** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday 5 April 2015

குற்றம் சொல்பவனை குருவுக்கு சமமாக நடத்த வேண்டும். அப்பொழுதுதான் அவனுக்கு மேலும் குற்றம் சொல்வதில் உற்சாகம் உண்டாகும். நாமும் நம் குற்றங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
எத்தனை நிமிடங்கள் பல் தேய்க்கலாம்???
##
காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது.
இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன. பல் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும். அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே, தேய்க்க வேண்டும்.
ஆனால் பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது. சில நிமிடங்களில் பல்தேய்த்து விட வேண்டும்.
பல் தேய்ப்பது மட்டும் முக்கியமல்ல, வாயை நன்கு கொப்பளிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இரவில் படுக்கச் செல்லும் முன்பு, உப்புத்தண்ணீரால், வாயை கொப்பளிப்பது மிகவும் நல்லது. ஈறு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, ஈறுகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்க வேண்டும்.
காய்கறிகள், பழங்களை நன்கு கடித்து மென்று சாப்பிடுவது ஈறுப்பகுதிகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும். சொத்தைப் பல்லை நீக்கி விட்டுத்தான் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்வார்கள். நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதிக்கு இருக்கும் அனைத்து விஷயங்களும் சொத்தைப் பல்லுக்கும் பொருந்தும்.
சாப்பிடும் போது, நன்கு மென்று திண்பதால், உணவில் அதிகளவில் உமிழ்நீர் சேர்ந்து உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அதைபோல சாப்பிட்டதும் வாயை நல்ல தண்ணீரில் கொப்பளித்து, அந்த நீரை துப்பிவிடக் கூடாது. முழுங்கிவிட வேண்டும். இதுவும் செரிமானத்திற்கு உதவி செய்யும்.
அந்த காலத்தில் சாப்பிட்டு முடிந்ததும், வெற்றிலை பாக்கு போடுவார்கள். வெற்றிலைக்கு செரிமானத் திறனும், சளியைப் போக்கும் சக்தியும் உள்ளது. வெற்றிலைப் பாக்குப் போட்டால் அந்த சாறையும் துப்பி விடக் கூடாது.
தாய், தந்தையரில் இருவருக்கோ அல்லது யாரேனும் ஒருவருக்கோ பல் சொத்தை இருந்தால், அவர்களது பிள்ளைக்கும் பல் சொத்தை வரும். அதனை தவிர்க்க முடியாது.
அப்பாவை விட, அம்மாவிற்கு பல் சொத்தை இருந்தால், குழந்தைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன. பற்களுக்கு பச்சை காய்கறிகளை, அதாவது கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றைக் கடித்து மென்று திண்பதால் நல்ல பயிற்சி கிடைக்கும்.
"செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல்    மகிழ்ச்சியில்லை. "
உங்களிடம் பண வசதி இல்லாவிட்டால் கூட பிரச்சனையில்லை. ஒரு விஷயத்தை செய்து விட வேண்டும் என்கிற துடிப்பு இருந்தாலே போதும். நிச்சயமாக அதை செய்து முடித்து விடலாம்.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 413:
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் 
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
 உரை:
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.
Translation:
Who feed their ear with learned teachings rare, 
Are like the happy gods oblations rich who share.
Explanation:
Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.