உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என பதில் எழுதவும். ஆம் என்றால் நான்கு மதிப்பெண்கள் போடவும். மொத்தத்தைக் கூட்டி எத்தனை மதிப்பெண்கள் என்பதைப்பார்த்தால் உங்கள் மன உளைச்சலின் அளவு எவ்வளவு என்பதை உணரலாம்.
1. 35 வயதிற்கு மேற்பட்டவரா? ஆம்/இல்லை
2. அளவிற்கு அதிகமான எடை உள்ளவரா? ஆம்/இல்லை
3. நகர வாழ்க்கையில் இருப்பவரா? ஆம்/இல்லை
4. மதுப்பழக்கம் உள்ளவரா? ஆம்/இல்லை
5. புகைப்பிடிப்பீர்களா? புகையிலை போடுபவரா? ஆம்/இல்லை
6. காப்பி, டீ போன்ற பானங்கள் நிறைய அருந்துபவரா? ஆம்/இல்லை
7. தினமும் மாத்திரை சாப்பிடுபவரா? ஆம்/இல்லை
8. மாமிச உணவு உண்பவரா? ஆம்/இல்லை
9. முன்கோபம் உள்ளவரா? ஆம்/இல்லை
10. மத நம்பிக்கை இல்லாதவரா? ஆம்/இல்லை
11. திருமண வாழ்வில் திருப்தி இல்லாதவரா? ஆம்/இல்லை
12. திருமணமாகாமல் பெற்றோரை பிரிந்து வாழ்பவரா? ஆம்/இல்லை
13. 6 மணிநேரத்திற்கும் குறைவாகத் தான் தூங்கமுடிகிறதா? ஆம்/இல்லை
14. உடற்பயிற்சி பழக்கமில்லையா? ஆம்/இல்லை
15. பொழுதுபோக்கு அம்சம் இல்லையா? ஆம்/இல்லை
16. தன்னம்பிக்கையின்றி அடிக்கடி விரக்தியடைபவரா? ஆம்/இல்லை
17. நெருங்கிய உறவினர்/ நண்பர் ஆகியவர்களின் இழப்பு
கடந்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட்டதா? ஆம்/இல்லை
18. பதவியிலிருந்து ஓய்வு பெற்றவரா? ஆம்/இல்லை
19. கடன் தொல்லை மிக்கவரா? ஆம்/இல்லை
20. பதுக்கல், கடத்தல், இலஞ்சம் ஆகியவற்றில்
ஈடுபட்டவரா? ஆம்/இல்லை
21. மனச்சுமையில் அதிகமாகும் நோய்கள் உள்ளவரா? ஆம்/இல்லை
(உ.ம். தலைவலி, இரத்தக்கொதிப்பு, வயிற்றுப்புண், மாரடைப்பு)
22. தொழில் இருப்பிடம் ஆகியவற்றை அடிகடி
மாற்றும் நிலையிலிருப்பவரா? ஆம்/இல்லை
23. கிடைக்கும் வருமானத்திற்கு மீறிய செலவு செய்பவரா? ஆம்/இல்லை
24. மேலதிகாரியின் கெடுபிடி மிக்கவரா? ஆம்/இல்லை
25. பணப்புழக்கம் அதிகமான தொழில்
(உம். காசாளர், Finance) நடத்துபவரா? ஆம்/இல்லை
இப்பொழுது உங்களுக்கு எத்தனை பதில்கள் “ஆம்” என்று தெரியும். ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் கொடுத்து மொத்தம் எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடுங்கள்.
25 வரை : மன உளைச்சல் அதிகமில்லை. இயல்பான அளவு இருக்கவேண்டியது தான்.
25 முதல் 50 வரை: மன உளைச்சல் பெருகிக்கொண்டு வருகிறது. குறைக்க வேண்டிய வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
50 முதல் 75 வரை : மன உளைச்சல் உங்களை பாதித்துக்கொண்டிருக்கிறது. தகுந்த ஆலோசனைகள் பெற்று உடனடியாக வாழ்க்கை முறையில் மாற்றம் செய்யவேண்டும்.
75க்கு மேல் – நீங்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருகிறீர்கள். மனநல மருத்தவரைச் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவும்.