** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 8 December 2016

8/12/2016...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 41 புள்ளிகள் சரிவுடன்  8102 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 297 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 100 புள்ளிகள் உயர்வுடன் 8202 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, ரிசர்வ் வங்கி தன்னுடைய நிதிக்கொள்கையை அறிவித்தது. டெபாசிட்கள் வரத்தொடங்கியதை அடுத்து வட்டி விகிதம் குறைக்கப்படும் என்னும் எதிர்பார்ப்பு இருந்த சூழ்நிலையில் வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. தற்போதைய நிலையில் ரெபோ விகிதம் 6.25 சதவீதமாக இருக்கும்.
புதிதாக அமைக்கப்பட்ட நிதிக்கொள்கை குழு கடந்த செவ்வாய்கிழமை கூடியது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் கூடி வட்டி விகிதம் குறித்த முடிவினை எடுத்தது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த குழு கூடும் இரண்டாவது கூட்டம் இது. நிதிக்கொள்கை குழுவில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் வட்டி விகிதம் தற்போதைய நிலையிலே தொடர வேண்டும் என வாக்களித்தனர்.
மொத்த மதிப்பு கூட்டல் (ஜிவிஏ) வளர்ச்சியும் 7.6 சதவீததில் இருந்து 7.1 சதவீதமாக குறையும் என ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. பண மதிப்பு நீக்கம் காரணமாக மொத்த மதிப்பு கூட்டல் குறையும் என ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. குறுகிய காலத்தில் இரண்டு வகையான பாதிப்புகள் ஏற்பட கூடும். ரீடெய்ல், உணவகம், போக்குவரத்து உள்ளிட்ட பணம் புழக்கம் இடங்கள், முறைப்படுத்தப்படாத இடங்களில் பாதிப்பு இருக்கும். தவிர இதன் காரணமாக இவற்றின் தேவையும் குறையும் என கூறியிருக்கிறது. மேலும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நிதிச்சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கம் காரணமாக நான்காம் காலாண்டு பணவீக்கம் இலக்கை அடையமுடியாமல் போகலாம். அதன் காரணமாகவே வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.
ரிவர்ஸ் ரெபோ விகிதம் மற்றும் ரொக்க கையிறுப்பு விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நிதிக்கொள்கை குழுவின் அடுத்த கூட்டம் நடக்க இருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக வங்கித்துறை வல்லுநர்கள் பலர் தெரிவித்திருக்கின்றனர்.
ரூ.3.81 லட்சம் கோடி
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு சிறிய மதிப்பு ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர்.காந்தி தெரிவித்தார். நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரையிலான கால கட்டத்தில் 3.81 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. 850 கோடி 100 ரூபாய் நோட்டுகள், 180 கோடி 50 ரூபாய் நோட்டுகள், 310 கோடி 20 ரூபாய் நோட்டுகள் 570 கோடி 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
நிப்டி சப்போர்ட் 8120,8055
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8233,8266
8 dec
divident

results
sail
mmtc
nlc
finolex
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் 
பிணிஅன்றோ பீடு நடை.
 உரை:
நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.
Translation:
And is not shame an ornament to men of dignity? 
Without it step of stately pride is piteous thing to see.
Explanation:
The Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).