** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 7 May 2015

07/05/2015... வியாழன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று சரிவுடன் துவங்கிய பங்குவர்ததகம், வர்த்தகநேர இறுதியில், கடும்சரிவுடன் முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 227 புள்ளிகள் சரிந்து 8097 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 86 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8077 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்று 8000 என்னும் புள்ளியை தொட வாய்ப்பு அதிகமாகி உள்ளது.
சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்..
கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 37.5% உயர்வு
கோடக் மஹிந்திரா வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 37.5 சதவீதம் உயர்ந்து 912.6 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வரு டம் இதே காலாண்டில் 663.3 கோடி ரூபாய் நிகர லாபம் இருந்தது.
ஐஎன்ஜி வைஸ்யா வங்கி கோடக் மஹிந்திராவுடன் இணைப்பு அறிவிப்புக்கு வெளி யாகும் முதல் காலாண்டு முடிவு இதுவாகும். இருந்தாலும் இந்த இணைப்பு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
வங்கியின் மொத்த வருமானமும் உயர்ந்திருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.4,782 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது 6,172 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஐந்து ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு 90 பைசா டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் வங்கியின் நிகர லாபம் 23.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2013-14ம் நிதி ஆண்டில் 2,464 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் இப்போது 3,045 கோடியாக உயர்ந்திருக்கிறது.
சவுத் இந்தியன் வங்கி நிகரலாபம் 86.9% சரிவு
சவுத் இந்தியன் வங்கியின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 86.9 சதவீதம் சரிந்து ரூ.16.32 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.124.60 கோடியாக இருந்தது. அதே சமயம் மொத்த வருமானம் ரூ.1,399 கோடியில் இருந்து 1,444 கோடியாக உயர்ந்தது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 1.71 சதவீதமாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1.19 சதவீதமாக இருந்தது. அதேபோல கடந்த வருடம் 0.78 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் இப்போது 0.96 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகரலாபம் குறைந்திருக்கிறது. 2013-14-ம் நிதி ஆண்டில் 507 கோடி ரூபாயாக இருந்த நிகரலாபம் இப்போது 307 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது. ஆனால் மொத்த வருமானம் 5,383 கோடியில் இருந்து 5,783 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் இயக்குநர் குழு 0.60 ரூபாய் டிவிடெண்டுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.
டாபர் நிகர லாபம் ரூ.284 கோடி
எப்எம்சிஜி நிறுவனமான டாபர் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 21 சதவீதம் உயர்ந்து 284 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.235 கோடியாக நிகரலாபம் இருந்தது.
நிறுவனத்தின் விற்பனை 10 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 1,764 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 1,944 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஒட்டுமொத்த நிதி ஆண்டில் நிகரலாபம் உயர்ந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் (2013-14) 913 கோடி ரூபாயாக இருந்த நிகரலாபம் 2014-15ம் நிதி ஆண்டில் 1065 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
நிகர விற்பனையும் 7,054 கோடி ரூபாயிலிருந்து 7,806 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தின் இயக்குநர் குழு இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 0.75 ரூபாய் அறிவித்திருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் டாபர் இந்தியா பங்கு 1.2% உயர்ந்து 264 ரூபாயில் முடிவடைந்தது.
நிப்டி சப்போர்ட் 8080,8010
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8170,8250
07-May-2015Details
Board Meetings
BASF India Ltd
Birla Corporation Ltd
Blue Dart Express Ltd
Great Eastern Shipping Company Ltd
Hero MotoCorp Ltd
IIFL Holdings Ltd
Jindal Saw Ltd
Piramal Enterprises Ltd
Sintex Industries Ltd
Titan Company Ltd
United Bank of India
AGM
Hexaware Technologies Ltd
Results
BASF India Ltd
Birla Corporation Ltd
Blue Dart Express Ltd
Great Eastern Shipping Company Ltd
Hero MotoCorp Ltd
IIFL Holdings Ltd
Jindal Saw Ltd
Piramal Enterprises Ltd
Sintex Industries Ltd
Titan Company Ltd
United Bank of India
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.