** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 14 November 2014

14/11/2014  நிப்டி நிலைகள்...http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நிப்டி 25 புள்ளிகள் குறைந்து 8357 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.தொடர்ந்து மூன்று நாட்களாக உயர்ந்து வந்த நமது சந்தை நேற்று சரிந்தது.
தொடர்ந்து விறுவிறுப்பை கண்டு வந்த நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று திடீரென சுணக்கம் கண்டது.பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்தனர்.
நேற்றைய அமெரிக்க சந்தையான டோவ்ஜோன்ஷ் 40 புள்ளிகளுடன் முடிந்தது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் சிறிய ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.நமது சந்தையும் இன்று 20 புள்ளிகள் உயர்வுடன் 8377 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
நேற்று வெளியான சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை பார்ப்போம்
.
அபோட் லாபம் 42 சதவீதம் உயர்வு
மருந்துப் பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அபோட் இந்தியா நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு லாபம் 41 சதவீதம் அதிகரித்து ரூ. 63.74 கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 45.19 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் 2-ம் காலாண்டு விற்பனை வருமானம் ரூ. 577.42 கோடியாகும்.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ. 444.73 கோடியாக இருந்தது. முதல் அரையாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ. 114.57 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் லாபம் ரூ. 74.90 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் பங்குகள் 0.20 சதவீதம் சரிந்து ரூ. 3,402-க்கு வர்த்தகமானது.

அப்பல்லோ மருத்துவமனை லாபம் ரூ. 91 கோடி
தனியார் மருத்துவமனையில் பிரபலமாகத் திகழும் அப்பல்லோ மருத்துவமனை செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 91.50 கோடி லாபம் ஈட்டி யுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டியதைக் காட்டிலும் 5.17 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு லாபம் ரூ.87 கோடியாக இருந்தது.
மருத்துவமனையின் மொத்த வருமானம் ரூ. 1,152.85 கோடி யாகும். முந்தைய ஆண்டு இதே கால வருமானம் ரூ. 975.07 கோடியாக இருந்தது. இதே காலாண்டில் ரூ. 10 முகமதிப்புள்ள 2,000 முழுவதும் மாற்றத்தக்க டிபெஞ்சர்களை ரூ. 200 கோடிக்கு தனியாருக்கு ஒதுக்கியது. மும்பை பங்குச் சந்தையில் 1.65 சதவீதம் சரிந்து ரூ. 1,143.10-க்கு வர்த்தகமானது.

நஷ்டத்திலிருந்து மீண்டது இந்தியா சிமென்ட்ஸ்
சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 7.49 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக நஷ்டத் திலிருந்து இந்நிறுவனம் லாப பாதைக்குத் திரும்பியுள்ளது.
முந்தைய நிதி ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் ரூ. 22.53 கோடியை நஷ்டமாக சந்தித்தது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் நிறுவனம் எதிர்கொண்ட நஷ்டம் ரூ. 2.96 கோடியாகும். நிறுவனத்தின் வருமானம் ரூ.1,094 கோடியிலிருந்து ரூ. 1,136 கோடியாக அதிகரித் துள்ளது.
இன்று நமது நாட்டின் தொழில்துறை உற்பத்தி பற்றிய முக்கிய டேடா வெளிவருகிறது.

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


 Nasdaq 100 4,213.48 4,228.68 +18.08 +0.43%
 FTSE 100 6,635.45 6,645.90 +24.41 +0.37%
 S&P 500 2,039.33 2,046.18 +1.08 +0.05%
 CAC 40 4,187.95 4,220.74 +8.07 +0.19%
 Dow 30 17,652.79 17,705.48 +40.59 +0.23%
 DAX 9,248.51 9,311.00 +37.55 +0.41%
 Hang Seng 24,030.00 24,076.00 +10.06 +0.04%