** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 20 September 2015

1.நெஞ்சம் நெகிழ்ந்த பதிவு.................

10 வருடங்களுக்கு முன் வேலூரிலிருந்து +2 தேர்வில், ஒரு பாடத்தில், மாநில முதல் இடம் பிடித்த - ஒரு ஏழை மாணவன் சிவகுமார் அறக்கட்டளையின் பரிசைப்பெற வந்திருந்தான். 5000 ரூ பரிசுத்தொகை பெற்று ஏற்புரை நிகழ்த்தினான்.
எங்கப்பா நான் பொறந்தப்பவே செத்துப்போயிட்டாரு. எங்கம்மா என்னை விட்டுட்டுப் போயி இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிகிட்டாங்க. என் பெரியம்மாதான் என்னை எடுத்து வளத்தாங்க. எங்களுக்கு சொந்த வீடு இல்லை. பொறம்போக்கு எடத்தில குடிசை போட்டு தங்கியிருக்கோம். கரண்ட் எல்லாம் கிடையாது. தெரு விளக்கு வெளிச்சத்திலதான் நான் படிச்சேன். 'ஸ்கூல்ல எப்பவும் நான்தான் அதிக மார்க் வாங்குவேன்.பரிசு வாங்க மேடைக்கு போகும்போது பின்னால கிழிஞ்ச டிராயரை ஒரு கையால மறைச்சிட்டு அடுத்த கையில பரிசு வாங்குவேன். பசங்க எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க. ரொம்ப அவமானமா இருக்கும் .
மெட்ராசில நேத்து ஒரு நடிகர் ரூ5,000/- கொடுத்தாரு. எனக்கு அதுவே போதும். என் கூட படிக்கற அஞ்சாறு பொண்ணுங்க கிழிஞ்ச தாவணி போட்டு பள்ளிக்கு வர்றாங்க. இந்த 5,000/- ரூபாயில அவங்களுக்கு நான் தாவணி வாங்கிட்டுப் போறேன்'- என்றான்.
ஒரு நிமிடம் அனைவரும் ஆடிப் போய்விட்டோம். நிகழ்ச்சிக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் ராஜாராம் ஓடிச்சென்று அந்தச் சிறுவன் ரஜனியைக் கட்டி அணைத்துக்கொண்டார் .
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வாழ்ந்த மண்ணல்லவா !! வறுமையிலும் பரோபகாரம்!!!
2.இது ஆறாம் வகுப்புப் படிக்கும் போது பள்ளி வழிபாட்டுக்குக் கூட்டத்தில் ஒரு ஆசிரியை சொன்ன கதை. இது எந்த ஞானியால் சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை, பலரும் இதைக் கேட்டிருப்பார்கள்.
" ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்றனர், அவனுக்கு அது இருக்கிறது எனக்கு இல்லை' இவ்வாறு சொல்லிக்கொண்டே இருந்தனராம்.. அவரும் பொருமையிழந்து மக்கள் அனைவரையும் வரவழைத்து, " உங்கள் துன்பத்தை எல்லாம் நாளை ஒரு மூட்டையில் கட்டி இந்த இடத்திற்கு எடுத்து வாருங்கள், அவற்றைப் போக்குகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். மறுநாள் மக்கள் அனைவரும் அவரவர் துன்ப மூட்டையை எடுத்துக்கொண்டு கடவுளைப் பார்க்க சென்றனராம். கடவுள் அவர்களிடம் " உங்கள் துன்ப மூட்டையை இங்கு வைத்துவிட்டு வேறு யாருடைய துன்ப மூட்டையாவது எடுத்துச் செல்லுங்கள்" என்று கூறிவிட்டார். மக்களும் அவரவர் மனதில் யாரெல்லாம் 'மகிழ்ச்சியாக வாழ்கின்றனர், நமக்கும் அந்த வாழ்வு கிடைக்காதா' என்று எண்ணி ஏங்கி கொண்டிருந்தனரோ அவர்களது துன்ப மூட்டையை எடுத்து கொண்டு மகிழ்ச்சியாக சென்றுவிட்டனராம். இரண்டே நாட்களில் மக்கள் அனைவரும் கடவுளிடம் திரும்பி வந்து " எனக்கு என் பழைய துன்ப மூட்டையையே கொடுங்கள், அது இதற்கு பரவாயில்லை, குறைந்தது அது எனக்கு பழகிப் போன துன்பம் , இது மிகவும் கடுமையாக இருக்கிறது" என்று சொல்லி தன் பழைய துன்ப மூட்டையே கேட்டனராம்..."
அடுத்தவர்க்குத் துன்பம் இல்லை நம் வாழ்வு தான் சோதனைகள் நிறைந்தது என எண்ணுதல் தவறே. அவரவர்க்கு அவரவர் துன்பம். தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.
3.சீரியல் போகும் பாதை.............
தெய்வ மகள் நாடகத்தில் நம்பிக்கும் காயத்ரிக்கும் நடந்த உரையாடலை நேத்தே பார்த்தாச்சி இன்னிக்கும் ஏண்டா திருப்பி போடுரீங்க .........
குலதெய்வம் நாடகத்துல சின்ன பசங்க பொண்ணுங்களை கடத்துறாங்க .........
பொதுவா எல்லா நாடகத்துலயும் இளம் வயது பொண்டாட்டிகள் புருசனை வாடா போடான்னு தான் கூப்பிடறாங்க...
வம்சத்துல ரோஜா முத்து ,ப்ரியமானவளே வில் அவந்திகா நட்ராஜ்.......
சீரியல் போற பாதை சரியில்லை...
இதுக்கு என்ன முடிவோ?
கொடுமை .......கொடுமை.........
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 577
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் 
கண்ணோட்டம் இன்மையும் இல்.
 உரை:
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.
Translation:
Eyeless are they whose eyes with no benignant lustre shine; 
Who've eyes can never lack the light of grace benign.
Explanation:
Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.