** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 27 December 2016

13/12/2016... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 இந்திய பங்குச்சந்தைகள் கடந்த ஒருவாரத்திற்கு மேலாகவே சரிவுடன் காணப்படுகின்றன. வாரத்தின் முதல்நாளான  வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பமாகின. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், லாபநோக்கத்தோடு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும்  வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன. அதிலும் நிப்டி 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது.
நேற்றைய நிப்டி 77 புள்ளிகள் சரிவுடன்  7908 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 14 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7938 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நடப்பு டிசம்பர் மாதத்தில் இது வரை ரூ.22,771 கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக இந்திய கடன் சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது.
டிசம்பர் 1 முதல் 23-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.3,744 கோடி வெளி யேறி இருக்கிறது. இதே கால கட்டத்தில் இந்திய கடன் சந்தை யில் இருந்து ரூ.19,027 கோடி வெளியேறி இருக்கிறது. மொத்தம் ரூ.22,771 கோடி வெளியேறி உள்ளது. அக்டோபர் மாதத்தில் இருந்து அந்நிய முத லீடு தொடர்ந்து வெளியேறி வருகிறது. இந்த ஆண்டில் இது வரை இந்திய பங்குச்சந்தையில் நிகர முதலீடு வந்திருக்கிறது. மாறாக இந்திய கடன் சந்தையில் அதிக தொகை வெளியேறி இருக்கிறது.
இதுவரை இந்திய பங்குச் சந்தைக்கு ரூ.24,998 கோடி அந்நிய முதலீடு வந்துள்ளது. மாறாக இந்திய கடன் சந்தை யில் இருந்து ரூ.43,737 கோடி வெளியேறி இருக்கிறது. இந்திய கடன் சந்தையில் இருந்து வெளியேறிய தொகையில் 92% நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியேறி இருக்கிறது.
ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.44,928 கோடி சரிவு
சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் 10 இடங்களில் இருக்கும் நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரம் ரூ.44,928 கோடி அளவுக்கு சரிந்திருக்கிறது. எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, ஹெச்டிஎப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்போசிஸ், கோல் இந்தியா மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிந்திருக்கிறது. மாறாக டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7877,7847
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7954,8000
27 dec details
spilits

DIVIDENTS

result

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1030
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் 
நல்லாள் இலாத குடி.
 உரை:
வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்.
Translation:
When trouble the foundation saps the house must fall, 
If no strong hand be nigh to prop the tottering wall.
Explanation:
If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune.

 Image may contain: food

Monday, 26 December 2016

26/12/2016... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
கடந்த 7 நாட்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள்,  பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிவிலிருந்து மீள துவங்கின. சென்செக்ஸ் மீண்டும் 26000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. அதே சமயம் நிப்டி, சரிவிலிருந்து மீண்ட போதிலும் 8000 புள்ளிகளுக்கும் கீழாகவே உள்ளது
நேற்றைய நிப்டி 6 புள்ளிகள் உயர்வுடன் 7985 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 14 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7995 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கடந்த ஐந்து வருடங்களில் அதிக லாபத்தை கொடுத்த நிறுவனங்களின் பட்டியலை மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் ஆய்வு மூலம் வெளியிட்டிருக்கிறது. இந்த பட்டி யலில் டிசிஎஸ் நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து நான்காவது வருடமாக டிசிஎஸ் முதல் இடத்தில் இருக்கிறது.
முதல் 100 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.28.4 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்திருக் கிறது. இரண்டாவது இடத்தில் ஹெச்டிஎப்சி வங்கி இருக்கிறது. கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனங்களை இணைத்தல், பிரித்தல், புதிய பங்குகள் வெளி யீடு, பங்குகளை திரும்ப வாங்கு தல் ஆகிய அனைத்து பிரிவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டே இந்த பட்டியல் தயாரிக்கப்பட் டிருப்பதாக மோதிலால் ஆஸ்வால் தெரிவித்திருக்கிறது.
அஜந்தா பார்மா நிறுவனம் வேக மாக வளர்ந்த நிறுவனமாகவும், ஏசியன் பெயின்ட்ஸ் தொடர்ந்து சீராக வளர்ந்து வரும் நிறுவன மாகவும் கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த ஐந்து வருட காலத்தில் அஜந்தா பார்மாவின் சந்தை மதிப்பு 53 மடங்கு உயர்ந்துள்ளது. துறை வாரியாக பார்க்கும் போது கன்ஸ் யூமர் / ரீடெய்ல் ஆகிய துறை இரண்டாவது ஆண்டாக நல்ல வரு மானத்தை கொடுத்திருக்கிறது. மெட்டல் மற்றும் சுரங்கத்துறை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன.
முதல் 100 நிறுவனங்களின் பட்டியலில் ஏழு பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இருக் கின்றன. பிபிசிஎல், ஹெச்பிசிஎல், பெட்ரோநெட் எல்என்ஜி, கான்கர், எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளன.
கடந்த ஐந்து வருடங்களில் சென்செக்ஸ் ஆண்டுக்கு 5 சதவீத வளர்ச்சி மட்டுமே கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த பட்டியலில் உள்ள நிறுவனங்கள் சராசரியாக 18 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. சந்தை எப்போது சரியும் என்று கணிப்பதை விட இது போன்ற பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம் என மோதிலால் ஆஸ்வால் தெரிவித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 7944,7900
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8024,8064
26 dec details
divident
result
bonus
balmer larie
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1029
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
 உரை:
தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.
Translation:
Is not his body vase that various sorrows fill, 
Who would his household screen from every ill?.
Explanation:
Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?.


 Image may contain: food

Saturday, 24 December 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1028
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து 
மானங் கருதக் கெடும்.
 உரை:
தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்.
Translation:
Wait for no season, when you would your house uprear; 
'Twill perish, if you wait supine, or hold your honour dear.
Explanation:
As a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family.

 No automatic alt text available.

Friday, 23 December 2016

23/12/2016... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 82 புள்ளிகள் சரிவுடன் 7979 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 23 புள்ளிகள் சரிர்ந்து  நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7999 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
வங்கிகள், நிதித்துறை, கட்டுமானம், எண்ணெய் மற்றும் உலோக துறை பங்குகள் தொடர்ந்து சரிந்ததே இந்திய பங்குச்சந்தைகள் சரிவிற்கு காரணம்
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை ரூ.67,500 கோடியாக (1,000 கோடி டாலர்) அதிகரிக்கும் என சிட்டி குரூப் தெரிவித்துள்ளது.
சரக்குகள் பிரிவில் வர்த்தகப் பற்றாக் குறை அதிகரித்து வருகிறது. அதேபோல மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ரெமிட்டன்ஸ் குறைந்து வரும் சூழலில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை ரூ.67,500 கோடியாக (1,000 கோடி டாலர்) அதிகரிக்கும் என சிட்டி குரூப் கூறியிருக்கிறது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 340 கோடி டாலராக (சுமார் ரூ. 23,000 கோடி) இருந்தது. கடந்த வருடம் இதே காலத்தை விட 30 கோடி டாலர் (சுமார் ரூ. 2,024 கோடி) அதிகமாகும். பண மதிப்பு நீக்கம் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீடு அதிகம் வெளியே செல்வதற்கு வாய்ப்பு இல்லை என சிட்டி குரூப் கணித்திருக்கிறது.

சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 82 சதவீதம் உயர்ந்து ரூ. 77 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.42 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் 11 சதவீதம் உயர்ந்து ரூ.738 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.660 கோடியாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் 89 சதவீதம் உயர்ந்து ரூ.152 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ.80.67 கோடியாக இருந்தது. அதேபோல முதல் அரையாண்டில் வருமானமும் ரூ.1,292 கோடியில் இருந்து ரூ.1,451 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 1.70 ரூபாய் வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
நேற்று பங்குச்சந்தை சரிந்த போதிலும் இந்த பங்கு 4.5 சதவீதம் உயர்ந்து முடிந்தது. வர்த்தகத்தின் இடையே 9 சதவீதம் உயர்ந்து தன்னுடைய 52 வார உயர்ந்த பட்ச விலையான 355 ரூபாயை தொட்டது.
ஹெச்யுஎல் நிகர லாபம் 11.5% உயர்வு
எப்எம்சிஜி துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) நிறுவனத்தின் நிகர லாபம் 11.5 சதவீதம் உயர்ந்து ரூ.1,095 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் ரூ.982 கோடியாக இருந்தது.
மொத்த வருமானம் 1.57 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.8,348 கோடியாக இருந்தது. இப்போது ரூ.8,480 கோடியாக உயர்ந்திருக்கிறது. சவாலான சந்தையிலும் கூட நிறுவனம் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக தலைவர் ஹரீஷ் மன்வாணி தெரிவித்தார்.
பருவமழை சிறப்பாக இருக் கும் என்ற எதிர்பார்ப்பு இருப்ப தால், விற்பனையில் முன்னேற்றம் இருக்கும் என நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பிபி பாலாஜி தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் 10.6 சதவீதம் உயர்ந்து ரூ.2,269 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.2,051 கோடியாக இருந்தது. மேலும் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.7 வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
இண்டஸ்இந்த் வங்கி
தனியார் துறை வங்கியான இண்டஸ்இந்த் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 25.75 சதவீதம் உயர்ந்து ரூ.704 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.560 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,439 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.3,581 கோடி யாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.77 சதவீதத்தில் இருந்து 0.90 சதவீதமாக அதிகரித் திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.31 சதவீதத்தில் இருந்து 0.37 சதவீதமாக அதிகரித்தது.
வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.214 கோடி யாக அதிகரித்திருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 25.85 சதவீதம் உயர்ந்து ரூ.1,365.64 கோடியாக இருக்கிறது
நிப்டி சப்போர்ட் 7947,7915
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8030,8080
23 dec details
டிவிடெண்ட்

results

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1027
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் 
ஆற்றுவார் மேற்றே பொறை.
 உரை:
போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.
Translation:
The fearless hero bears the brunt amid the warrior throng; 
Amid his kindred so the burthen rests upon the strong.
Explanation:
Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family.

 Image may contain: bird, sky and text