** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday 3 October 2015

HCL -ஷிவ் நாடார்
 --இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் மாபெரும் சாதனைப் படைத்தவர்..

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில், மாபெரும் சாதனைப் படைத்துவரும் ‘ஷிவ் நாடார்’, ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான’ இந்துஸ்தான் பொறியியல் லிமிடெட்’ (HCL)-இன்  தலைமை செயல் அதிகாரி மற்றும் ‘ஷிவ் நாடார் அறக்கட்டளையின்’ தலைவரும் ஆவார். சாதாரணமாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவராக வளர்ச்சியடைந்த ஷிவ் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைக் காண்போம்.
பிறப்பு: ஜூலை 14,  1945
இடம்: மூலைபொழி (தூத்துக்குடி மாவட்டம்), தமிழ்நாடு, இந்தியா
பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
ஷிவ் நாடார் அவர்கள், 1945  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள “மூலைபொழி” என்ற கிராமத்தில், சிவசுப்ரமணி நாடார் என்பவருக்கும், வாமசுந்தரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
கும்பகோணத்திலுள்ள டவுன் மேல்நிலைப்பள்ளியில், தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கிய ஷிவ் நாடார், மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் தனது உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு கோயமுத்தூரிலுள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பிறகு,1968  ஆம் ஆண்டு தில்லி சென்றார்.
எச்.சி.எல் நிறுவனத்தை உருவாக்குதல்
தன்னுடைய கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு, தில்லிக்கு சென்ற அவர், அங்கு டி.சி.எம் (DCM) லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஒரு பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், ஷிவ் நாடார் சுயமாகத் தொழில் தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். எனவே, தன்னுடன் பணிபுரியும் ஆறு சகப் பணியாளர்களுடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.
1970 ஆம் ஆண்டு, ஐ.பி.எம் இந்தியாவிலிருந்து வெளியேறும்போது, ஷிவ் நாடார் தன்னுடைய எச்.சி.எல் நிறுவனத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். 1982 ஆம் ஆண்டு, எச்.சி.எல் நிறுவனத்தின் முதல் கணினி வெளியிடப்பட்டது. இன்றைய காலகட்டத்தில், எச்.சி.எல் கணினிகள் மற்றும் அலுவலக உபகரணங்களின் வருவாய் 80% பெறுகியுள்ளது. எச்.சி.எல் நிறுவனத்தின் படைப்புகள், இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என கூறலாம். 1980 ஆம் ஆண்டில், எச்.சி.எல், ஐ.டி மென்பொருள் விற்க சிங்கப்பூர் தூரக் கிழக்குக் கணினி நிறுவனத்தை’ திறக்க சர்வதேச சந்தையில் முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்தினார்.
ஷிவ் நாடார் அறக்கட்டளை
தொழில்துறையில் மட்டும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல், பொது பணியிலும் தன்னால் முடிந்த பணிகளை செய்துவருகிறார். 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷிவ் நாடார் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கற்க உதவிகள் செய்து வருகிறார்.
விருதுகளும் பிற பணிகளும்
1996 ல் தனது தந்தையின் பெயரில் ‘எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியை’ சென்னையில் (தமிழ்நாடு) நிறுவினார்.
2007 ல் சென்னை பல்கலைக்கழகம், மென்பொருள் தொழில்நுட்பத்தில் இவரின் வளர்ச்சிக்காக இவருக்கு ‘டாக்டர் பட்டம்’ கொடுத்து கெளரவித்தது.
2008ஆம் ஆண்டில், இந்திய அரசு, தகவல் தொழில்நுட்பத் துறையில், இவரின் மகத்தான பங்களிப்பிற்காக இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’ அளித்து கெளரவித்தது.
2011 ல் கரக்பூரில் உள்ள “இந்திய தொழில்நுட்ப கழக” குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தன்னுடைய வாழ்க்கையில் சரியான பாதையை தேர்தெடுத்து, மிக விரைவில் இலக்கினை அடைந்து, குறுகிய காலத்திற்குள் ஷிவ் நாடார் தனது கடின உழைப்பால் புகழின் உச்சியை அடைந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.
“பானாசோனிக்”  ...............

எட்டு பேர் கொண்ட ஏழைக்குடும்பத்தில், எட்டவதாய்ப் பிறந்த இளைய மகன்.ஒன்பதாவது வயதில் வறுமையின் கொடுமையால், தன் தாயின் கரத்தால், தனியாய் ரயிலிலேற்றி தவிக்க விடப்பட்டவர். பதினைந்து வயதில் ஒசாகா எலெக்டிரிக் கம்பெனியில், வேலையில் சேர்ந்தார்.மிகப்பெரும் கனவுகள் கண்டார். எண்ணங்களே வாழ்க்கை என்பதை உணர்ந்து, தம் இருபத்தி மூன்றாம் வயதில், மடுஷிடா வீட்டு உபயோக எலக்டிரிக் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார். அதுதான் இன்றைய உலக புகழ் பெற்ற 
நிறுவனம். தடைகளை வென்ற அந்த மாமனிதர் மட்சுஷிதா (Konosuke Matsushita)
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 590
சிறப்பறிய ஒற்ற஧ன்கண் செய்யற்க செய்யின் 
புறப்படுத்தான் ஆகும் மறை.
 உரை:
ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.
Translation:
Reward not trusty spy in others' sight, 
Or all the mystery will come to light.
Explanation:
Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.