** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 3 July 2017

3/7/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 16 புள்ளிகள் சரிவுடன் 9520 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 62 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9540 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஏயூ ஸ்மால் பைனான்ஸ் ஐபிஓ: 53 மடங்குக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை
ஏயூ ஸ்மால் பைனான்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு கடந்த வெள்ளிக்கிழமை அன்று முடிவடைந்தது. நிறுவனம் திரட்ட நினைத்த தொகையை விட 53 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. ஆனால் இரண்டாம் நாள் 1.36 மடங்கு அளவுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்தன.
ரூ.1,912 கோடிக்கு, 3,76,95,520 பங்குகளுக்கு வெளியிட நிறுவ னம் திட்டமிட்டது. ஆனால் 2,01,85,67,104 பங்குக்கு விண்ணப் பங்கள் வந்திருக்கின்றன.
நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 78.77 மடங்கு விண்ணப்பங்களும், இதர முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 143.51 மடங்கு விண்ணப்பங்களும், சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 3.4 மடங்கு விண்ணப்பங்களும் வந்தன. இதுதவிர 34 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களிடமிருந்து 563 கோடி நிதி திரட்டியது.
ஒரு பங்கின் விலையாக ரூ.355-358 நிர்ணயம் செய்யப்பட்டது.
சிறிய வங்கி தொடங்குவற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கி அனுமதியை இந்த நிறுவனம் பெற்றது. கடந்த ஏப்ரல் முதல் இந்த நிறுவனத்தின் வங்கி செயல்பாடுகள் தொடங்கின.

சிடிஎஸ்எல்: முதல் நாள் வர்த்தகம் 75% உயர்வு

சிடிஎஸ்எல் நிறுவனத்தின் முதல் நாள் வர்த்தகம் நேற்று தொடங்கியது. ரூ.149-க்கு பங்குகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் முதல் நாள் வர்த்தகத்தில் 75 சதவீதம் உயர்ந்து 261.60 ரூபாயில் முடிவடைந்தது. அதிகபட்சமாக 269.95 ரூபாய் வரை தொட்டது.
கடந்த வாரம் இந்த நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு இருந்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு 170 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
சரக்கு மற்றும் சேவை வரி மீதான ஊகங்கள் காரணமாக ஜூன் மாத வாகன விற்பனை மந்தமாக இருந்தது. மாருதி சுசூகியின் விற்பனை 1.20 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. மாறாக ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் ஜூன் மாத விற்பனை சரிந்திருக்கிறது.
மாருதி சுசூகி ஜூன் மாதத்தில் 93,263 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த 2016-ம் ஆண்டு மே மாதத்தில் 92,133 வாகனங்கள் விற்பனையானது. அதே சமயத்தில் சிறிய ரக கார்களான ஆல்டோ, வேகன்ஆர் உள்ளிட்ட வாகன விற்பனை கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது 7.9 சதவீதம் சரிந்தது.
எர்டிகா, எஸ்-கிராஸ் மற்றும் விடாரா வாகனங்களின் விற்பனை 43 சதவீதம் உயர்ந்தது. கடந்த ஆண்டு இந்த மூன்று மாடலிலும் 9,708 வாகனங்கள் விற்பனை யானது. இந்த ஆண்டு 13,879 வாகனங்கள் விற்பனையானது.
ஹூண்டாய் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 5.6 சதவீதம் சரிந்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 39,807 வாகனங்கள் விற்பனையாகி இருந்த சூழலில் கடந்த ஜூனில் 37,562 வாகனங்கள் மட்டுமே விற்பனையானது. ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்கள் அதிகம் இருந்ததால் வாகன விற்பனை குறைந்ததாக ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குநர் ராகேஷ் வஸ்தாவா கூறினார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தின் பயணிகள் வாகன விற்பனையும் 10 சதவீதம் சரிந்தது. 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 12,482 வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 11,176 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. விற் பனை குறைந்திருப்பது தற்காலிக சூழல்தான். ஒட்டுமொத்தமாக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டை பார்க்கும் போது விற்பனை 11 சதவீதம் உயர்ந்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஜூன் மாத விற்பனையும் 3 சதவீதம் குறைந்து 33,861 ஆக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஏற்றுமதி 54 சதவீதம் சரிந்திருக்கிறது. ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி, ஜைலோ, பொலிரோ மற்றும் வெரிட்டோ ஆகிய மாடல்களின் விற்பனை 5 சதவீதம் குறைந்து 16,170 ஆக இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த மாடல் கார்களின் மொத்த விற்பனை 17,070 ஆகும்.
ஆரம்பகட்ட சவால்களை கடந்துவிட்டால் ஜிஎஸ்டியால், ஆட்டோமொபைல் துறைக்கு நன்மை அதிகமாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்திருக் கிறது.
சன் பார்மா நிகர லாபம் 14% சரிவு
மருந்து துறை நிறுவனமான சன் பார்மாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 14 சதவீதம் சரிந்து ரூ.1,223 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலம் ரூ.1,416 கோடியாக இருக்கிறது.
செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருமானமும் ரூ.7,415 கோடியில் இருந்து ரூ.6,825 கோடியாக சரிந்திருக்கிறது. ஒரு பங்குக்கு ரூ.3.5 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
டாடா குழும நிறுவனங்களின் பங்குதாரர் பட்டியலை சீர் செய்ய தாய் நிறுவனமான டாடா சன்ஸ் முடிவெடுத்திருக்கிறது. இதன்படி ஒரு டாடா நிறுவனத்தில் மற்றொரு டாடா நிறுவனத்தின் பங்குகள் இருக்கும் பட்சத்தில் அந்த பங்குகளை வாங்க டாடா சன்ஸ் முடிவெடுத்திருக்கிறது.
இதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஸ்டீல் நிறு வனம் 2.85% பங்குகளை வைத் திருக்கிறது. இந்த பங்குகளை ஜூன் 23 அல்லது அதன் பிறகு டாடா சன்ஸ் வாங்கிக்கொள்ளும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தில் டாடா சன்ஸ் 28.2 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. டாடா ஸ்டீல் வசம் இருக்கும் 2.85 சதவீத பங்குகளை வாங்கும் பட்சத்தில் டாடா சன்ஸ் வசம் 31.06 சதவீத பங்குகள் இருக்கும். வெள்ளிக்கிழமை 455.75 ரூபாயில் டாடா மோட்டார்ஸின் வர்த்தகம் முடிந்தது. எந்த விலைக்கு டாடா சன்ஸ் வாங்குகிறது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதேபோல டாடா ஸ்டீல் நிறுவனத்தில் 0.46 சதவீத பங்குகளை டாடா மோட்டார்ஸ் வைத்திருக்கிறது.
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் பங்கு வெளியீட்டில் களமிறங்குகிறது
நிப்டி சப்போர்ட் 9470,9420
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9555,9590
3 july details
divident
southbank
fedaralbank
jyothy lab
------
bonus
petronet
results
---------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து 
வாழ்வாரின் வன்கணார் இல்.
 உரை: 
பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.
Translation: 
Who hear from lover's lips no pleasant word from day to day, 
Yet in the world live out their life,- no braver souls than they!.
Explanation: 
There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.
No automatic alt text available.