** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 23 March 2015

நண்பர்களே தொடர்ந்து 400 நாட்களாக அதாவது 1 வருடம் 1 மாதங்களாக திருக்குறளை தினமும் காலை வேளையில் பதிவிட்டு வருகிறேன்.பதிவை ஆரம்பிக்கும்போது  இது 4 ஆண்டுகள் பயணம் வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று நண்பர்களை அழைத்திருந்தேன்.அப்போது முதல் இன்று தொடர்ந்து வாசித்து வரும் ஆயிரக்கணக்கான நண்பர்களுக்கு எனது நன்றிகள்.நேற்று  மட்டும் 100 க்கும் மேற்ப்பட்ட அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் மூலம் வாழ்த்து அனுப்பியதன் மூலம் தினமும் திருக்குறளை படித்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.சில நாட்கள் பதிவிட நேரமில்லாமல் இருந்தாலும் காலை உணவை  தியாகம் செய்து  அந்த நேரத்தை பதிவிட பயன்படுத்திகொள்வேன்.தினமும் பதிவிட வேண்டும் என்னும் ஆர்வம் எனக்குள் உண்டு.இதை ஏன் இந்த நேரத்தில் சொல்கிறேன் என்றால் எந்த ஒரு செயலை நாம் செய்தாலும் அதனை எந்த ஒரு காரணத்திற்க்காவும் நிறுத்தாமலும் ,ஆர்வத்தோடு செய்ய வேண்டும் என்ற மன உறுதியோடு செய்யவேண்டும் எனபதனை உணர்த்தவே..இதே ஆர்வத்தோடு இன்னும் மூன்று ஆண்டுகள் சேர்ந்தே பயணிப்போம் வாருங்கள் நண்பர்களே..
வாழ்க வளமுடன்  நலமுடன்..
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு 
மாடல்ல மற்றை யவை.
 உரை:
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
Translation:
Learning is excellence of wealth that none destroy; 
To man nought else affords reality of joy.
Explanation:
Learning is the true imperishable riches; all other things are not riches.