** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 31 May 2015

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...!
1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்
2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.
3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.
6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.
7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.
8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.
9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.
10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.
11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு
பெற்று விட்டான் என்பதே.
12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி விடாதீர்கள்.
13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.
14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன்.
15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும்,கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.
16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.
17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.
18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.
19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.
20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.
ஆரோக்கிய வாழ்க்கை வாழ புகைப் பழக்கத்தை விட்டுத் தான் பார்ப்போமே..
டைரியில் குறிச்சு வச்சுக்கோங்க சிகரெட்டை நிறுத்துவதற்கான நாளை இரண்டு வாரங்களுக்கு முன்பே முடிவு செய்து உங்கள் டைரியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் அதற்கான முயற்சியில் இறங்குங்கள். சிகரெட்டை இரண்டு துண்டுகளாக வெட்டி பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள். பின் அவ்வப்போது புகைத்து துாக்கி எறியுங்கள். சிகரெட் தாளில் ஊசியால் பல இடங்களில் ஓட்டை போடுங்கள். பின் ஓட்டை சிகரெட்டை புகைக்கும் போது சிகரெட் விரைவில் கரைந்துவிடும்.புகைக்க ஆசை ஏற்படும் போதெல்லாம் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ள கோயில், தியான மண்டபம், யோகா மையத்திற்கு செல்லுங்கள். பிடித்த உணவுகளை சாப்பிடுங்கள். விரலிடையில் சுருட்டிய தாள் அல்லது பேனாவை எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள். கம்ப்யூட்டரில் பிடித்த விளையாட்டை தனியாக விளையாடலாம். தனி அறையில துாங்கப் போகலாம்.
சில்லென்று தண்ணீர் அல்லது எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். கரலா கட்டை வைத்து உடற்பயிற்சி செய்யலாம். குழந்தைகளுடன் விளையாடலாம். ஆனால், கண்டிப்பாக சாக்லேட், காபி, டீ ஆகியவற்றை உட்கொள்ளாதீர்கள். அவை புகைப்பிடிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்திவிடும்.
ஆரோக்கிய வாழ்க்கை வாழ புகைப் பழக்கத்தை விட்டுத் தான் பார்ப்போமே..
-------------------.-டாக்டர். ஜெ.ஜெயவெங்கடேஷ்

புதிய வாகன மசோதாவின் சிறப்பு :
வெளி நாடுகளில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் இயக்க முடியாது, ஆனால் இந்தியாவில் ஆவணங்கள் இல்லாமல் இயக்க முடிகிறது. ISIS அமைப்பு பாக் வரை காலூன்றிவிட்டது, தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுவதை இந்த மசோதா தடுக்கும்,சரியான ஆவணங்கள் வைத்திருப்போர் ஏன் இதை எதிர்க்க வேண்டும்?
சென்ற வருடம் நான் விற்ற வாகனம் தற்போது யாரிடம் உள்ளதென்று தெரியவில்லை அது தற்போது தீவிரவாதிகளிடம் இருந்தால் எனக்கும் ஆபத்துதான்,இதுபோன்ற இன்னல்களை களையவே தற்போதைய புதிய மசோதா. மேலும் போலி உதிரி பாகங்களினால் ஏற்படும் விபத்து....
வாகனத்தை சற்று பெரிதாக்குகிற உள்ளூர் டிங்கரிங் காரார்கள்.....
எக்ஸ்ட்ரா பிட்டிங் என்ற பெயரில் எமனை வாகனத்தில் ஒட்டுகிற பன்னாடைகள்.....
இப்படி பலரால் ஏற்படுகிற மரணம், விபத்து போன்றவற்றை தனியார், மற்றும் அரசு பொது மருத்துவ மனைகளில் பார்க்க முடிகிறது.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு.
 உரை:
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.
Translation:
Think, and then dare the deed! Who cry, 
'Deed dared, we'll think,' disgraced shall be.
Explanation:
Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly.