** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday 27 September 2014

நண்பர்களே   நாளை   28/9/2014 சென்னையில்  நடைபெறுவதாக

 இருந்த நமது 24 வது பங்குசந்தை & பொருள் சந்தை பயிற்சிவகுப்பு

அடுத்த வாரம் 5/10/2014  ஞாயிறு அன்று நடைபெறும்..

மேலும் விபரங்களுக்கு 9842746626,9842799622.
சுகமான சம்பவங்களுடன் நிம்மதியாக வாழ்ந்து முடிப்பதை விட ,

சவாலான பெரிய வெற்றியுடன் வாழ்ந்து காட்டுவதே சிறந்தது....

பங்குசந்தை அறிமுகம்

பங்குசந்தை என்றால் என்ன?

நிறைய பேர்களுக்கு ஷேர் மார்க்கெட்டில் இறங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்கூட, அது புரிந்துகொள்வதற்கு கஷ்டமான விஷயம் என்று நினைத்து ஒதுங்கிவிடுகிறார்கள். இது தவறான எண்ணம்! உண்மையில் ஒரு பள்ளி மாணவன்கூட பங்குச் சந்தை பற்றி எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்!
எல்லா ஊர்களிலும் இருக்கும் காய்கறி மார்க்கெட் போன்றது தான் பங்குச் சந்தையும். காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வார்கள். பங்குச் சந்தையில் ஒரு கம்பெனியின் பங்குகளை விற்பனை செய்வார்கள். காய்கறி மார்க்கெட்டில், 'அரைக் கிலோ கத்திரிக்காய் போடுங்க’ என்று கேட்கிற மாதிரி, '100 அசோக் லேலண்ட் பங்கு கொடுங்க; 100 இந்தியன் பேங்க் கொடுங்க’ என்று வாங்கலாம். பங்குச் சந்தையில் இன்னொரு வசதி, வாங்கிய பங்குகள் வேண்டாம் என்று நினைத்தால் உடனே விற்கவும் செய்யலாம்!
முன்பெல்லாம் காய்கறி வாங்க வேண்டும் என்றால் கடைக்குத்தான் போயாக வேண்டும். ஆனால் இப்போது பெரிய நகரங்களில் ஒரு போன் செய்தாலே நாம் கேட்கிற காய்கறியை நம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்துவிடுகிறார்கள். அது மாதிரிதான் முன்பெல்லாம், பங்குச் சந்தைக்கு நேரடியாகப் போய்த்தான் பங்குகளை வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும். ஆனால் இப்போது நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே பங்குச் சந்தை புரோக்கருக்கு ஒரு போன் செய்தால் போதும்; நமக்குத் தேவையான பங்கை வாங்கித் தந்துவிடுவார், அல்லது விற்றுக் கொடுத்துவிடுவார்.
பங்குச் சந்தை பற்றி மேலும் அறிந்து கொள் வதற்கு முன்பாக, ஷேர் அல்லது பங்கு என்றால் என்ன என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஜூவல்லரி கடை நடத்தும் ஒரு பிஸினஸ்மேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான்கைந்து ஊர்களில் நகைக்கடை இருக்கிறது. கடந்த பல வருடங்களாக அவை லாபகரமாகவும் நடந்து வருகிறது... தரம், வாடிக்கையாளர் சேவை, குறைந்த விலை போன்றவற்றால் உங்கள் தொழிலுக்கு இன்னும் நல்ல வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் பிஸினஸை டெவலப் செய்தால் இன்னும் பெரிய லெவலுக்குப் போய்விடலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் தொழிலை விரிவு படுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது. கையில் அவ்வளவு பணம் இல்லை. கடன் வாங்கி இறங்கவும் விருப்பமில்லை... இதுபோன்ற நிலையில் என்ன செய்வது? ஒன்று செய்யலாம்... யாராவது ஒருவரையோ அல்லது சிலரையோ உங்கள் தொழிலில் பார்ட்னராகச் சேர்த்துக்கொண்டு இறங்கலாம்.
ஆனால், ஒருவரையோ அல்லது ஒரு சிலரையோ பார்ட்னர்களாகக் வைத்துக் கொள்வதைவிட பல பேர்களை பார்ட்னராகச் சேர்த்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம். எப்படி என்கிறீர்களா? ஒருவேளை யாராவது ஒருவரிடம் அதிகப் பங்குகள் இருந்தது என்றால் பின்னாளில் அவர்கள் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் அந்தத் தொழிலை விட்டே வெளியேற வேண்டிய நிலைகூட ஏற்படலாம். அதுவே ஆளுக்குக் கொஞ்சமாக நிறைய பேர்கள் பங்குகளை வைத்திருந்தால் அவர்களால் உங்களுடைய தொழிலுக்கு பெரிய அளவில் சிக்கல்கள் ஏற்படாது. இது போல் இன்னும் பல சௌகரியங்கள் இதில் உள்ளன. (அதற்காக அசௌகரியங்களே இல்லாமல் போய்விடுமா என்ன! அதை பிற்பாடு பார்ப்போம்!)
சரி, நீங்கள் தொழிலை விரிவுபடுத்த பங்கு முதல்* (சிணீஜீவீtணீறீ) திரட்டுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள். தற்போது உங்கள் தொழிலில் உங்களது பங்கு முதல் 8 கோடி (10 முகமதிப்பு* கொண்ட 80 லட்சம் பங்குகளாக இருக்கிறது) என்று வைத்துக் கொள்வோம். மேலும் சில நகரங்களில் கடை ஆரம்பிக்க இன்னும் நாற்பது கோடி தேவைப்படுகிறது. நீங்கள் உங்களது 80 லட்சம் பங்குகளை அப்படியே வைத்துக் கொண்டு, உங்கள் நிறுவனத்தில் புதிதாக 10 முகமதிப்புள்ள, 20 லட்சம் பங்குகளை சந்தையில் சென்று விற்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு நாள் தொழிலில் வெற்றிகரமாக இருந்ததால், பத்து ரூபாய் பங்கை 200 க்கு விற்கிறீர்கள். அதாவது, ஒரு பங்குக்கு 190-ஐ பிரீமியமாக வைத்து விற்கிறீர்கள்!
'இதென்ன கதை? பத்து ரூபாய் பங்கை இருநூறு ரூபாய் கொடுத்து யாராவது வாங்குவார்களா?’ என்று நீங்கள் கேட்கலாம். சாதாரண ஓட்டலில் இரண்டு இட்லி 8. இரண்டு தெரு தாண்டிப் போனால் அந்த பெரிய ஓட்டலில் இரண்டு இட்லி 14. 'அதே இட்லிதானே! எதற்கு 6 அதிகம் கொடுக்க வேண்டும்’ என்று நாம் கேட்பதில்லையே! காரணம், அந்த 6 தான் அந்த ஓட்டலுக்கு நாம் கொடுக்கும் பிரீமியம்! அந்த ஓட்டலில் நாம் இட்லி சாப்பிட வேண்டும் என்றால் அந்த விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இந்த பிரீமியத்தை எவ்வாறு கணக்கிடுகிறார்கள் என்பதை வரும் வாரங்களில் விளக்கமாகப் பார்ப்போம். இப்போதைக்கு, லாபகரமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு கடையை நீங்கள் விற்றால் குட்வில் அல்லது நிந்தம் என்பதை எதிர்பார்ப்பீர்கள் அல்லவா? அது போலத்தான் இந்த 190 பிரீமியமும் என்பதைத் தெரிந்து கொண்டால் போதும்.
ஆக இப்போது உங்கள் நிறுவனத்தில் மொத்தம் ஒரு கோடி (ஏற்கனவே உங்களிடம் இருந்த பங்குகள் 80 லட்சம்+புதிதாக நீங்கள் விற்ற 20 லட்சம் பங்குகள்) பங்குகள் உள்ளன. பொதுமக்களிடம் இப்பங்குகளை விற்றதால், நீங்கள் உங்களது நிறுவனப் பங்குகளை பங்குச் சந்தையில் (என்.எஸ்.இ/பி.எஸ்.இ* போன்ற சந்தையில்) சென்று லிஸ்ட் செய்ய வேண்டும். இம்முறையினால் யார் வேண்டுமானாலும் உங்களது நிறுவனப் பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். இதுதான் ஷேர் அல்லது பங்கு உருவாகும் கதை.

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 24 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 28/9/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 24வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 600 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 236:
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
 உரை:
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.
Translation:
If man you walk the stage, appear adorned with glory's grace;
Save glorious you can shine, 'twere better hide your face.
Explanation:
If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.