** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday 9 May 2015

பங்குசந்தையில் வெறும் ஆயிரம் ரூபாய் நீண்ட கால முதலீட்டை 30 வருடங்களில் 50 கோடி ஆக்க முடியுமா? ....முடியும்...எப்படி என்று பாருங்கள் நண்பர்களே ...
உதாரணமாக 1980 களில் ஆயிரம் ரூபாய்க்கு பங்குசந்தையில் விப்ரோ நிறுவன பங்கில் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 50 கோடிக்கும் மேல்...
1980 களில் விப்ரோ நிறுவனம் நூறு ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளாக IPO வெளியிட்டது...அப்போது உங்களது நண்பர்கள், உறவினர்கள், யாராவது ஆயிரம் முதலீடு செய்திருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு 10 விப்ரோ நிறுவன பங்குகள் கிடைத்திருக்கும்..தற்போது அதன் மதிப்பு எவ்வாறு 50 கோடிக்கும் மேலாக மாறி இருக்கும் என்பதை பார்ப்போம் ...
1981 இல் விப்ரோ நிறுவனம் 1 : 1 போனஸ் வழங்கியது அதனால் அதனால் ஏற்கனவே 10 பங்குகள் இருப்பதால் 10 பங்குகளுக்கு 10 பங்குகள் இலவசம் 10 + 10 = 20 (100 ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
1985 இல் விப்ரோ நிறுவனம் மீண்டும் 1 : 1 : போனஸ் வழங்கியது அதனால் ஏற்கனவே 20 பங்குகள் இருப்பதால் 20 பங்குகளுக்கு 20 பங்குகள் இலவசம் தற்போது 20+20 = 40 (100 ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு)
1986 இல் விப்ரோ நிறுவனம் தனது 100 ரூபாய் முக மதிப்பு பங்குகளை 10 ரூபாய் முக மதிப்பு பங்குகளாக மாற்றியது எனவே நம்மிடம் உள்ள 40 நூறு ரூபாய் மிக மதிப்பு பங்குகள் 400 பத்து ரூபாய் முக மதிப்பு பங்குகளாக மாறி இருப்பில் இருக்கும்..
1987 இல் விப்ரோ நிறுவனம் மீண்டும் 1:1 போனஸ் வழங்கியது..எனவே 400+ 400 = 800 (பத்து ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
பின்னர் 1989 இல் விப்ரோ நிறுவனம் மீண்டும் 1:1 போனஸ் வழங்கியது ...எனவே 800+800 = 1600 (பத்து ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
1992 இல் விப்ரோ நிறுவனம் மீண்டும் முதலீட்டாளர்களுக்கு 1:1 போனஸ் வழங்கியது ..எனவே 1600+1600 = 3200 (பத்து ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
1995 இல் விப்ரோ நிறுவனம் மீண்டும் 1;1 போனஸ் வழங்கியது எனவே 3200+3200 = 6400 (பத்து ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
1997 இல் விப்ரோ நிறுவனம் 1:2 போனஸ் வழங்கியது எனவே 6400 +12800 = 19200 (பத்து ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு)
1999 இல் விப்ரோ நிறுவனம் தனது பத்து ரூபாய் முக மதிப்புடைய பங்குகளை 2 ரூபாய் முக மதிப்புடைய பங்குகளாக மாற்றியது ..எனவே இருப்பில் உள்ள 19200 பத்து ரூபாய் முக மதிப்பு பங்குகள் 5 மடங்கு அதிகரித்து 96000 இரண்டு ரூபாய் முக மதிப்புடைய பங்குகளாக மாறி இருப்பில் உள்ளது..
2004 இல் விப்ரோ நிறுவனம் மீண்டும் 1:2 போனஸ் வழங்கியது எனவே 96000 + 192000 = 288000 ( இரண்டு ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
2005 இல் விப்ரோ நிறுவனம் 1:1 போனஸ் வழங்கியது 288000 + 288000 = 576000 (இரண்டு ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
2010 இல் விப்ரோ நிறுவனம் 3:2 என மீண்டும் போனஸ் வழங்கியது 576000+384000 = 960000 (இரண்டு ரூபாய் முக மதிப்பு பங்குகள் இருப்பு )
தற்போது விப்ரோ நிறுவன பங்கின் விலை 546 ரூபாய் இருப்பில் உள்ள பங்குகள் 960000
960000 * 546 = 52,41,60,000 ரூபாய் ....இதில் விப்ரோ நிறுவனம் 30 வருடங்களாக முதலீட்டாள ர்களுக்கு வழங்கிய டிவிடென்ட் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை ...அதனையும் சேர்த்தால் தற்போதைய மதிப்பு 60 கோடியை தாண்டும் ...
எனவே பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடு மிக சிறந்த இலாபத்தஈட்டி தரும் என்பதில் ஐயமில்லை