சதவீதம் உயர்ந்து ரூ.1,202 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.942 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 8,415 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.6,729 கோடியாக இருந்தது.
இதர வருமானம் 66 சதவீதம் உயர்ந்து 2,881 கோடியாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 2.49 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2.35 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடன் 1.20 சதவீதமாக இருக்கிறது. நிகர வட்டி வரம்பு 4.30 சதவீதத்தில் இருந்து 4.47 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. `காசா விகிதம்’ 39 சதவீதமாக இருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை சிறிதளவு உயர்ந்து ரூ.217 கோடியாக இருக்கிறது. டெபாசிட் வளர்ச்சி 15.41 சதவீதமாகவும், கடன் வளர்ச்சி 14.41 சதவீதமாகவும் இருக்கிறது.
யெஸ் பேங்க் வருவாய் ரூ.4,094 கோடி
யெஸ் பேங்க், கடந்த செப்., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 4,094.38 கோடி ரூபாயை, மொத்த செயல்­பாட்டு வரு­வா­யாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 3,377.24 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இந்த காலாண்டில், இந்­நி­று­வ­னத்தின் தனிப்­பட்ட நிகர லாபம், 31.31 சத­வீதம் உயர்ந்து, 610.41 கோடி ரூபாயில் இருந்து, 801.54 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. 
நிப்டி சப்போர்ட் 8300,8130
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8600,8777
10 nov

divident
nilkamal
strlite tech
sundaram pastners
results
ab nuvo
bankindia
bluestar
bfutilitirs
sunpharma
wockpharma
eros
minda ind
manappuram fin

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM