** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 11 December 2014

பெட்ரோல் விலை குறைந்தால் பெயிண்ட் கம்பெனிக்கும் யோகம் தான்..
கடந்த ஒரு பதிவில் கச்சா என்னைய் குறைவிற்கான காரணங்களைப் பற்றி கட்டுரை எழுதி இருந்தோம். இந்த பகுதியில் பெட்ரோலியம் பொருட்களின் விலை குறைவால் எந்தெந்த துறைகள் பலன் பெறும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே நமது செய்திகளில் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களின் போது OMC என்று சொல்லப்படும் Oil Marketing Companies நிறுவனங்கள் தான் அதிக அளவில் உற்று நோக்கப்படும்.
இந்த பிரிவில் தான் Bharat Petrolium, Hindustan Petrolium, ONGC போன்ற பொது துறை நிறுவனங்கள் வருகின்றன. இவை நேரடியாக எண்ணெய் விலை மாற்றங்களால் பாதிக்கபப்டுவதால் செய்திகளுக்குள் வந்து விடுகின்றன.
ஆனால் கச்சா எண்ணெய் என்பது வெறும் பெட்ரோல், டீஸல் போன்றவற்றை மட்டும் கொண்டிருப்பதல்ல என்பதை +2 புத்தகத்தில் படித்து இருப்போம். ஆமாம். ஒவ்வொரு வெப்பநிலையில் சூடுபடுத்தும் போது கச்சா எண்ணெய் பல வித மூலப் பொருட்களை தருகிறது.
இந்த மூலப் பொருட்கள் தான் பல தொழிற்சாலைகளுக்கு அடிப்படையான ஒன்று. கச்சா எண்ணெய் விலை குறையும் போது இந்த தொழிற்சாலைகளின் லாபம் ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை அதிகரிக்கும்.
அதனால் எல்லாரும் ஒரு இடத்தை உற்றுப் பார்க்கும் போது நாம் மட்டும் ரகசியமாக ஒதுங்கி இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யும் போது ரிடர்ன் கணிசமாக அதிகரிக்கும்.
மேல் உள்ள படத்தில் பார்த்தால் விவரமாக தெரியும். கச்சா எண்ணெய் எத்தனை விதமான பெட்ரோலிய பொருட்களை தருகிறது என்று. இதனை அடிப்படையாக வைத்து எந்த துறைகள் பலன் பெறுகிறது என்பதை பார்ப்போம்.
JET COMPANIESவிமான நிறுவனங்களின் முக்கிய பிரச்சினை எரிபொருள். இதனால் கச்சா எண்ணெய் விலை குறையும் போது இந்த நிறுவனங்கள் நேரடியாக பயன்பெறும். ஜூன்ஜூன்வாலா SPICEJET பங்குகளை வாங்கி குவிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
PAINT COMPANIESபெயிண்ட் தயாரிக்க தேவையான முக்கிய மூலப் பொருள் கச்சா எண்ணையிலிருந்து வருவதால் பெயிண்ட் நிறுவனங்கள் லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
FERTILIZER,PESTICIDESஉரம் மற்றும் பூச்சிகொல்லி நிறுவனங்களின் மூலப் பொருட்கள் விலை குறைவதால் லாப விகிதம் கூட வாய்ப்பு உள்ளது.
INFRA COMPANIESநெடுஞ்சாலை போட தேவையான தார் மூலப் பொருள் விலை குறைவதால் அரசின் நெடுஞ்சாலை துறை காண்ட்ராக்ட் நிறுவனங்களின் செலவு குறையும்.
SHIP COMPANIESவிமானங்களைப் போல் கப்பல் எரிபொருள் செலவும் மிச்சமாவதால் இவையும் பயன் பெறுகின்றன.
ENGINEERING COMPANIESஉராய்வு எண்ணெய் ( LUBRICANT OIL ) விலை குறைவதால் இந்த நிறுவனங்களும் பயன் பெறுகின்றன.
இது போக மருந்து நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள், ரப்பர் நிறுவனங்கள் என்று பல துறையை சார்ந்த நிறுவனங்களும் மறைமுகமாக பயன் பெறும். மேல் உள்ள துறைகள் அதிக அளவில் பயன் பெறுவதால் அவைகளை உற்று நோக்குவது அதிக பலன் தரும்.
இவை எல்லாம் பொதுவான காரணங்களால் பயன் பெறுபவை. ஆனாலும் VALUE INVESTING முறையை பின்பற்றி நிறுவனங்களின் பங்குகளை தேர்ந்தேடுப்பது என்பதும் இங்கு அவசியமான ஒன்று.
செய்தி..டில்லியில்  15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை பயன்படுத்த தடை..

தமிழ்நாட்டுல இந்த தடை வந்தால் 90 சதவீத அரசு பேருந்துகள் காயலான்கடைக்கு தான்  போகனும்.
 உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டம் மனதை வலிமையாக்கும்
கஞ்சத்தனம் பற்றி ஒரு குட்டிக் கதை !!

ஒரு கஞ்சன் தான்சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தான்.தினமும் அந்த இடத்திற்கு சென்று பணத்தை எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவான் ஆனால் மறந்தும் கூட அதிலிருந்து ஏதேனும் எடுத்து செலவு செய்ய மாட்டான்.

அவன் அடிக்கடி அங்கு சென்று வருவதை ஒரு திருடன் கவனித்து ஒரு நாள் அவன் பின்னாலேயே சென்று அவன் பணத்தை புதைத்து வைத்திருக்கும் இடத்தை அறிந்து கொண்டான்.ஒரு நாள் இரவு அங்கு சென்று பணத்தை எல்லாம் எடுத்துச்சென்று விட்டான்.

மறுநாள் கஞ்சன் பார்த்தபோது பணம் காணவில்லை என்றதும்,வாயிலும் வயிற்றிலும் அடித்தக் கொண்டு கதறினான்.அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன்,”நண்பா,வருந்தாதே,பணம் அங்கு இருந்தாலும் நீ அதை செலவிடப் போவதில்லை.

எனவே பணம் அங்கே இருந்தாலும் ஒன்றுதான்:இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.ஒன்று செய்.நீ பணம் வைத்த இடத்திலேயே அந்தப் பணம் இருப்பதாகவே நினைத்துக்கொள்.வீணே வருத்தப்படாதே.”என்றான்.

ஒரு பொருளை உபயோகிக்காவிடில் அது இருந்தாலும் ஒன்றுதான்;இல்லாவிட்டாலும் ஒன்றுதான்
http://panguvarthagaulagam.blogspot.in/
கோயம்புத்தூரில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 32 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 14/12/2014 கோவையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 32 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 800 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்!
வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்ற…த்தை விரட்டி அடித்துவிடலாம்.
ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை.. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.
வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?
வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்.
மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.
மருத்துவ ரீதியான காரணங்கள்:
தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் infection ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும் இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள். அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவுமண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.
வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:
1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.
3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.
4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.
5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.
8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.
9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.
வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை
வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.
சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.
கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.(Mouth odor is caused by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.
இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். குளோசப் டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.
குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி.. !

ஒரு மார்வாடி எப்படி செல்வந்தனாகிறான்???
பிர்லா, கோயங்கா, மித்தல், கன்ஷியாம்தாஸ், ஓஸ்வால், சிங்கானியா, சேத், டால்மியா, பஜாஜ், பொத்தார், பிரமல், ஜுன்ஜுன்வாலா என பல பெயர்களில் உள்ள மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகம் முழுவதும் உள்ளது எனச் சொல்லலாம்.
மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள். இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர். வறண்ட பாலைவனப் பகுதியானதால் வளங்களை சிக்கனமாகத் சேமித்து வாழத்தெரிந்த சமூகம் அது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பரந்து விரிந்து, முதலாம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதும் வணிக உலகில் விஸ்வரூபம் எடுத்தவர்கள் மார்வாடிகள்.
நம் இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் கொடூர வில்லன்கள் அல்லது காமெடியன்களாகத் தான் சேட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் இவர்களை “நம்பள் நாளே வரான். பைசா கேக்கறான். நிம்பள் கொடுக்கிறான்” என்று பேசுவதாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழைக்காமல் ஏழைகளிடம் வட்டிக்காசு வசூலித்து, அவர்கள் ரத்தத்தை உறிஞ்சி வாழ்பவர்கள் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் மிகுந்த வறியவனாய், வந்தேறியாய் வரும் ஒரு மார்வாடி எப்படி செல்வந்தனாகிறான் என்பது யாரும் அறியாத கதை.
அதை விரிவாக அறியும் வாய்ப்பு வந்தது- The Marwaris- from Jagat Seth to the Birlas என்ற நூல் மூலமாக, மார்வாரிகள் பற்றி 50 ஆண்டுகளாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர் தாமஸ் டிம்பெர்க்.
குரு சரண்தாஸ் எழுதிய முன்னுரையே முப்பது பக்கங்கள் என்றாலும் அது ஒரு பிரமாதமான ட்ரெயிலர் என்று சொல்லலாம். 1971-ல் மார்வாடிகளின் வணிக எழுச்சி பற்றி பிஹெச்.டி. ஆய்வாளரான டிம்பெர்க்கை சந்திக்கிறார் குரு சரண்தாஸ். இந்தியாவின் உள் நாட்டு வணிகம் முழுவதையும் மார்வாடிகள் எப்படி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என்று அறிகிறார்.
ஒரு புதிய பொருளை மிக விரைவில் அது பற்றி தெரிந்து கொண்டு அதை வாங்கி, விற்று வணிகம் நடத்தும் இவர்களுக்கு ரிஸ்க் எடுப்பது நிஜமாகவே ரஸ்க் தின்பது போலதான் எனத் தோன்றுகிறது. தந்தி வராத காலத்தில் புறாக்களை வைத்தும், தந்திகளை முதலில் பயன்படுத்தியும், திருட்டுத்தனமாக ரேடியோ கருவிகளை வைத்துக் கொண்டும், லண்டன் பங்குச் சந்தை விலை முதல் உள்ளூர் விலை வரை எல்லாவற்றையும் எப்படி வேகமாக அறியத் துடித்தார்கள் என்று படித்தபோது வியப்பாக இருந்தது.
சேத்தின் வியாபார நிர்வாக வழிமுறைகள் அலாதியானவை. ‘கடி’ என்ற பஞ்சு மெத்தைதான் சேத்தின் அலுவலகம். முனிம் என்கிற கணக்கர்தான் கணக்குகள் எழுதுவார். உள் அறையில் சரக்குகள் இருக்கும். பின் கட்டில் பிராமணர்கள் சமைப்பார்கள்.
புதிதாக வரும் மார்வாடி இளைஞர்களுக்கு அங்கேயே தங்கி, வேலை செய்யும் வசதி செய்து தரப்படுகிறது. முதலில் ஹுண்டி எனும் கணக்கியல் பயிற்சி. பின் சரக்கு பரிமாற்றம். பிறகு ஏதாவது ஒரு கிளையில் வேலை. தனியாக தொழில் செய்ய நினைத்தால் நிதிதாரராக அல்லது பங்குதாரராக சேத்தே உதவி செய்வார்.
முதலாளியின் உள்ளுணர்வு எல்லா முடிவுகளுக்கும் காரணி. நம்பிக்கைதான் வியாபார மந்திரம். கூடி வாழ்தல்தான் பிழைக்கும் வழி என எத்தகைய போட்டி என்றாலும் கூடியே வாழ்தல். எல்லா கணக்கும் அன்றன்றே பைசல் செய்தல். போட்டியாளர், பகையாளி என யாராக இருந்தாலும் கடன் கொடுத்தும் வாங்கியும் தொழில் நடத்துதல் என பிரம்மிக்க வைக்கும் வழிமுறைகள்.
இவர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கும் கடன் வழங்கியிருக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்துக்கும் நிதி வழங்கி யிருக்கிறார்கள். தொழிலில் வரிகள் நெருக்கடி, வெள்ளையரின் சூழ்ச்சி என வரும்போதெல்லாம் பணத்தை நிலத்தில் போட்டு நிலச்சுவான்தார்கள் ஆனார்கள். எந்த புதிய தொழில் வந்தாலும் ஒரு கை பார்த்தார்கள். பிட்ஸ் பிலானி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் என அமைத்து கல்வி அமைப்பிலும் கால் பதித்தார்கள்.
அதிக அளவில் ஜெயின் வம்சம் என்றாலும் இந்து மதத்தின் நீரோட்டத்தில் கலந்தார்கள். மார்வாரி மொழியைக் காட்டிலும் இந்தியை வளர்த்தார்கள். இந்தி-இந்து-இந்தியா என்ற கட்டமைப்பில் மார்வாடிகளின் வணிக நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. பிற்காலத்தில் கலப்பு மணம் புரிந்தாலும் கவனமாய் செல்வம் காத்தார்கள். பெண்கள் மெல்ல படிக்க ஆரம்பித்தார்கள்.
கீதா பிரமல் போன்றவர்கள் பிஸினஸ் குடும்பத்தில் பிறந்து பிஹெச்.டி. செய்தார்கள். ராம் மனோஹர் லோஹியா, கமல்நாத் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தார்கள். லாலு பிரசாத் யாதவின் உலகப் பிரசித்தி பெற்ற ரயில்வே துறை பட்ஜெட்டை தயாரிக்க உதவிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கூட மார்வாடிதான் என்று அறிகையில் அந்த சமூகத்தின் வீச்சு புரிகிறது. புத்தகம் நிறைய எல்லா சேட்டுகளின் பெயர்களும் சொந்தங்களும் அவர்களின் தொழில்களின் வரலாறுகளும் திகட்டத் திகட்டக் கொடுக்கப்படுகின்றன.
உலகமயமாக்கலை தடுக்கும் ராகுல் பஜாஜ் முயற்சிகளும், உலக மயமாக்கத்துக்குப் பிறகு நிர்வாக முறைகளை மாற்றிய குமாரமங்கலம் பிர்லாவின் முயற்சிகளும் அந்த சமூகத்தின் வளைந்து கொடுக்கும் தன்மையை எடுத்துக் காட்டுகிறது.
தற்போது போப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்திய பில்லியனர்களில் நான்கில் ஒரு பங்கு மார்வாடிகள் இருக்கிறார்கள். இவர்கள் இல்லாத தொழில்கள் இல்லை எனச் சொல்லலாம். ஏழாவது தலைமுறை காணும் பிர்லாவை அமெரிக்காவின் போர்ட் அல்லது ராக்பெல்லருடன் ஒப்பிடலாம் என்கிறார் ஆசிரியர்.
மார்வாடியைப் போல பணக்கார வியாபாரியாக என்ன வழி என்று கேட்கையில் ஒரு மார்வாடியே இதை நகைச்சுவையாய் சொல்கிறார்: “ஒரு மார்வாடியின் மகளை கட்டிக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களை பணக்கார வியாபாரியாக மாற்றிக் காட்டுவார்கள்”