** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 11 September 2017

11/09/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 5 புள்ளிகள் உயர்வுடன் 9935 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 13 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 9975 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் பொதுப்பங்கு வெளியிட (ஐபிஓ) முடிவு செய்திருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் ரூ.5,700 கோடியைத் திரட்ட நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. ஒரு பங்கின் விலையாக ரூ.651-ரூ.661 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.30,000 கோடி என கணிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இந்த ஐபிஓவில் முதலீடு செய்யலாம். பொதுகாப்பீட்டு துறையில் ஐபிஓ வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்.
இந்த நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேர்பாக்ஸ் ஹோல்டிங்க்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் பெரும்பாலான பங்குகளை வைத்திருக்கின்றன. இந்த ஐபிஓ மூலம் மொத்தம் 8.6 கோடி பங்குகள் விற்கப்படுகின்றன. இதில் 3 கோடி பங்குகளை (7% பங்குகள்) ஐசிஐசிஐ வங்கி விற்கிறது. இதன் மூலம் ரூ.2,099 கோடி திரட்ட ஐசிஐசிஐ வங்கி திரட்ட திட்டமிட்டிருக்கிறது. இந்த ஐபிஓவுக்கு பிறகு காப்பீட்டு நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு 62.95 சதவீதமாக குறையும். பேர்பாக்ஸ் நிறுவனத்தின் பங்கு 21.92 சத வீதத்தில் இருந்து 9.91 சத வீதமாக குறைந்திருக்கிறது.
ஐசிஐசிஐ குழுமத்தில் இருந்து பட்டியலிடப்படும் இரண்டாவது காப்பீட்டு நிறுவனம் இதுவாகும். ஐசிஐசிஐ குழுமத்தை சேர்ந்த ஆயூள் காப்பீட்டு நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ஐபிஓ மூலம் ரூ.6,000 கோடி திரட்டியது.
எஸ்பிஐ லாபம் 20 சதவீதம் சரிவு
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஜூன் காலாண்டு லாபம் 20 சதவீதம் சரிந்துள்ளது. கடனுக்கான ஒதுக்கீடு காரணமாக வங்கியின் லாபம் சரிந்துள்ளது.
வங்கியின் நிகர லாபம் ரூ.2,006 கோடியாகும். முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் எஸ்பிஐ ஈட்டிய லாபம் ரூ.2,521 கோடியாக இருந்தது.
வட்டி மூலமான வருவாய் 22 சதவீதம் உயர்ந்து ரூ.17,606 கோடியாக இருந்தது. பிற இனங்கள் மூலமான வருமானம் 11 சதவீதம் உயர்ந்து 8,006 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.
கடனுக்கான ஒதுக்கீடு இரு மடங்கு உயர்ந்து ரூ.12,215 கோடியாக உள்ளது. ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,105 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் லாபம் ரூ.867 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் ஒட்டு மொத்த வாராக் கடன் அளவு ரூ.1.88 லட்சம் கோடியாகும். முந்தைய நிதி ஆண்டு இதே காலத்தில் வங்கியின் வாராக்கடன் ரூ.1.01 லட்சம் கோடியாக இருந்தது.
முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.62,911 கோடியாகும். முந்தைய ஆண்டில் இது ரூ.48,928 கோடி யாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐஓசி நிகர லாபம் 45% சரிவு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 45 சதவீதம் சரிந்து ரூ.4,548 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.8,268 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வசம் இருந்த கையிருப்பு காரணமாக நிகர லாபம் சரிந்திருப்பதாக நிறுவனத்தின் தலைவர் சஞ்ஜீவ் சிங் தெரிவித்தார்.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் 4.32 டாலர் கடந்த ஜூன் காலாண்டில் கிடைத்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் 9.98 டாலர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் காலாண்டில் 2.073 கோடி டன் எரிபொருளை உள்நாட்டு சந்தையிலும், 17.72 லட்சம் டன் எரிபொருளை வெளிநாட்டிலும் விற்றிருக்கிறது. நிறுவனத்தின் வருமானம் ரூ.1,29,418 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,07,670 கோடியாக இருக்கிறது.மார்ச் காலாண்டு முடிவில் ரூ.54,820 கோடியாக இருந்த கடன், ஜூன் காலாண்டில் ரூ.34,922 கோடியாக குறைந்திருக்கிறது.
கேவிபி நிகர லாபம் ரூ.148 கோடி
தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 1 சதவீதம் உயர்ந்து ரூ.147.97 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 146.35 கோடியாக நிகர லாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்து ரூ.1,620 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,547 கோடியாக மொத்த வருமானம் இருந்தது. வாராக்கடன் மற்றும் இதர தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.233 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது
நிப்டி சப்போர்ட் 9910,9888
நிப்டி ரெசிஷ்டென்ஷ்   9961,9988
11 september details
divident
engineersindia
powergrid
tnpl

------
bonus
-----------
results
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 155000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1259
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
 உரை:
ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.
Translation:
'I 'll shun his greeting'; saying thus with pride away I went:
I held him in my arms, for straight I felt my heart relent.
Explanation:
I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!.

Image may contain: text