** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 22 September 2015

22/09/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் வாரத்தின் துவக்க நாளில் வர்த்தகம் சரிவுடன் துவங்கின. சென்செக்ஸ் 200 புள்ளிகளும், நிப்டி 54 புள்ளிகளும் சரிவுடன் துவங்கிய நிலையில், வங்கி உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் அதிரடியாக உயர்ந்ததால் நேற்றைய வர்த்தகம் ஏற்றம் கண்டன, இருப்பினும் வர்த்தகநேர முடிவில் சிறிய சரிவுடன் முடிந்தன. 
நேற்றைய நமது நிப்டி 4 புள்ளிகள் சரிந்து 7977 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 125 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8007 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கூடுதல் வரி வருமானம் வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதற்கு பலனாக கடந்த ஐந்து மாதத்தில் 36,500 கோடி ரூபாய் கூடுதல் தொகை மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. இதில் பெரும் பகுதி பெட்ரோல், டீசல் மூலமாக கிடைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீது கூடுதலாக கலால் வரி விதிக்கப்பட்டதால் மத்திய அரசுக்கு ரூ.30,000 கோடி வருமானம் அதிகமாக கிடைத் துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்த தொகை கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஜனவரி 2015 வரை நான்கு முறை கலால் வரி உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக நடப்பு நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங் களில் கூடுதல் தொகை கிடைத் ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு டன் நிலக்கரிக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை கிளீன் எனர்ஜி செஸ் என்னும் வரி கடந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கிறது.
ஆட்டோமொபைல் மற்றும் கன்ஸ்யூமர் குட்ஸ் துறைக்கு கொடுக்கப்பட்டு வந்த கலால் வரி சலுகை நீக்கப்பட்டதால் கடந்த ஐந்து மாதத்தில் 3,500 கோடி ரூபாய் கூடுதல் வரி வருமானம் கிடைத்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் கலால் வரி வருமானம் 1.02 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடத்தின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது 69.7 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் இதே காலத்தில் 60,663 கோடி ரூபாய் மட்டுமே கலால் வரி வருமான இருந்தது.
மொத்த மறைமுக வரியில் கலால் வரியின் பங்கு 40 சதவீதமாகும். கடந்த ஐந்து மாதத்தில் மறைமுக வரி 2.63 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைவதை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது. இந்த காலத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.75 ரூபாய் அளவுக்கு அதிகரிக் கப்பட்டது.
நிப்டி சப்போர்ட் 7957,7927
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8007,8937
22-Sep-2015Details
Dividends
Anant Raj Ltd
Dalmia Bharat Ltd
Financial Technologies (India) Ltd
Muthoot Finance Ltd
Omaxe Ltd
Rolta India Ltd
SE Investments Ltd
AGM
Balmer Lawrie & Company Ltd
Bharat Heavy Electricals Ltd
Gulf Oil Lubricants India Ltd
Indraprastha Gas Ltd
JK Tyre & Industries Ltd
Shipping Corporation of India Ltd
SJVN Ltd
Tata Teleservices (Maharashtra) Ltd
United Breweries Ltd
EGM
Dena Bank
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 579
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் 
பொறுத்தாற்றும் பண்பே தலை.
 உரை:
அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.
Translation:
To smile on those that vex, with kindly face, 
Enduring long, is most excelling grace.
Explanation:
Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.