** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 13 November 2014

13/11/2014..வியாழன்.   நிப்டி நிலைகள்..http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நாம் நேற்றைய பதிவில் குறிப்பிட்டபடியே 20 புள்ளிகள் உயர்வுடன் 8383 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.தினமும் உயர்வு தொடர்ந்துகொண்டே உள்ளது.
நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் எந்தவித மாற்றமில்லாமல் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் வர்த்தகமாகிறது.ஆனால் நேற்று முடிந்த ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளது.
நமது சந்தை இன்றும் 20 புள்ளிகள் உயர்வுடன் 8403 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்க்கிறேன்.
கச்சா எண்ணெய் சரிவு நமது சந்தையின் உயர்வுக்கு காரணமாகும்.
அதிக உற்பத்தி, டாலர் பலமடைந்து வருவது ஆகிய காரணங்களால் கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு பிரென்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று சரிந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இடையே 81.83 டாலருக்கு சரிந்தது. கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபருக்கு பிறகு இவ்வளவு அதிகமாக சரிவது இப்போதுதான்.
மேலும் கச்சாஎண்ணெய் 70 டாலர் வரை சரியும் என எதிர்பார்க்கிறேன்.

நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8409,8433
நிப்டி  சப்போர்ட்             8388,8370,8345

அமரராஜா பேட்டரீஸ் லாபம் ரூ. 100 கோடி
அமரராஜா பேட்டரீஸ் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் ரூ. 100.30 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத்தை விட 6 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு நிறுவனத்தின் லாபம் ரூ. 94.58 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வருமானம் 32 சதவீதம் அதிகரித்து ரூ. 1,065 கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 807 கோடியாகும். முதல் அரையாண்டில் நிறுவனத்தின் லாபம் 7.21 சதவீதம் அதிகரித்து ரூ. 206.26 கோடியாக இருந்தது.

பாஷ் நிறுவன லாபம் 30 சதவீதம் உயர்வு
ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை தயாரிக்கும் பாஷ் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 306 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 234.25 கோடியாகும். இந்நிறுவனம் ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலத்தை நிதியாண்டாகக் கணக்கிடுகிறது. இதன்படி இந்நிறுவனம் மூன்றாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை நேற்று மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பியது. நிறுவனத்தின் நிகர வருமானம் 19 சதவீதம் அதிகரித்து ரூ. 2,555.76 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு வருமானம் ரூ. 2,147.09 கோடியாக இருந்தது.

எவரெடி லாபம் 4 மடங்கு அதிகரிப்பு
பேட்டரி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எவரெடி நிறுவனத்தின் லாபம் செப்டம்பர் காலாண்டில் நான்கு மடங்கு உயர்ந்து ரூ. 17.64 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் நிறுவனம் ரூ. 3.7 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது குறிப் பிடத்தக்கது. நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ. 354.29 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டிய வருமானத்தைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். நிறுவனம் செலவைக் குறைக்கும் நடவடிக்கையை எடுத்து ரூ. 10.12 கோடியை மிச்சப்படுத்தியது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ. 7.93 கோடி மிச்சப்படுத்தப்பட்டது.

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 Nasdaq 100 4,195.40 4,199.19 +8.24 +0.20%
 FTSE 100 6,611.04 6,629.33 -16.36 -0.25%
 S&P 500 2,038.25 2,040.33 -1.43 -0.07%
 CAC 40 4,179.96 4,242.62 -64.14 -1.51%
 Dow 30 17,612.20 17,626.71 -2.70 -0.02%
 DAX 9,194.55 9,359.37 -174.48 -1.86%