** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday 27 June 2015

வாட்ஸ் அப் வாழ்க்கை..........

தொழில்நுட்ப வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்தும் இளைஞர்கள் குறித்துதான், இன்றைய பெற்றோர்கள் அதிகம் கவலைகொள்ள வேண்டியிருக்கிறது.
குறிப்பாக, கல்லூரி மாணவர்கள், தங்களின் படிப்பைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ கவலை கொள்ளாது, எப்போதும் செல்போனும் கையுமாக, மற்ற நண்பர்களோடு ஒப்பிட்டு, அதற்காக அதிக செலவுகள் செய்து, தங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள்.
அலை பேசி இல்லாமல் ஒரு நிமிட நேரம்கூட இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட இன்றைய இளைஞர்கள், அதைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் அதனூடே தங்களின் நாட்களை வீணே கழிக்கிறார்கள்.
இதனால், மற்றவர்களிடம் பழகுவது, கலந்து பேசி உரையாடுவது, எதிர்காலத்தைத் திட்டமிடுவது, மனம்விட்டுப் பேசுவது போன்றவையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது.
பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, பெற்றோர்கள், ஒரு நண்பனைப் போல, பிள்ளைகளின் அன்றாடச் செயல்களை அருகில் இருந்து, உன்னிப்பாகக் கவனித்து, தேவைக்கேற்பத் தக்க அன்பான அறிவுரை வழங்குவது, இரு தரப்பினருக்குமே மிகவும் நல்லது.
எந்த ஒரு தொழில் நுட்பமும் புரிந்து தெரிந்து தேவைக்கு மட்டுமே (நல்ல)உபயோக படுத்தினால் நல்லது..ஆனா கிட்டத்தட்ட போதைக்கு அடிமை ஆனவர்களை நினைவூட்டும் அளவுக்கு (addiction )இப்போதைய சமூகம் இன்டர்நெட் ,டிவி ,சினிமா,செல் போன் ,வித விதமான உணவுகளை கண்ட கடைகளில் தின்பது என்று இருப்பது மிகவும் யோசிக்க வைக்கிறது..மனிதனுக்கு உண்மையிலேயே 6 வது அறிவு என்று ஒன்று உள்ளதா? என்று..
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 494

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து 
துன்னியார் துன்னிச் செயின்.
 உரை:
ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
Translation:
The foes who thought to triumph, find their thoughts were vain, 
If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.
Explanation:
If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them.