** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 5 May 2017

5/5/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 48 புள்ளிகள் உயர்வுடன் 9360 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 6 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9370 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
காலாண்டு முடிவுகள்: 
சாந்தி கியர் நிறுவனத்தின் நிகர லாபம் 10% உயர்வு
முருகப்பா குழுமத்தை சேர்ந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 10 சதவீதம் உயர்ந்து ரூ.6.16 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.5.60 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் ரூ.22.51 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.17.73 கோடியாக நிகர லாபம் இருந்தது.

மார்ச் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.58.15 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.48.03 கோடியாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.214.55 கோடியாகும். கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.191.34 கோடியாக நிகர லாபம் இருந்தது.

ஒரு ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு ரூ.0.75 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. நேற்றைய முடிவில் 3.74 சதவீதம் உயர்ந்து 129.05 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
ஐசிஐசிஐ வங்கி நிகர லாபம் ரூ.2,024 கோடி
முக்கிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ. 2,024 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.701 கோடியாக இருந்தது. ஆனால் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் மிகச்சிறிய அளவில் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.9,726 கோடியாக இருந்த நிகர லாபம் இப்போது ரூ.9,801 கோடியாக உயர்ந்திருக்கிறது. மொத்த வருமானம் ரூ.68,062 கோடியில் இருந்து ரூ.73,660 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஒரு பங்குக்கு ரூ.2.50 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. தவிர 10 பங்குகளுக்கு ஒரு பங்கினை போனஸாக வழங்கவும் முடிவு செய்துள்ளது.
ஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் 43% சரிவு
ஆக்ஸிஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 43% சரிந்து ரூ.1,225 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,154 கோடியாக இருந்தது. ஆனால் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் ரூ.13,592 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.14,181 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1.67 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன், தற்போது 5.04 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.70 சதவீதத்தில் இருந்து 2.11 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
இதனால் வாராக்கடனுக்கு ஒதுக்கீடு செய்த தொகை இரு மடங்குக்கு மேல் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,168 கோடியாக இருந்த ஒதுக்கீடு தற்போது ரூ.2,581 கோடியாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 55 சதவீதம் சரிந்து ரூ.3,969 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.8,223 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் மொத்த வருமானம் ரூ.50,359 கோடியில் இருந்து ரூ.56,233 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஒரு பங்குக்கு 5 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 0.15% உயர்ந்து ஆக்ஸிஸ் வங்கி பங்கின் வர்த்தகம் முடிந்தது.
எல்விபி நிகர லாபம் 6% உயர்வு
தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 6 சதவீதம் உயர்ந்து ரூ.52 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.49 கோடியாக நிகர லாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.864 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.758 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.97 சதவீதத்தில் இருந்து 2.67 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதே போல வங்கியின் நிகர வாராக்கடன் 1.18 சதவீதத்தில் இருந்து ரூ.1.76 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.27 கோடியாக இருந்த ஒதுக்கீட்டு தொகை இப்போது 108 கோடியாக அதிகரித்திருக்கிறது.
ஆனால் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.180 கோடியாக இருந்த நிகர லாபம், தற்போது ரூ.256 கோடியாக உயர்ந்திருக்கிறது. மொத்த வருமானமும் 16.6 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16ம் நிதி ஆண்டில் ரூ.2,872 கோடியாக இருந்த மொத்த வருமானம், தற்போது ரூ.3,349 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஒரு பங்குக்கு 2.70 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
யெஸ் பேங்க் நிறுவனம்; லாபம் ரூ.914 கோடி
தனி­யார் துறை­யைச் சேர்ந்த யெஸ் பேங்க், வங்கி சேவை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த வங்கி, கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 914.12 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது.
இது, முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 702.11 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்­தில், இந்த வங்­கி­யின் மொத்த வரு­வாய், 29.4 சத­வீ­தம் உயர்ந்து, 4,331.11 கோடி ரூபா­யில் இருந்து, 5,606.38 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த மார்ச் மாத நில­வ­ரப்­படி, யெஸ் பேங்க் வங்­கி­யின் நிகர வாராக்­க­டன், 1.52 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 0.76 சத­வீ­த­மாக குறைந்­தி­ருந்­தது. அண்­மை­யில், கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு, 20 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு நிதி திரட்டி கொள்ள, வங்­கி­யின் இயக்­கு­னர்­கள் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.
நிப்டி சப்போர்ட் 9333,9305
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9375,9393
5 may  details
டிவிடெண்ட்
hatsun agro
hexaware tech
results
apollo tyre
atul
blue dart
eicher motors
fsl
equitas
sparc
pghh
spilit
-----
BONUS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 138000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM