** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday 6 December 2014

வாங்க தமிழ் பேசுவோம்...

நமது தாய் மொழி தமிழ் . சரி . அதை இன்று எத்தனை பேர் ஒழுங்காக வாசிக்க, படிக்க , எழுத தெரிகிறது . தமிழில் பேசிக் கொண்டு தமிழ் வாசிக்க தெரியாது . இப்போது பிறந்து வளரும் பிள்ளைகளை இங்கிலீஷ் மீடியத்தில தான் நாங்க சேர்ப்போம் என்று விடாப்பிடியாக இருக்கிறார்கள் பெற்றோர் .

கொச்சை தமிழிலும் , ஆங்கிலம் கலந்த தங்கிலீசும் தான் இப்போதைய பிள்ளைகள் பேசுகிறார்கள் . புலம்பெயர்ந்த அங்கு பிறந்த பிள்ளைகள் அங்கத்தைய மொழியையும் கற்று , தமிழ் டியூஷன் போகிறார்கள் . எத்தனை பெற்றோர் அப்படி படிக்க வைக்கிறார்கள் .
நாம் தமிழர் . நமது பிள்ளைகளுக்கு நமது தாய் மொழியையும் கற்றுக் கொடுக்க வேண்டும் . நாம் ஆங்கிலம் கட்டாயம் கற்கத்தான் வேண்டும் . நம் தமிழ் மக்கள் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழிகள் உள்ளன . டட்ச் , பிரெஞ்சு எல்லாம் கற்றாலும் தமிழை பேசவாவது கற்றுக் கொள்ளுங்கள் . 

வாங்க தமிழ் கற்க ஏற்ற தளங்கள் என்னென்ன என்று பார்ப்போம் .
http://www.unc.edu/~echeran/paadanool/ : ஒவ்வொரு பிரிவு , பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது . ஆங்கில வடிவில் தமிழை இலகுவாக கற்கலாம் . 

http://www.ancientscripts.com/tamil.html 

http://ethirneechal.blogspot.com/2010/06/learn-tamil-online.html : விபரமாக தமிழை கற்றுக் கொள்ள .

இன்னும் பல தமிழ் கற்க , படிக்க , வாசிக்க உண்டு . சில தளங்கள் ஆன்லைன் மூலம் தமிழ் கற்க உதவும் . நண்பர்களே உங்களுக்கு தெரிந்த இணையத்தில் தமிழ் கற்க ஏற்ற தளங்களை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள் .