** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 18 May 2017

18/5/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..  
இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை எட்டிய நிலையில் (மே 17-ம் தேதி) மேலும் ஒரு புதிய உச்சத்தை தொட்டன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு மற்றும் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால்  வர்த்தகநேர துவக்கத்தில் பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தன. சென்செக்ஸ் 57.74 புள்ளிகளும், நிப்டி 22.55 புள்ளிகளும் சரிந்த நிலையில், அந்நிய முதலீடு அதிகரிப்பாலும், மழையளவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும் என்ற தகவலாலும் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. இதனால்  வர்த்தகம் உயர்வுடன் முடிந்ததுடன்,  புதிய உச்சத்தை முறியடித்து புதிய உச்சத்தை எட்டின
நேற்றைய நிப்டி 13 புள்ளிகள்  உயர்வுடன்   9525 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 372 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது  . ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் சரிவுடன்  9465  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
மே 18-ல் இருந்து பங்குகளை திரும்ப வாங்குகிறது டிசிஎஸ்
பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தினை வரும் வியாழக் கிழமை (மே 18) முதல் டிசிஎஸ் நிறுவனம் தொடங்க உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ், தனது பங்குகளை திரும்ப வாங்கும் முடிவினை பிப்ரவரி மாதம் அறிவித்தது. அதன்படி முதலீட்டாளர்களிடம் உள்ள ரூ.16,000 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்ப வாங்க உள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (செபி) அனுமதிக்கு பிறகு இந்த நடவடிக்கை தொடங்கப்படுகிறது என்று கூறியுள்ளது. இந்த திட்டத்துக்கு இயக்குநர் குழு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கை மே 18-ம் தேதி தொடங்கி, மே 31-ம் தேதியுடன் முடிவடையும் என்று கூறியுள்ளது.

செபியின் விதிமுறைகள்படி, டிசிஎஸ் நிறுவனம் தகுதியுடைய முதலீட்டாளர்களுக்கு கடிதம் வாயிலாக இதனை தெரியப்படுத்த வேண்டும். நிறுவனம் பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மே 16-ம் தேதிக்குள் முதலீட்டாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி டிசிஎஸ் பங்குகளை திரும்ப வாங்கும் முடிவினை அறிவித்தது. குறிப்பாக ரூ.1 முக மதிப்புடைய 5.61 கோடி பங்குகளை ரூ. 16,000 கோடிக்கு திரும்ப வாங்க உள்ளதாக அறிவித்தது. 2012-ம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.10,400 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்கியது. அதற்கு பிறகு நடைபெறும் மிகப்பெரிய பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கை இதுவாகும்.
கார்போரண்டம் யுனிவர்சல் லாபம் ரூ.42.26 கோடி
முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.42.26 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.41.88 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் ஒட்டுமொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. 2015-16-ம்
நிதி ஆண்டில் ரூ.139.69 கோடியாக இருந்த நிகர லாபம் இப்போது ரூ.164.69 கோடியாக உயர்ந்திருக்கிறது.
மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.592 கோடி. ஒட்டு மொத்த நிதி ஆண்டு மொத்த வருமானம் ரூ.2,232 கோடி.
ஒரு பங்குக்கு 0.75 ரூபாய் இறுதி டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ஒரு ரூபாய் வழங்கப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் இந்த பங்கு 1.99 சதவீதம் உயர்ந்து முடிந்தது.
சிண்டிகேட் வங்கிநிகர லாபம்ரூ.104 கோடி
பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.104 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,158 கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.359 கோடியாக இருக்கிறது. கடந்த
2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.1,643 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது.
மார்ச் காலாண்டு மொத்த வருமானம் ரூ.6,913 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.6,525 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 6.70 சதவீதத்தில் இருந்து 8.50 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 4.48 சதவீதத்தில் இருந்து 5.21 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 0.66 சதவீதம் இந்த பங்கு உயர்ந்தது.
தேனா வங்கிநஷ்டம் ரூ.575 கோடி
பொதுத்துறை வங்கியான தேனா வங்கியின் மார்ச் காலாண்டு நஷ்டம் ரூ.575 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.326 கோடியாக நஷ்டம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானமும் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,853 கோடியாக இருந்த மொத்த வருமானம், தற்போது ரூ.2,612 கோடியாக சரிந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 16.27 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு 9.98 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடனும் 6.35 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர நஷ்டம் ரூ.864 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ.935 கோடி நஷ்டம் இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 5.91 சதவீதம் அளவுக்கு இந்த பங்கு சரிந்தது.
விஜயா வங்கி லாபம் 3 மடங்கு உயர்வு
பொதுத்துறை வங்கியான விஜயா வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 3 மடங்கு உயர்ந்து ரூ.204 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகரலாபம் ரூ.71.31 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.3,228 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.3,504 கோடியாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.750 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம்
நிதி ஆண்டில் ரூ.381.80 கோடி
யாக இருந்தது. 2015-16-ல் ரூ.12,957 கோடியாக இருந்த மொத்த வருமானம், கடந்த நிதி ஆண்டில் ரூ.14,030 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 6.59 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 4.35 சதவீதமாகவும் இருக்கிறது. ஒரு பங்குக்கு 1.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9490,9470
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9540,9560
18 மே
spilits
----
divident
-----
results
bajajauto
bankofbaroda
abnuvo
cesc
coffeeday
cummins
dbcorp
eid porry
ht media
gatway
idbi
pidilite
tatacoffee
take

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM