** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 3 June 2016

3/6/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.

நேற்றைய நிப்டி 39 புள்ளிகள் உயர்ந்து 8218 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 48 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8248 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி மார்ச் காலாண்டில் 5,367 கோடி ரூபாய் அளவுக்கு நஷ் டத்தை சந்தித்திருக்கிறது. வாராக் கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை மிக அதிகமாக இருப்ப தால் நஷ்டம் மிக அதிகமாக இருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 306 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
1990களுக்கு பிறகு உள்ள தகவல்கள் அடிப்படையில் பார்க்கும் போது, பொதுத்துறை வங்கி சந்திக்கும் மிகப்பெரிய காலாண்டு நஷ்டம் இதுவாகும். முன்னதாக கடந்த 2015 டிசம்பர் காலாண்டில் பேங்க் ஆப் பரோடா 3,342 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தே மிக அதிக நஷ்டமாகும். பேங்க் ஆப் பரோடா மார்ச் காலாண்டில் 3,230 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் காலாண்டில் பிஎன்பி வங்கியின் மொத்த வருமானம் 1.3 சதவீதம் சரிந்தது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 13,455 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 13,276 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் காலாண்டில் 3,834 கோடி ரூபாயாக இருந்த ஒதுக்கீட்டு தொகை, இப்போது 10,485 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த 2015-16-ம் நிதி ஆண்டில் 3,974 கோடி ரூபாய் அளவுக்கு பிஎன்பி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டில் 3,061 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 54,301 கோடி ரூபாய் ஆகும். முந்தைய 2014-15-ம் ஆண்டில் 52,203 கோடி ரூபாயாக மொத்த வருமானம் இருந்தது. மார்ச் 31- வரையில் மொத்த வாராக்கடன் 12.90 சதவீதமாக இருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 8.61 சதவீதமாக இருக்கிறது.
நஷ்டம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருந்தாலும் பஞ்சாப் நேஷனல் வங்கிப் பங்கு 3.3 சதவீதம் உயர்ந்து, ரூ.76.20யில் நேற்றைய வர்த்தகம் முடிந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமல்லாமல் பல பொதுத்துறை வங்கிகளும் மார்ச் காலாண்டில் கடும் நஷ்டத்தை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளி யான 9 பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தை சந்தித்திருக்கின்றன. மொத்தம் 14,800 கோடி ரூபாய் அளவுக்கு மார்ச் காலாண்டில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8200,8170
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8248,8275
3 ஜுன் details
டிவிடெண்ட்
SBI

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 89000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு 
அகநட்பு ஒரீஇ விடல்.
 உரை:
பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.
Translation:
When time shall come that foes as friends appear, 
Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear.
Explanation:
When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).