** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 11 November 2014

11/11/2014 ..செவ்வாய்..நிப்டி நிலைகள்.

http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நிப்டி 7 புள்ளிகள் உயர்வுடன் 8344 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ்ஜோன்ஷ் ஏற்றத்தில் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் அரைசதவீதம் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.இன்று நமது நிப்டி 25 புள்ளிகள் உயர்வுடன் 8369 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
நேற்றைய நமது சந்தை புதிய உச்சநிலையை அடைந்தது.
வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, ‘சென்செக்ஸ்’ ஒரு கட்டத்தில், 28,028 புள்ளிகளை எட்டி புதிய சாதனையை தொட்டது. அதேசமயம், ‘நிப்டி’ குறியீட்டு எண் புதிய சாதனை அளவுடன் நிறைவடைந்தது.மத்திய அமைச்சரவையின் விரிவாக்கத்தை அடுத்து, பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் மேலும் விறுவிறுப்படையும் என்ற நிலைப்பாட்டால், பங்கு வர்த்தகம் காலையில் துவங்கியதும் நன்கு இருந்தது. இந்நிலையில், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, எண்ணெய், எரிவாயு பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை, விற்பனை செய்ததையடுத்து, பங்கு வியாபாரம் சுணக்கம் கண்டது.
எனினும், நுகர் பொருட்கள் மற்றும் நுகர்வோர் சாதன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை, முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கியதை அடுத்து, வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8383,8423
நிப்டி சப்போர்ட்              8343,8303,8266

நேற்று பேங்க் ஆப் பரோடா நல்ல உயர்வில் முடிந்தது.என்ன காரணம் என்ன என பார்த்தோமானால் நிதி அமைச்சகத்தின் முடிவு ஆகும்.
பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கை 52 சதவீத அளவுக்குக் குறைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 3 லட்சம் கோடி மூலதன தேவையை பூர்த்தி செய்ய முடியும் என நம்புவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

வங்கிகளின் மூலதன ஆதாரத்தை அதிகரிக்க ரூ. 3 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இத்தொகையைத் திரட்ட பொதுத்துறை வங்கிகளில் அரசுக்கு உள்ள பங்கு அளவை 52 சதவீத அளவுக்குக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விதம் செய்வதன் மூலம் மேலும் அதிக எண்ணிக்கையிலானோருக்கு வங்கிச் சேவையை அளிக்க முடியும் என்று ஜேட்லி குறிப்பிட்டார்.

பொதுத்துறை வங்கிககளாகத் திகழ வேண்டும் என்பதால் அரசின் பங்களிப்பை 51 சதவீதத்துக்குக் கீழாகக் குறைக்கும் திட்டம் ஏதும் கிடையாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். தற்போது பொதுத்துறை வங்கி களில் அரசின் பங்கு 56.26 சதவீதம் முதல் 88.63 சதவீத அளவுக்கு உள்ளது. பாங்க் ஆப் பரோடாவில் குறைந்தபட்சமாக 56.26 சதவீதமும் அதிகபட்ச அளவான 88.63 சதவீதம் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலும் உள்ளது.

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 Dow 30 17,613.74 17,621.87 +39.81 +0.23%
 NASDAQ 100 4,175.95 4,179.98 +15.44 +0.37%
 S&P 500 2,038.26 2,038.70 +6.34 +0.31%
 FTSE 100 6,611.25 6,611.25 +44.01 +0.67%
 CAC 40 4,222.82 4,224.83 +32.93 +0.79%
 DAX 9,351.87 9,351.87 +60.04 +0.65%
 Hang Seng 23,870.00 23,875.00 +125.30 +0.53%