** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 9 February 2017

9/1/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
.
நேற்றைய நிப்டி 1 புள்ளிகள்  சரிவுடன்  8769 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 35 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8779 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டாடா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 13 சதவீதம் உயர்ந்து 255 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிகர லாபம் 226 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் மொத்த வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.3,925 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,432 கோடியாக இருந்தது.
வாட்ச் பிரிவின் மூலம் கிடைக்கும் வருமானம் 5.1 சதவீதம் உயர்ந்து ரூ.508 கோடியாக இருக்கிறது. அதேபோல ஜூவல்லரி பிரிவின் வருமானம் 15.4 சதவீதம் உயர்ந்து ரூ.3,255 கோடியாக இருக்கிறது. கண்ணாடி பிரிவின் வருமானம் 12.4 சதவீதம் உயர்ந்து ரூ.90.65 கோடியாக இருக்கிறது.
பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சூழ்நிலையிலும் மூன்றாம் காலாண்டு செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக இருக்கிறது. விழாக்காலத்தில் ஜுவல்லரி மற்றும் வாட்ச் பிரிவு வருமானம் சிறப்பாக இருக்கிறது என டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாஸ்கர் பட் தெரிவித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 4 மடங்கு உயர்வு
பஞ்சாப் நேஷனல் வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 4 மடங்கு உயர்ந்து ரூ.207 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.51.10 கோடியாக நிகர லாபம் இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 4.36 சதவீதம் உயர்ந்து ரூ.14,497 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.13,891 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 8.47 சதவீதத்தில் இருந்து 13.70 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 5.86 சதவீதத்தில் இருந்து 9.09 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை 22.23 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ. 3,775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது ரூ.2,935 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வங்கியின் நிகர வட்டி வரம்பு 2.75 சதவீதத்தில் இருந்து 2.3 சதவீதமாக குறைந்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் 1.6 சதவீதம் இந்த பங்கு உயர்ந்து முடிந்தது.
ஐடிபிஐ வங்கி நஷ்டம் ரூ.2,255 கோடி
பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியின் நிகர நஷ்டம் அதிகரித்து ரூ.2,255 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,183 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது. அதேபோல வங்கியின் மொத்த வருமானமும் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.7,361 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.7,104 கோடியாக சரிந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 9.84 சதவீதத்தில் இருந்து 15.16 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 4.60 சதவீதத்தில் இருந்து 9.61 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வாராக்கடன் மற்றும் இதர செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.3,205 கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,722 கோடியாக இருந்தது.
டிசம்பர் 31 வரை வங்கியின் மொத்த வணிகம் ரூ.5.16 லட்சம் கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.4.43 லட்சம் கோடியாக இருந்தது. இதில் டெபாசிட் 27.06 சதவீதம் ரூ.2.98 லட்சம் கோடியாகும். கடன் 4.31 சதவீதம் உயர்ந்து ரூ.2.19 லட்சம் கோடியாக இருக்கிறது.
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் லாபம் 3 மடங்கு உயர்வு
பொதுத்துறை வங்கியான யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் மூன்று மடங்கு உயர்ந்து ரூ.64 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.17 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு 2,827 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.3,086 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 9.57 சதவீதத்தில் இருந்து 15.98 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. தொகை அடிப்படையில் பார்க்கும் போது ரூ.6,721 கோடியில் இருந்து ரூ.10,845 கோடியாக அதிகரித்திருக்கிறது. நிகர வாராக்கடனும் 10.62 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. தொகை அடிப்படையில் பார்க்கும் போது ரூ.3,965 கோடியில் இருந்து ரூ.6,729 கோடியாக அதிகரித்திருக்கிறது.
நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 52 வார உச்சமாக 29.45 ரூபாயை தொட்டது. வர்த்தகத்தின் முடிவில் 13.85 சதவீதம் உயர்ந்து 27.95 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது
நிப்டி சப்போர்ட் 8725,8680
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8800,8833
9 feb
bonus
-----
divident
ghcl
aegis chem
indiabulls
cummins
ioc
marico
results
abb
andhra bank
auro pharma
bajaj elec
bank of india
bata
bpcl
bliss gvs pharma
bomdying
edelwiss
escorts
gujart fluro
icra
heidleberg
jk tyre
lupin
magma
ncc
nlc
omaxe
onmobile
page ind
powergrid
religare
sci
sail
tvtoday
torrent power
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1071
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
 உரை:
குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.
Translation:
The base resemble men in outward form, I ween;
But counterpart exact to them I've never seen.
Explanation:
The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species).

Image may contain: text