** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 3 August 2015

03/08/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது..நேற்றைய நமது நிப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 8532 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 55 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 250 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8542 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பேங்க் ஆப் பரோடா நிகரலாபம் 23% சரிவு
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 23% சரிந்து ரூ.1,052 கோடியாக இருக்கிறது. வாராக்கடன் மற்றும் பணியாளர்களின் சம்பளத்துக்காக அதிக தொகை ஒதுக்கீடு செய்தது ஆகிய காரணங்களால் நிகர லாபம் சரிந்தது.
வங்கியின் மொத்த வருமானம் 4.8 % உயர்ந்து ரூ.12,243 கோடியாக இருக்கிறது. மொத்த வாராக்கடன் 4.13% உயர்ந் திருக்கிறது. 1.58% ஆக இருந்த நிகர வாராக்கடன் இப்போது 2.07% ஆக உயர்ந்திருக்கிறது.
ஐடிசி நிகர லாபம் 3.61% உயர்வு
எப்எம்சிஜி நிறுவனமான ஐடிசி-யின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 3.61 சதவீதம் உயர்ந்து ரூ.2,265 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,186 கோடி ரூபாயாக இருந்தது. எப்எம்சிஜி பொருட்களின் தேவை குறைந்ததன் காரணமாக லாபம் குறைந்ததாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அதே சமயத்தில் நிறுவனத்தின் நிகர விற்பனை 7.18 சதவீதம் சரிந்து முடிந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 9,164 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 8,505 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது..
ஐசிஐசிஐ வங்கி நிகரலாபம் 12% உயர்வு
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 12% உயர்ந்து 2,976 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் லாபம் 2,655 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 14,616 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 15,802 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
வாராக்கடனுக்கு ஒதுக்கீடு செய்த தொகை சிறிது உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 726 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்போது அந்த தொகை 956 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வருடம் ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது மொத்த வாராக்கடன் உயர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 3.05 சதவீதமாக இருந்த வாராக்கடன் இப்போது 3.68 சதவீதமாக இருக்கிறது. இருந்தாலும் கடந்த மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது குறைவாகும். வர்த்தகத்தின் முடிவில் 3.92 சதவீத அளவுக்கு பங்கு உயர்ந்தது.
கேவிபி நிகரலாபம் ரூ.134 கோடி
கரூர் வைஸ்யா வங்கியின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 10 சதவீதம் உயர்ந்து 134 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 122 கோடி ரூபாயாக நிகரலாபம் இருந்தது.
மொத்த வருமானம் 3.8 சதவீதம் உயர்ந்தது. கடந்த ஜூன் காலாண்டில் 1,462 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 1,518 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆனால் வங்கியின் மொத்த வாராக்கடன் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 1.3 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 1.91 சதவீதமாக இருக்கிறது.
அதேபோல நிகர வாராக்கடனும் 0.53 சதவீதத்தில் இருந்து 0.88 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வாராக்கடன் உயர்ந்திருப்பதால் அதற்காக ஒதுக்கீடு செய்த தொகையும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் 86 கோடி ரூபாயாக இருந்த ஒதுக்கீடு இப்போது 117 கோடி ரூபாயாக இருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் 0.07 சதவீதம் அளவுக்கு இந்த பங்கு சரிந்து முடிந்தது.
எல் அண்ட் டி நிகரலாபம் 37% சரிவு
இன்ஜினீயரிங் மற்றும் கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 37 சதவீதம் சரிந்து 606 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 966 கோடி ரூபாயாக நிகரலாபம் இருந்தது.
ஆனால் நிகர விற்பனை 6.7 சதவீதம் உயர்ந்தது. கடந்த வருடம் இதேகாலாண்டில் 18,974 கோடி ரூபாயாக இருந்த விற்பனை இப்போது 20,252 கோடி ரூபாயாக இருக்கிறது. நிறுவனத்தின் மொத்த விற்பனை வெளிநாட்டு விற்பனை 32 சதவீதமாக இருக்கிறது.
இந்த காலாண்டில் 26,376 கோடி ரூபாய்க்கு புதிய ஆர்டர்கள் கிடைத்திருக்கின்றன. இதில் வெளிநாட்டு ஆர்டர்கள் 8,110 கோடி ரூபாய்க்கு உள்ளன. இதுவரை 2,38,976 கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர்கள் உள்ளன. எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தின் ஐபிஒ வெளியிட இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. வர்த்தகத்தின் முடிவில் 0.99 சதவீதம் இந்த பங்கு உயர்ந்து முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 8510,8470
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8570,8600
03-Aug-2015Details
Dividends
Astral Poly Technik Ltd
Bharti Infratel Ltd
CEAT Ltd
Board Meetings
3M India Ltd
Aban Offshore Ltd
Berger Paints India Ltd
Bharat Forge Ltd
Carborundum Universal Ltd
Firstsource Solutions Ltd
Hero MotoCorp Ltd
Himachal Futuristic Communications Ltd
Indiabulls Real Estate Ltd
Mcleod Russel India Ltd
Monsanto India Ltd
NESCO Ltd
Redington India Ltd
United Bank of India
V-Guard Industries Ltd
AGM
Berger Paints India Ltd
Bharat Forge Ltd
Carborundum Universal Ltd
Firstsource Solutions Ltd
NESCO Ltd
NIIT Technologies Ltd
Redington India Ltd
Tata Coffee Ltd
V-Guard Industries Ltd
Voltas Ltd
Results
3M India Ltd
Aban Offshore Ltd
Berger Paints India Ltd
Bharat Forge Ltd
Carborundum Universal Ltd
Firstsource Solutions Ltd
Hero MotoCorp Ltd
Himachal Futuristic Communications Ltd
Indiabulls Real Estate Ltd
Mcleod Russel India Ltd
Monsanto India Ltd
NESCO Ltd
Redington India Ltd
United Bank of India
V-Guard Industries Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 531
இறந்த வெகுளியின் தீதே சிறந்த 
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
 உரை:
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.
Translation:
'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul 
Bring self-forgetfulness than if transcendent wrath control.
Explanation:
More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.