** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 9 January 2015

'Success doesn't come within a day' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தெளிவு, திட்டம், முயற்சி, உழைப்பு மற்றும் நேர்மறை எண்ணங்கள் போன்ற அம்சங்களே வெற்றியைத் தீர்மானிக்கின்றது
பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுவது எப்படி?
பெண்களே சூழ்நிலைக்கேற்ப அனுசரிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக உங்கள் நோக்கத்தைக் கைவிட வேண்டும் என்பதில்லை. யாரிடம் பேசும் போதும் வெளிப்படையாகப் பேசுங்கள். ஆனால் முரட்டுத்தனமாக பேசாமல் மென்மையாக பேச வேண்டும்.. துணிவுடன் இருங்கள். ஆனால், எதிர்ப்புணர்வைக் காட்டாதீர்கள்.

தொடர்ந்து கடுமையாக உழையுங்கள்... ஏதாவது ஒன்றில் விசேஷமான திறமை உங்களுக்கு இருக்கும்.
அது என்னவென்று அறிந்து அதில் முயற்சியுடன் ஈடுபடுங்கள்.. எழுத்திலும், பேச்சிலும் திறமையினை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடாதீர்கள்.

அடிப்படைகளையும் விவரங்களையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் திட்டமிட்டு செயல்படுங்கள்.. அதே சமயம் விவரங்களை அலட்சியப் படுத்தாதீர்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள்.

ஏமாளியாகவோ, தலை கர்வத்துடனோ இருக்காதீர்கள். எமனதில் சித்திரம் உருவாக்கி முன்கூட்டியே திட்டமிடுங்கள். உடனடியான எதிர்காலத்தை மறந்து நீண்ட எதிர்காலத்திற்குத் திட்டமிடாதீர்கள். மரியாதைக் குறைவினையோ, வெறுப்பையோ வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

வேலையை நேசியுங்கள். அதுவே முழு திருப்தியை அளிக்கும். முயற்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறிய குழிகள்தான் பெரிய பள்ளங்களாகின்றன. துணிவுடன், நேர்மையுடன் இருங்கள். கஷ்டங்களைக் கடக்க அது உங்களுக்கு உதவும்.
9/1/2015....வெள்ளி..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 132 புள்ளிகள் உயர்வுடன் 8234 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. இந்திய பங்குசந்தைகள் நாள் முழுக்க அதிக ஏற்றத்துடனேயே முடிந்தன.அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட உயர்வு காரணமாக இந்திய பங்குசந்தைகளும் உயர்வுடன் இருந்தன. மேலும் முதலீட்டாளர்களும் முக்கிய நிறுவன பங்குகளை அதிகளவு வாங்கியதால்  வர்த்தகம் நாள் முழுக்க அதிக உயர்வுடன் முடிந்தன௦. கடந்த மூன்று வாரங்களுக்கு பிறகு  சென்செக்ஸ் மற்றும் நிப்டி அதிக எழுச்சி கண்டன.
நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் 2 சதவீதம் 323 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய  சந்தைகளும் 1 சதவிதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் இன்றும் 60 புள்ளிகள் உயர்ந்து 8294 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
009-ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 50 டாலருக்கு கீழே சரிந்திருக்கிறது. ஆறு ஆண்டுகளில் பிரென்ட் கச்சா எண்ணெய் 50 டாலருக்கு கீழ் சரிவது இப்போதுதான். நேற்றைய வர்த்தகத்தின் ஆரம்பத்தில் ஒரு பீப்பாய் 49.92 டாலர் வரை சரிந்தது.
உற்பத்தி இதே அளவில் இருப்பதாலும் தேவையில் எந்த பெரிய மாற்றமும் இல்லாதால் இந்த சரிவு மேலும் தொடரும் என்றே பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது போல தெரியவில்லை. அதனால் ஒரு பீப்பாய் 40 டாலருக்கு கூட செல்லும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,569.96 6,580.82 +150.13 +2.34%
 S&P 500 2,062.09 2,064.08 +36.19 +1.79%
 CAC 40 4,260.19 4,270.11 +147.46 +3.59%
 Dow 30 17,907.87 17,916.04 +323.35 +1.84%
 DAX 9,837.61 9,855.43 +319.43 +3.36%
 Hang Seng 24,040.00 24,081.00 +204.47 +0.86%
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 331: 
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் 
புல்லறி வாண்மை கடை.
 உரை: 
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
Translation: 
Lowest and meanest lore, that bids men trust secure, 
In things that pass away, as things that shall endure!.
Explanation: 
That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).