** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 6 April 2015

06/04/2015..திங்கள்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
2015-16ம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான புதனன்று, உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி95 புள்ளிகள் உயர்ந்து 8586 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 65 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 8636என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8600,8550,8500
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8640,8690
ஆர்பிஐ தனது நிதிக் கொள்கையை 7ம் தேதி அறிவிக்க உள்ள நிலையில் வங்கித்துறை பங்குகள் ஏற்றமாக வர்த்தகம் கண்டன.
மார்ச் 2015 உடன் முடிந்த நிதி யாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட தயாராகி வருகின்றன இந்திய ஐடி நிறுவனங் கள்.
முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஏப்ரல் 24 ம் தேதி தனது காலாண்டு முடிவுகளை வெளி யிட உள்ளதாக அறிவித்துள்ளது. மற்றொரு முன்னணி நிறுவனமான டிசிஎஸ் தனது நான்காம் காலாண்டு முடிவுகளை ஏப்ரல் 16ம் தேதி அறிவிக்க உள்ளது.
ஏப்ரல் 24ம் தேதி இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் காலாண்டு முடிவு மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியிட உள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனம் ஏப்ரல் 21ல் தேதி தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது. இந்த நிறுவனம் 2014 ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் 29.8 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. அதுபோல டிசிஎஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமான வளர்ச்சி 31.2 சதவீதமாக இருந்தது.
விப்ரோ நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் தேதியை இன்னும் வெளியிடவில்லை.
06-Apr-2015Details
EGM
Jindal Steel & Power Ltd
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 414:
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு 
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
 உரை:
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.:
Translation:
Though learning none hath he, yet let him hear alway: 
In weakness this shall prove a staff and stay.
Explanation:
Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.



Sunday, 5 April 2015

குற்றம் சொல்பவனை குருவுக்கு சமமாக நடத்த வேண்டும். அப்பொழுதுதான் அவனுக்கு மேலும் குற்றம் சொல்வதில் உற்சாகம் உண்டாகும். நாமும் நம் குற்றங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
எத்தனை நிமிடங்கள் பல் தேய்க்கலாம்???
##
காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது.
இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன. பல் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும். அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே, தேய்க்க வேண்டும்.
ஆனால் பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது. சில நிமிடங்களில் பல்தேய்த்து விட வேண்டும்.
பல் தேய்ப்பது மட்டும் முக்கியமல்ல, வாயை நன்கு கொப்பளிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இரவில் படுக்கச் செல்லும் முன்பு, உப்புத்தண்ணீரால், வாயை கொப்பளிப்பது மிகவும் நல்லது. ஈறு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, ஈறுகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்க வேண்டும்.
காய்கறிகள், பழங்களை நன்கு கடித்து மென்று சாப்பிடுவது ஈறுப்பகுதிகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும். சொத்தைப் பல்லை நீக்கி விட்டுத்தான் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்வார்கள். நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதிக்கு இருக்கும் அனைத்து விஷயங்களும் சொத்தைப் பல்லுக்கும் பொருந்தும்.
சாப்பிடும் போது, நன்கு மென்று திண்பதால், உணவில் அதிகளவில் உமிழ்நீர் சேர்ந்து உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அதைபோல சாப்பிட்டதும் வாயை நல்ல தண்ணீரில் கொப்பளித்து, அந்த நீரை துப்பிவிடக் கூடாது. முழுங்கிவிட வேண்டும். இதுவும் செரிமானத்திற்கு உதவி செய்யும்.
அந்த காலத்தில் சாப்பிட்டு முடிந்ததும், வெற்றிலை பாக்கு போடுவார்கள். வெற்றிலைக்கு செரிமானத் திறனும், சளியைப் போக்கும் சக்தியும் உள்ளது. வெற்றிலைப் பாக்குப் போட்டால் அந்த சாறையும் துப்பி விடக் கூடாது.
தாய், தந்தையரில் இருவருக்கோ அல்லது யாரேனும் ஒருவருக்கோ பல் சொத்தை இருந்தால், அவர்களது பிள்ளைக்கும் பல் சொத்தை வரும். அதனை தவிர்க்க முடியாது.
அப்பாவை விட, அம்மாவிற்கு பல் சொத்தை இருந்தால், குழந்தைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன. பற்களுக்கு பச்சை காய்கறிகளை, அதாவது கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றைக் கடித்து மென்று திண்பதால் நல்ல பயிற்சி கிடைக்கும்.
"செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல்    மகிழ்ச்சியில்லை. "
உங்களிடம் பண வசதி இல்லாவிட்டால் கூட பிரச்சனையில்லை. ஒரு விஷயத்தை செய்து விட வேண்டும் என்கிற துடிப்பு இருந்தாலே போதும். நிச்சயமாக அதை செய்து முடித்து விடலாம்.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 413:
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் 
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
 உரை:
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.
Translation:
Who feed their ear with learned teachings rare, 
Are like the happy gods oblations rich who share.
Explanation:
Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.