** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 2 June 2017

2/6/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 5 புள்ளிகள் சரிவுடன் 9616 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 135 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 9676 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
காலாண்டு முடிவுகள்: 
லூபின் நிகர லாபம் 49% சரிவு
மருந்து துறை நிறுவனமான லூபின் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 49 சதவீதம் சரிந்து ரூ.380.21 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.747 கோடியாக இருந்தது.
ஆனால் செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் மொத்த வரு மானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் ரூ.4,197 கோடியில் இருந்து ரூ.4,253 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஒட்டுமொத்த நிதி ஆண்டில் (2016-17) நிகர லாபம் சிறிதளவு உயர்ந்து ரூ.2,557 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.2,260 கோடியாக நிகர லாபம் இருந்தது. கடந்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் ரூ.17,494 கோடியாக இருக்கிறது. முந்தைய 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.14,255 கோடியாக இருந்தது.
ஒரு பங்குக்கு ரூ.7.50 டிவி டெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந் துரை செய்திருக்கிறது. 
என்ஐஐடி நிகர லாபம் 70% உயர்வு
என்ஐஐடி நிறுவனத்தின் நான்காவது காலாண்டு நிகரலாபம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ரூ.30.20 கோடியாக உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் காரணமாக நிகர லாபம் அதிகரித்துள்ளது என நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகிறபோது நிறுவனத்தின் நிகர வருமானம் 51 சதவீதம் உயர்ந்து ரூ.361.50 கோடியாக உள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம் 3 சதவீதம் சரிந்து ரூ.65.1 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் ஆண்டு வருமான வளர்ச்சி 18 சதவீதமாக உள்ளது. 2016-17 ஆண்டில் நிறுவனம் ரூ.1,187.70 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. நிறுவனம் வளர்ச்சி மற்றும் புதுமையை நோக்கமாகக் கொண்ட பல உத்திகளில் முதலீடு செய்துள்ளது என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் பட்வர்தன் கூறியுள்ளார். பணமதிப்பு நீக்கம் மற்றும் அந்நிய செலாவணி இழப்பிலும், கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் மிக சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம் என்றார்.
நெய்வேலி லிக்னைட் கார்ப்ப ரேஷன் (என்எல்சி) நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.8,672 கோடியே 84 லட்சத்துக்கு வர்த்தகம் மேற் கொண்டு ரூ.2,342 கோடியே 20 லட்சத்தை நிகர லாபமாக பெற்றுள்ளது.
என்எல்சி நிறுவனம் நெய்வேலியில் மூன்று, ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சரில் ஒன்று என மொத்தம் 4 திறந்தவெளி பழுப்பு நிலக்கரி சுரங்கங்களை செயல்படுத்தி வருகிறது.
இச்சுரங்கங்கள், ஆண்டுக்கு 3 கோடியே 6 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அதுபோன்று, நெய்வேலியில் நான்கு, பர்சிங்சரில் ஒன்று என மணிக்கு சுமார் 32 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் (3,240 மெகாவாட்) மின் சக்தி உற்பத்தி செய்யும் 5 அனல் மின் நிலையங்களை இந்நிறுவனம் இயக்கி வருகிறது.
மேலும், நெய்வேலியில் 10 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையத்தையும், திருநெல்வேலி மாவட்டம் கழுநீர்குளத்தில் 45 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையத்தையும் செயல்படுத்தி வருகிறது. ஆக, இந்நிறுவனம் மொத்தம், 3,295 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளது.
மேலும் என்எல்சி நிறுவனம், தமிழ்நாடு மின் நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடியில் செயல் படுத்தப்பட்டுவரும் 1,000 மெகா வாட் திறன் கொண்ட நிலக்கரி யில் இயங்கும் அனல்மின் நிலை யத்தையும் இயக்கி வருகிறது.
2016-17-ம் நிதியாண்டில் இந் நிறுவனத்தில் உள்ள அனைத்து சுரங்கங்களிலிருந்தும் 2 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 2,234 கோடியே 5 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி மேற்கொண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 9590,9560
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9640,9666
2 june  details
டிவிடெண்ட்
indianb
results

spilit
-----
BONUS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1174
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா 
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
 உரை: 
தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.
Translation: 
Those eyes have wept till all the fount of tears is dry, 
That brought upon me pain that knows no remedy.
Explanation: 
These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.

Image may contain: text