** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday 9 May 2015

நண்பர்கள் கவனத்திற்கு.
===================
வரும் திங்கட்கிழமை(11.05.2015) அன்று நீண்ட தூர வெளியூர் பயணங்களையோ வெளியூர் அலுவல்களையோ மற்ற விஷயங்களுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள் அதை தவிர்த்து விடவோ அல்லது அன்றைய தினத்திற்கு முன்பே முடித்துக்கொள்ளவும். சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாக இருப்பதால் தேவையற்ற பிரச்சனைகள் உங்கள் பயணங்களில் எற்படலாம். எனவே பயணங்களை வெளியூர் அலுவல்களை ரத்து செய்துவிடவும்.
பங்குசந்தையில் வெறும் ஆயிரம் ரூபாய் நீண்ட கால முதலீட்டை 30 வருடங்களில் 50 கோடி ஆக்க முடியுமா? ....முடியும்...எப்படி என்று பாருங்கள் நண்பர்களே ...
உதாரணமாக 1980 களில் ஆயிரம் ரூபாய்க்கு பங்குசந்தையில் விப்ரோ நிறுவன பங்கில் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 50 கோடிக்கும் மேல்...
1980 களில் விப்ரோ நிறுவனம் நூறு ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளாக IPO வெளியிட்டது...அப்போது உங்களது நண்பர்கள், உறவினர்கள், யாராவது ஆயிரம் முதலீடு செய்திருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு 10 விப்ரோ நிறுவன பங்குகள் கிடைத்திருக்கும்..தற்போது அதன் மதிப்பு எவ்வாறு 50 கோடிக்கும் மேலாக மாறி இருக்கும் என்பதை பார்ப்போம் ...
1981 இல் விப்ரோ நிறுவனம் 1 : 1 போனஸ் வழங்கியது அதனால் அதனால் ஏற்கனவே 10 பங்குகள் இருப்பதால் 10 பங்குகளுக்கு 10 பங்குகள் இலவசம் 10 + 10 = 20 (100 ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
1985 இல் விப்ரோ நிறுவனம் மீண்டும் 1 : 1 : போனஸ் வழங்கியது அதனால் ஏற்கனவே 20 பங்குகள் இருப்பதால் 20 பங்குகளுக்கு 20 பங்குகள் இலவசம் தற்போது 20+20 = 40 (100 ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு)
1986 இல் விப்ரோ நிறுவனம் தனது 100 ரூபாய் முக மதிப்பு பங்குகளை 10 ரூபாய் முக மதிப்பு பங்குகளாக மாற்றியது எனவே நம்மிடம் உள்ள 40 நூறு ரூபாய் மிக மதிப்பு பங்குகள் 400 பத்து ரூபாய் முக மதிப்பு பங்குகளாக மாறி இருப்பில் இருக்கும்..
1987 இல் விப்ரோ நிறுவனம் மீண்டும் 1:1 போனஸ் வழங்கியது..எனவே 400+ 400 = 800 (பத்து ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
பின்னர் 1989 இல் விப்ரோ நிறுவனம் மீண்டும் 1:1 போனஸ் வழங்கியது ...எனவே 800+800 = 1600 (பத்து ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
1992 இல் விப்ரோ நிறுவனம் மீண்டும் முதலீட்டாளர்களுக்கு 1:1 போனஸ் வழங்கியது ..எனவே 1600+1600 = 3200 (பத்து ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
1995 இல் விப்ரோ நிறுவனம் மீண்டும் 1;1 போனஸ் வழங்கியது எனவே 3200+3200 = 6400 (பத்து ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
1997 இல் விப்ரோ நிறுவனம் 1:2 போனஸ் வழங்கியது எனவே 6400 +12800 = 19200 (பத்து ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு)
1999 இல் விப்ரோ நிறுவனம் தனது பத்து ரூபாய் முக மதிப்புடைய பங்குகளை 2 ரூபாய் முக மதிப்புடைய பங்குகளாக மாற்றியது ..எனவே இருப்பில் உள்ள 19200 பத்து ரூபாய் முக மதிப்பு பங்குகள் 5 மடங்கு அதிகரித்து 96000 இரண்டு ரூபாய் முக மதிப்புடைய பங்குகளாக மாறி இருப்பில் உள்ளது..
2004 இல் விப்ரோ நிறுவனம் மீண்டும் 1:2 போனஸ் வழங்கியது எனவே 96000 + 192000 = 288000 ( இரண்டு ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
2005 இல் விப்ரோ நிறுவனம் 1:1 போனஸ் வழங்கியது 288000 + 288000 = 576000 (இரண்டு ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
2010 இல் விப்ரோ நிறுவனம் 3:2 என மீண்டும் போனஸ் வழங்கியது 576000+384000 = 960000 (இரண்டு ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
தற்போது விப்ரோ நிறுவன பங்கின் விலை 546 ரூபாய் இருப்பில் உள்ள பங்குகள் 960000
960000 * 546 = 52,41,60,000 ரூபாய் ....இதில் விப்ரோ நிறுவனம் 30 வருடங்களாக முதலீட்டாள ர்களுக்கு வழங்கிய டிவிடென்ட் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை ...அதனையும் சேர்த்தால் தற்போதைய மதிப்பு 60 கோடியை தாண்டும் ...
எனவே பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடு மிக சிறந்த இலாபத்தஈட்டி தரும் என்பதில் ஐயமில்லை 
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 446
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் 
செற்றார் செயக்கிடந்த தில்.
 உரை: 
அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.
Translation: 
The king, who knows to live with worthy men allied, 
Has nought to fear from any foeman's pride.
Explanation: 
There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.