** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 1 December 2015

1/12/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வர்த்தக வாரத்தின் துவக்க நாளில் இந்திய பங்குச்சந்தைகள் மந்தமான சூழ்நிலையே நிலவியது. நாள் முழுக்க பெரிய அளவில் ஏற்றம் எதுவும் இல்லை. வர்த்தகம் முடியும்போது சிறு உயர்வுடன் முடிந்தன. செப்டம்பர் மாதத்திற்கான ஜிடிபி எதிர்பார்ப்பு, வங்கி வட்டி விகிதம் தொடர்பாக ரிசர்வ் வங்கி மேற்கொள்ள இருக்கும் முக்கிய முடிவு போன்ற காரணங்களால் நேற்றைய வர்த்தகம் நாள் மந்தமாக‌வே இருந்தன. 
நேற்றைய  நிப்டி 7 புள்ளிகள் சரிந்து 7935 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 78 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 260 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 7975 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ரிசர்வ் வங்கி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தது. இந்த நிலைமையில் ரிசர்வ் வங்கியின் அடுத்த கடன் மற்றும் நிதிக் கொள்கை அறிவிப்பு கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்க இருக்கிறது. பெரும்பாலான வல்லுநர்கள் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றே தெரிவித்திருக்கின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கி என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்தே ரகுராம் ராஜன் முடிவெடுப்பார். அதுவரையில் வட்டி விகிதத்தில் தற்போதைய நிலைமையே தொடரும் என்று யூகோ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆர்.கே.தாக்கர் தெரிவித்தார்.
அதேபோல இன்னொரு பொதுத் துறை வங்கியான யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குநர் சஞ்சய் ஆர்யாவும் வட்டி விகிதத்தில் தற்போதைய நிலைமையே தொடரும் என்று கணித்திருக்கிறார்.
மேலும் பணவீக்கம் குறித்து அச்சம் இருக்கிறது. அதனால் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இருக்காது. இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்க புரோக்கரேஜ் நிறுவனங்களான சிட்டி, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் ஆகிய நிறுவனங்களும் இந்த முறை வட்டி விகிதத்தில் எந்த ஆச்சர்யத்தையும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளன.
கடந்த செப்டம்பரில் 0.50 சதவீதம் அளவுக்கு வட்டி குறைப்பு செய்யப்பட்டதால் இந்த முறை வட்டி குறைப்பு ஏதும் இருக்காது. அதேபோல இறுதியாக வரும் பிப்ரவரியில் 0.25 சதவீதம் அளவுக்கு வட்டி குறைப்பு இருக்கும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் தனது ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. சர்வதேச காரணங்களால் இந்த முறை வட்டி குறைப்பு இருக்காது என்று தொழில் துறை அமைப்பான அசோசெம் கருத்து தெரிவித்திருக்கிறது.
அமெரிக்க மத்திய வங்கி கடந்த 9 வருடங்களில் முதல் முறையாக வட்டியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பர் 16-ம் தேதி இதற்கான அறிவிப்பை வெளி யிடலாம். சர்வதேச அளவில் நிதித்துறை வல்லுநர்கள் இதனை எதிர்நோக்கி யுள்ளனர்.
நிப்டி சப்போர்ட் 7910,7890
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7960,7990,8050
01-Dec-2015Details
EGM
Jagran Prakashan Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.