** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 12 September 2017

12/09/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 71 புள்ளிகள் உயர்வுடன் 10006 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 259 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 10036 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் பொதுப்பங்கு வெளியிட (ஐபிஓ) முடிவு செய்திருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் ரூ.5,700 கோடியைத் திரட்ட நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. ஒரு பங்கின் விலையாக ரூ.651-ரூ.661 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.30,000 கோடி என கணிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இந்த ஐபிஓவில் முதலீடு செய்யலாம். பொதுகாப்பீட்டு துறையில் ஐபிஓ வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்.

இந்த நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேர்பாக்ஸ் ஹோல்டிங்க்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் பெரும்பாலான பங்குகளை வைத்திருக்கின்றன. இந்த ஐபிஓ மூலம் மொத்தம் 8.6 கோடி பங்குகள் விற்கப்படுகின்றன. இதில் 3 கோடி பங்குகளை (7% பங்குகள்) ஐசிஐசிஐ வங்கி விற்கிறது. இதன் மூலம் ரூ.2,099 கோடி திரட்ட ஐசிஐசிஐ வங்கி திரட்ட திட்டமிட்டிருக்கிறது. இந்த ஐபிஓவுக்கு பிறகு காப்பீட்டு நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு 62.95 சதவீதமாக குறையும். பேர்பாக்ஸ் நிறுவனத்தின் பங்கு 21.92 சத வீதத்தில் இருந்து 9.91 சத வீதமாக குறைந்திருக்கிறது.

ஐசிஐசிஐ குழுமத்தில் இருந்து பட்டியலிடப்படும் இரண்டாவது காப்பீட்டு நிறுவனம் இதுவாகும். ஐசிஐசிஐ குழுமத்தை சேர்ந்த ஆயூள் காப்பீட்டு நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ஐபிஓ மூலம் ரூ.6,000 கோடி திரட்டியது.
ஐஓசி நிகர லாபம் 45% சரிவு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 45 சதவீதம் சரிந்து ரூ.4,548 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.8,268 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வசம் இருந்த கையிருப்பு காரணமாக நிகர லாபம் சரிந்திருப்பதாக நிறுவனத்தின் தலைவர் சஞ்ஜீவ் சிங் தெரிவித்தார்.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் 4.32 டாலர் கடந்த ஜூன் காலாண்டில் கிடைத்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் 9.98 டாலர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் காலாண்டில் 2.073 கோடி டன் எரிபொருளை உள்நாட்டு சந்தையிலும், 17.72 லட்சம் டன் எரிபொருளை வெளிநாட்டிலும் விற்றிருக்கிறது. நிறுவனத்தின் வருமானம் ரூ.1,29,418 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,07,670 கோடியாக இருக்கிறது.மார்ச் காலாண்டு முடிவில் ரூ.54,820 கோடியாக இருந்த கடன், ஜூன் காலாண்டில் ரூ.34,922 கோடியாக குறைந்திருக்கிறது.
இந்தியன் வங்கி நிகர லாபம் 21% உயர்வு
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 21.16 % உயர்ந்து ரூ.372.40 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.307.35 கோடியாக இருந்தது. ஜூன் காலாண்டில் ரூ.4,788 கோடியாக மொத்த வருமானம் இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் ரூ.4,512 கோடியாக மொத்த வருமானம் இருந்தது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 6.97 சதவீதத்தில் இருந்து 7.21 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ஆனால் நிகர வாராக்கடன் 4.48 சதவீதத்தில் இருந்து 4.05 சதவீதமாக குறைந்திருக்கிறது. வருங்காலத்தில் மொத்த வாராக்கடனை 7 சதவீதத்துக்குள்ளும், நிகர வாராக்கடனை 3 சதவீதத்துக்குள் குறைக்க இந்தியன் வங்கி திட்டமிட்டிருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு (என்ஐஎம்) 2.73 சதவீதமாக இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9973,9941
நிப்டி ரெசிஷ்டென்ஷ்  10033,10061
12 sep details
spilits
--------
results
future lifestyle
jet airways
divident
deepak fert
container corp
dalmiya bharat
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 156000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM