** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 4 July 2017

04/07/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நாடு முழுக்க ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ள நிலையில் வர்த்தக வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் பங்குச்சந்தைகள் அதிக எழுச்சியுடன் முடிந்தன.
 வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் அதிக உயர்வுடன் ஆரம்பமாகின. மாருதி சுசூகி, ஐடிசி., உள்ளிட்ட பல முன்னணி பங்குகள் உயர்ந்ததன் எதிரொலியாக  வர்த்தகம் நாள் முழுக்க உயர்வுடன் முடிந்தன.
 நேற்றைய நிப்டி 94 புள்ளிகள் உயர்வுடன்  9615 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 129  புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9635  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டாடா மோட்டார்ஸ் பங்குகளை விற்கிறது டாடா ஸ்டீல்
டாடா குழும நிறுவனங்களின் பங்குதாரர் பட்டியலை சீர் செய்ய தாய் நிறுவனமான டாடா சன்ஸ் முடிவெடுத்திருக்கிறது. இதன்படி ஒரு டாடா நிறுவனத்தில் மற்றொரு டாடா நிறுவனத்தின் பங்குகள் இருக்கும் பட்சத்தில் அந்த பங்குகளை வாங்க டாடா சன்ஸ் முடிவெடுத்திருக்கிறது.
இதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஸ்டீல் நிறு வனம் 2.85% பங்குகளை வைத் திருக்கிறது. இந்த பங்குகளை ஜூன் 23 அல்லது அதன் பிறகு டாடா சன்ஸ் வாங்கிக்கொள்ளும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தில் டாடா சன்ஸ் 28.2 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. டாடா ஸ்டீல் வசம் இருக்கும் 2.85 சதவீத பங்குகளை வாங்கும் பட்சத்தில் டாடா சன்ஸ் வசம் 31.06 சதவீத பங்குகள் இருக்கும். வெள்ளிக்கிழமை 455.75 ரூபாயில் டாடா மோட்டார்ஸின் வர்த்தகம் முடிந்தது. எந்த விலைக்கு டாடா சன்ஸ் வாங்குகிறது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதேபோல டாடா ஸ்டீல் நிறுவனத்தில் 0.46 சதவீத பங்குகளை டாடா மோட்டார்ஸ் வைத்திருக்கிறது.
காலாண்டு முடிவுகள்: 
ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு வருவாய் ரூ.10,725 கோடி.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கனடா நாட்டைச் சேர்ந்த, பேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு. இந்நிறுவனம், பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 701.90 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 507.50 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனம் உள்நாட்டில் வசூலித்த மொத்த பிரீமியம் வருவாய், 32.6 சதவீதம் உயர்ந்து, 10 ஆயிரத்து, 725.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 
இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், 2016 – 17ம் ஆண்டில், 1.77 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 1.58 கோடியாக குறைந்திருந்தது. வாடிக்கையாளர் விரும்பும் வகையில், புதிய காப்பீட்டு திட்டங்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்படும். 
மாருதி நிகர லாபம் 16% உயர்வு
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 15.8 சதவீதம் உயர்ந்து ரூ.1,709 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,476 கோடியாக நிகர லாபம் இருந்தது. விற்பனை உயர்ந்தது, முழு உற்பத்தி திறனை எட்டியது, செலவுகளை குறைத்தது உள்ளிட்ட பல வகையாக நடவடிக்கைகளை எடுத்ததால் நிகர லாபம் உயர்ந்திருப்பதாக மாருதி தெரிவித்திருக்கிறது. நிகர விற்பனை 20.3 சதவீதம் உயர்ந்து ரூ.18,005 கோடியாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 38 சதவீதம் உயர்ந்து ரூ.7,337 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதேபோல நிகர விற்பனை 18.5 சதவீதம் உயர்ந்து ரூ.66,909 கோடியாக இருக்கிறது. ஒரு பங்குக்கு 75 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 40 சதவீதம் உயர்ந்து ரூ.976 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.695 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் 9.9 சதவீதமாக உயர்ந்து ரூ.5,434 கோடியாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் ரூ.4,947 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வாராக் கடன் சிறிதளவு உயர்ந்திருக் கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் 2.36 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன், தற்போது 2.59 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 1.06 சதவீதத்தில் இருந்து 1.26 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ 3,411 கோடியாக இருக்கிறது. ஒரு பங்குக்கு 0.60 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை வழங்கி இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9565,9513
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9644,9674
04 july details
spilits
-----
DIVIDENTS
----
results
--------
bonus
------

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 144000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM