** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 1 June 2015

பாஸ்போர்ட் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் !
பாஸ்போர்ட் என்பது என்ன?

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு கடவுச்சீட்டு (Passport) அவசியம். இது ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுகிறது. எனவே இடைத்தரகர்களை அணுகாமல் நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க  இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக மற்றும் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?  என்பது குறித்து அறிந்துகொள்வோம்.

பாஸ்போர்ட்டின் வகைகள்:
Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார  நோக்கத்திற்காக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் என நான்குவிதமான பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.

பாஸ்போர்ட் பெறுவதற்கான தகுதிகள்:
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். வயதுவரம்பு இல்லை. சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) பாஸ்போர்ட் எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் பாஸ்போர்ட் வைத்திருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது.  இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே பாஸ்போர்ட் அளிக்கப்படும்.

கட்டண விவரம்:
பாஸ்போர்ட் பெறுவதில் ஆர்டினரி (Ordinary), தட்கல் (Tatkal) என்ற இரண்டு முறைகள் உள்ளன.
10 வருடத்திற்கான 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் – 1000 ரூ
10 வருடத்திற்கான 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் – 1500 ரூ
தொலைந்து போயிருந்தாலோ, டேமேஜ் ஆகியிருந்தாலோ 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் – 2500 ரூ
தொலைந்து போயிருந்தாலோ, டேமேஜ் ஆகியிருந்தாலோ 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் – 3000 ரூ
முகவரி மாற்றம், பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், கணவன்/மனைவி பெயர் சேர்த்தல் போன்றவற்றிற்கு – 1000ரூ
கட்டண விவரங்களை http://passport.gov.in/cpv/FeeStructure.htm இத்தளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.

 பாஸ்போர்ட் பெற எங்கே விண்ணப்பிப்பது?
புதியதாக நிறுவப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா Passport Seva Kendra (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். விண்ணப்பப்படிவத்தை இந்த தளத்திற்கு சென்றும் பதிவிறக்கிக் கொள்ள வேண்டும். சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் நேரில் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம். சென்னையில் உள்ளவர்கள் ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். அப்பாயின்மெண்ட் வாங்குவதற்கும் ஒரு நேரம் உள்ளது. http://passportindia.gov.in/AppOnlineProject/online/appointment இத்தளத்தில் நேரத்தை அறிந்து கொள்ளலாம்.
பெயர் மாற்றம், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுதல் போன்ற சிறு திருத்தங்கள் மேற்கொள்ள, பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துக்கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஃபார்ம் 2 ஐப் பயன்படுத்த வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட் பெற அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் பிறந்த தேதி சான்று ஆகியன தேவை.
அடையாள மற்றும் இருப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இருப்பிடச் சான்றாக ஒருவருடத்திற்கு முன்னர் செலுத்திய மற்றும் கடைசியாக செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் போன்றவற்றின் நகல்களைக் கொடுக்கலாம். இவையெல்லாம் விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டும். மேற்கூறியவற்றில் இரண்டு சான்றுகள் அவசியம் கொடுக்க வேண்டும்.
பிறந்த தேதிச் சான்றுக்குக் கீழ்கூறுவனவற்றில் ஏதேனும் ஒன்று: (அ) விண்ணப்பதாரர் 26.01.89 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்புச் சான்றிதழ். (ஆ) பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ் (இ) கெஜட்டடு (நோட்டரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வழங்கப்படும் சான்று.

வேறு சான்றிதழ்கள்:


10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை எடுத்துச் செல்லவும்.
உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கண்ட அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும்,
மேலும்  திருமணச் சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
பழைய பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்ல வேண்டும்.
எட்டாம் வகுப்புக்குக் குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண்ணப்பிக்கலாம்.  26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.
பாஸ்போர்ட் தொலைந்து போனால்: பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் நிலையத்தில் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதனுடன் தொலைந்த பாஸ்போர்ட்டின் நகல் ஒன்றும் மற்றும் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இதற்கும் கொடுக்க வேண்டும்.
 ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
ஆர்டினரி, தட்கல் என இரு முறைகளிலும் பெறப்படும் பாஸ்போர்ட்டுகள் பத்து ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும். பத்து ஆண்டுகள் முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னாலோ அல்லது பத்தாவது ஆண்டிலோ நீங்கள் அதைப் புதுப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க:
http://passportindia.gov.in/AppOnlineProject/pdf/
New_Online_Appointment_Booking_Process.pdf  இத்தளத்திற்கு சென்று
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எப்படி அனுப்புவது என்ற விவரமும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
உங்கள் விண்ணப்பத்தின் நிலையறிய: http://passportindia.gov.in/AppOnlineProject/statusTracker/
trackStatusInpNew இத்தளத்திற்கு சென்று கேட்கும் விவரங்களைக் கொடுத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம். மேலதிக விவரங்களுக்கு:
அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களைத் தொடர்பு கொள்வதற்கு http://passportindia.gov.in/ AppOnlineProject/locatePSK/locatePFCInp இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் பகுதியை அல்லது ஊரை க்ளிக் செய்தால் தொடர்பு முகவரியையும், தொலைபேசி எண்ணையும் தெரிந்துகொள்ளலாம்.
பாஸ்போர்ட் சேவை மையத் தொலைபேசி எண்: 1800-258-1800
மேலும் விவரங்களை அறிந்துகொள்ள http://passportindia.gov.in இத்தளத்திற்க்குச் செல்லவும்.
01/06/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
. நேற்றைய நமது நிப்டி 115 புள்ளிகள் உயர்ந்து 8433 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 115 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8443 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்ஜினீயரிங் மற்றும் கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 27 சதவீதம் சரிந்து 2,069 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே மார்ச் காலாண்டில் ரூ.2,840 கோடியாக நிகர லாபம் இருந்தது.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரே ஷன் (என்.எல்.சி.) நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 37% உயர்ந்து ரூ.676 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் 494 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. ஆனால் நிறுவனத்தின் மொத்த வருமானம் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் ரூ.1,709 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.1,682 கோடியாக சரிந்திருக்கிறது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 33% சரிந்து ரூ.6,285 கோடியாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 9,389 கோடி ரூபாயாக இருந்ததாக ஐஓசி தெரிவித்தது.
நிப்டி சப்போர்ட் 8390,8345
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8444,8484
01-Jun-2015Details
Dividends
Hero MotoCorp Ltd
AGM
DCB Bank Ltdபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று 
போற்றினும் பொத்துப் படும்.
 உரை:
எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.
Translation:
On no right system if man toil and strive, 
Though many men assist, no work can thrive.
Explanation:
The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.