** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 28 November 2016

💥சோர்வடைந்த உங்கள் மனதை உற்சாகமடைய செய்வது எப்படி?💥
🔵மனிதர்கள் சந்தோசமாகவும் சந்தோசமில்லாமல் இருப்பதற்கும் காரணம் அவர்களுடைய எண்ணம்தான் காரணம்.
🔵அவர்கள் மனதில் இருக்கும் எண்ணத்தை பொறுத்துதான் அவர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி அல்லது கவலை இருக்கும். தோல்வியடைவது போன்ற எண்ணங்களும் கவலைகளும் மனதில் குடியிருந்தால் வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் ஒரு வெறுப்புதான் ஏற்படும்.
🔵மகிழ்ச்சிகரமான எண்ணங்களும் வெற்றியடைவது போன்ற எண்ணங்களும் மனதில் இருந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்கும்.
🔵உங்கள் எண்ணங்களை பொறுத்துதான் உங்கள் வாழ்க்கை இருக்கும்.சந்தோசகரமான வாழ்க்கையும் துக்ககரமான வாழ்க்கையையும் நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள்.
🔵தொலை காட்சியில் பார்க்கும் பாடல்கள் சோகமாக இருந்தால் உங்களுடைய மனது சோக நிலைக்கு தள்ள பட்டு விடுகிறது. வாழ்க்கையே விரக்தியாகிவிட்டது போன்ற நிலையில் இருப்பீர்கள். சோகமான தத்துவம் எல்லாம் அப்போது தான் மனதில் புதிது புதிதாக உருவாகும் பேச்சாகவும் வரும்.
🔵அதைவிடுத்து சந்தோசமான மனதிற்கும் மகிழ்ச்சி தரும் அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த சந்தோசமான பாடலை தொலைகாட்சியில் பார்க்கும்போது உங்கள் நிலை என்னவாக இருக்கும்.
🔵உங்களையும் அறியாமல் கை கால்கள் தாலமிடும் இன்னும் ஒருபடி மேலே போய் நடனம் கூட ஆட செய்யும்.இந்த நிலைமைக்கு என்ன காரணம்?
🔵சந்தோசமான பாடல்களை கேட்டவுடனும் பார்த்தவுடனும் உங்கள் மனதில் சந்தோசமான நிகழ்வுகள் குடி கொண்டு விடுகின்றன.
🔵ஒரு கணம் மட்டும் சிந்தித்து பாருங்கள் என்னுடைய வாழ்க்கை சோகமான வாழ்க்கை. நான் ஈடுபடும் காரியம் எதுவுமே வெற்றியடையாது என்று?
விளைவு என்னவாக இருக்கும் நீங்கள் ஏதோ நரகமான வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டு இருப்பது போன்ற எண்ணம் உருவாகும். யாரை பார்த்தாலும் எரிச்சல் வரும். விரக்தியாக பேச ஆரம்பித்துவிடுவீர்கள்.
🔵அதை விடுத்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நான் தொடங்கிய காரியம் வெற்றியடையும் நிச்சயமாக தோல்வி யடையமட்டேன். அப்படியே தோல்வி அடைந்தாலும் அந்த தோல்வி நிரந்தரமானது அல்ல. அந்த தோல்வி தந்த பாடத்தை ஆராய்ந்து நிச்சயம் அடுத்து வெற்றியடைவேன் என்று எண்ணி பாருங்கள். உடனே உங்கள் மன நிலை ஒரு மகிழ்சிகரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு சந்தோசமான எண்ணத்தில் இருப்பீர்கள்.
🔵உங்களுடைய வாழ்க்கையை சொர்க்கமாகவும் நரகமாகவும் மாற்றுவது உங்களுடைய எண்ணங்கள். தோல்வியடைவது போன்ற எண்ணங்களை தவிர்த்து வெற்றியடைவது போன்ற எண்ணங்களை வளர்த்துகொண்டால்
உங்களுடைய மனதை எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கலாம்.
🔵உங்கள் மனதை சந்தோசமாக வைத்துகொண்டால் உங்கள் வாழ்க்கையும் சந்தோசமானதாக ஆக்கி கொள்ளலாம். உங்கள் மனதில் நல்ல எண்ணங்கள் அன்பு நம்பிக்கை போன்றவை குடியிருந்தால் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையும் சந்தோசமாக இருக்கும்.
🔵உங்கள் மனதில் அன்பு நம்பிக்கை போன்றவற்றை நிரப்பி வைத்து இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்போதும் சந்தோசமாக இருக்கும்.
🔵ஆனால் நீங்கள் நல்ல எண்ணங்களை நினைக்க வேண்டும் நல்ல நிகழ்வுகளை கேட்கவேண்டும் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் உங்கள் மனது உங்களுடன் ஒத்துழைத்தால்தான் உங்களால் நல்ல எண்ணங்களை நினைக்க முடியும் நல்ல நிகழ்வுகளை கேட்க முடியும் பேச முடியும் .பார்க்க முடியும்.
🔵உடல் உறுப்புகளிலேயே மனம் என்பதுதான் வித்தியாசமான உறுப்பாகும்.
வெகுவிரைவில் தன்னுடைய இயல்பான நிலையிலிருந்து மாற கூடிய தன்மை உடையது. ஒரு நொடியில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் உள்ள தூரத்திற்கு உங்களை எடுத்து செல்லும் எதை வேண்டும் என்றாலும் உங்கள் மனத்திரையில் கற்பனை செய்து காட்சிகளாக ஓட செய்யும். அவை நல்லவையாகவும் கெட்டவையாகவும் இருக்கலாம்
🔵முற்றிலும் இது போன்ற கட்டுப்பாடில்லாத மனதை உங்கள் கட்டுபாட்டிற்கு கொண்டுவந்தால்தான் இந்த உலகத்தில் நீங்கள் சாதிக்க நினைக்கும் எந்த ஒரு செயலையும் சாதிக்க முடியும்.
🔵தியானம் என்ற இயற்கை கலையின் மூலமாக உங்கள் மனதை சந்தோசமாக வைத்து நீங்களும் சந்தோசமாகவும் இருக்கலாம்.
28/11/2016... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள்  (நவம்பர் 25) மீண்டும் எழுச்சி பெற்றுள்ளன. சர்வதேச சந்தையில் நேற்று கடுமையான வீழச்சியை சந்தித்த இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தைகளின் உயர்விற்கு இதுவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
நேற்றைய நிப்டி 148 புள்ளிகள் உயர்வுடன் 8114 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 68 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன்  8104 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..

ஸ்பைஸ்ஜெட் நிகர லாபம் 103 சதவீதம் உயர்வு

பட்ஜெட் விமான சேவை நிறுவன மான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு நிகர லாபம் 103 சதவீதம் அதிகரித்துள்ளது. 2016-17 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவு களை ஸ்பைஸ்ஜெட் நேற்று அறிவித்தது
நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டு நிகர லாபம் ரூ. 58.90 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 29 கோடியாக இருந்தது. சந்தையில் போட்டிகள் இருந்தபோதிலும் நடப்பாண்டின் வளர்ச்சி குறைந்த காலாண்டாக இரண்டாவது காலாண்டு அமைந்துள்ளது. எனினும் நிறுவனம் சிறப்பான சேவையையே வெளிப்படுத்தியது. தொடர்ந்து லாபகரமான வளர்ச்சியை நோக்கி கவனம் செலுத்துவோம் என்று நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 11.5% சரிவு
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 11.5 சதவீதம் சரிந்து ரூ.549 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.621 கோடியாக இருந்தது. அதே சமயத்தில் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.13,701 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.14,218 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை 34.6 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.1,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இப்போது ரூ. 2,533 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 13.63 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் மொத்த வாராக்கடன் 6.36 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடன் 3.99 சதவீதத்தில் இருந்து 9.10 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
தேனா வங்கி நிகர நஷ்டம் ரூ.44 கோடி
பொதுத்துறை வங்கியான தேனா வங்கியின் நிகர நஷ்டம் ரூ.44 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.38.70 கோடியாக நிகர லாபம் இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.2,872 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.2,914 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 6.89 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 13.79 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 4.65 சதவீதத்தில் இருந்து 8.93 சதவீதமாக அதிகரித்திருக்கிறது
ரிலையன்ஸ் மொத்த நிகர லாபம் ரூ.7,833 கோடி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 18 சதவீதம் அதிகரித்து ரூ.7,704 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.6,534 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் மொத்த நிகர லாபம் 24 சதவீதம் சரிந்து ரூ.7,833 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.10,314 கோடியாக இருந்தது.
மொத்த வருமானம் ரூ. 66,198 கோடியில் இருந்து ரூ.66,624 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணையை சுத்திகரிப்பு செய்வதற்கு கிடைக்கும் தொகை 10.10 டாலராக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 10.60 டாலர் கிடைத்தது. கடந்த ஜூன் காலாண்டில் ஒரு பேரல் சுத்திகரிப்பதற்கு 11.5 டாலர் கிடைத்தது.
நிறுவனத்தின் வசம் 1,240 கோடி டாலர் ரொக்கம் இருக்கிறது. நிறுவனத்தின் கடன் 2,840 கோடி டாலராகும்.
யெஸ் வங்கி நிகர லாபம் 31% உயர்வு
தனியார் வங்கியான யெஸ் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 31.30 சதவீதம் உயர்ந்து ரூ.801.50 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.610.40 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் ரூ.3,995 கோடியில் இருந்து ரூ.4,982 கோடியாக உயர்ந்திருக்கிறது.
அதேபோல வாராக்கடன் அள வும் உயர்ந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.61 சதவீதத் தில் இருந்து 0.83 சதவீதமாக அதிக ரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.20 சதவீதத்தில் இருந்து 0.29 சதவீதமாக அதிகரித் திருக்கிறது. வாராக் கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையும் ரூ.103 கோடியில் இருந்து ரூ.161 கோடியாக அதிகரித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8070,8020
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8166,8211
28 nov details
divident

result
cox&kings
oil india
hfcl
timken india

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1006
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று 
ஈதல் இயல்பிலா தான்.
 உரை:
தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.
Translation:
Their ample wealth is misery to men of churlish heart, 
Who nought themselves enjoy, and nought to worthy men impart.
Explanation:
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.