** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday 21 August 2016

சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 99000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது

வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்­தியாவருவாய் ரூ.55,915 கோடி.
...................................................................................................................
ஸ்டேட் பாங்க் ஆப் இந்­தியா, கடந்த ஜூன் மாதத்­துடன் முடிந்த காலாண்டில், 1,046 கோடி ரூபாயை மொத்த நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 4,713.57 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலாண்­டு­களில், அந்த வங்­கியின் மொத்த செயல்­பாட்டு வருவாய், 4.04 சத­வீதம் உயர்ந்து, 53 ஆயி­ரத்து, 746.21 கோடி ரூபாயில் இருந்து, 55 ஆயி­ரத்து, 915.09 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
கரூர் வைஸ்யா வங்கிலாபம் ரூ.146 கோடி.
............................................................................................
கரூர் வைஸ்யா வங்கி, கடந்த ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 146.35 கோடி ரூபாயை, தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 134.58 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலத்தில், அந்த வங்­கியின் மொத்த செயல்­பாட்டு வருவாய், 2.12 சத­வீதம் உயர்ந்து, 1,356.34 கோடி ரூபாயில் இருந்து, 1,385.03 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
இன்­போசிஸ் நிறு­வனம்லாபம் ரூ.3,180 கோடி.
...............................................................................................
இன்­போசிஸ் நிறு­வனம், 2016 ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 3,180 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 2,891 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்த நிறு­வ­னத்தின் விற்­பனை, 13.20 சத­வீதம் உயர்ந்து, 12 ஆயி­ரத்து, 738 கோடி ரூபாயில் இருந்து, 14 ஆயி­ரத்து, 420 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
அசோக் லேலண்ட் லாபம் இருமடங்கு உயர்வு.
..........................................................................................................
 நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.4,175.79 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையான ரூ.3,775.29 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 10.6 சதவீத வளர்ச்சியாகும்.நிகர லாபம் ரூ.144.49 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.290.78 கோடியாக இருந்தது. உள்நாட்டில் மோட்டார் வாகனத் துறையின் விற்பனை வளர்ச்சி 14.5 சதவீதம் என்றிருந்த நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை 18.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியின் நிகர லாபம் 61 சதவீதம் சரிந்து ரூ.100 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.257.84 கோடியாக இருந்தது.
பேங்க் ஆப் இந்தியா வாராக்கடனுக்காக அதிக தொகை ஒதுக்கீடு செய்ததால் ரூ.741 கோடி அளவுக்கு நஷ்டமடைந்துள்ளது. வாராக்கடனுக்காக கடந்த வருடம் இதே காலத்தில் 151 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள இந்த வங்கி இப்போது ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஜூன் 30 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக்கடன் 13.38 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 6.80 சதவீதமாக இருந்தது.
பேங்க் ஆப் இந்தியாவை தொடர்ந்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் நஷ்டம் ரூ.600 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.203 கோடி அளவுக்கு நிகர லாபம் ஈட்டி இருந்தது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 580 கோடியாக இருந்த இந்த தொகை இப்போது ரூ.1,543 கோடியாக அதிகரித்திருக்கிறது.
பேங்க் ஆப் மஹாராஷ்டிராவின் ஜூன் காலாண்டு நஷ்டம் ரூ.397.40 கோடியாக இருக்கிறது. இந்த வங்கியும் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை இரு மடங்களவுக்கு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.483 என்ற நிலையில் இருந்து இப்போது ரூ.842 கோடியாக அதிகரித்திருக்கிறது.
தேனா வங்கியின் நஷ்டம் ரூ. 279 கோடி ஆகும். இந்த வங்கியின் மொத்த வாராக்கடன் அளவுக் இரு மடங்காகியுள்ளது. கடந்த வருடம் 6.20 சதவீதத்தில் இருந்து இப்போது 11.88 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. தொகை அடிப்படையில் பார்க்கும் போது ரூ.4,840 கோடியில் இருந்து ரூ.9,636 கோடியாக அதிகரித்திருக்கிறது.
சென்னையைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) முதல் காலாண்டில் ரூ.1,450 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த வங்கி ரூ.14 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கியின் மொத்த வாராக்கடன் 20.48 சதவீதமாக உள்ளது.
அலாகாபாத் வங்கியின் நஷ்டம் 564 கோடியாக அதிகரித்திருக்கிறது. இந்த வங்கி வாராகடனுக்காக ஒதுக் கீடு செய்த தொகை ரூ.854 கோடி யில் இருந்து ரூ.1,337 கோடியாக அதிகரித்திருக்கிறது.


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் 
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
 உரை:
ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
Translation:
No virtuous deed, no seemly wealth, no pleasure, rests 
With them who live obedient to their wives' behests.
Explanation:
From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure.