** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday 27 May 2017

பங்கு / பங்கு சந்தை என்றல் என்ன ????
பங்குகள் என்பது நிறுவனங்களால் விற்பனைப்படுத்தப்படும் ஆவணம் அல்லது பத்திரங்கள் .. பங்குகளை கொண்டுள்ளவர் அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ( PARTNER ) ஆவார் .. பங்குகளை இரண்டு வகையில் வாங்கலாம் .. IPO - நிறுவங்கள் தங்கள் பங்குகளை முதல் முறையாக சந்தைபடுத்தும் போது வாங்கலாம் அல்லது பங்கு சந்தைகளில் வாங்கலாம் ..நாம் ஒரு நிறுவரத்தின் பங்குகளை நம்மிடம் இருக்கும் போது அந்த நிறுவனத்தின் நமது பங்குக்கான லாபத்தை பெரும் உரிமை நமக்குள்ளது .. அந்த வகையான லாபத்தின் பெயர் பெயர் டிவிடெண்ட் (DIVIDENT )..பங்குளை வாங்கி விற்பதின் மூலமும் நாம் லாபங்களை பெற முடியும் இந்த வகையான லாபத்தின் பெயர் மூலதன லாபம் ( CAPITAL GAINS ) அதே போல் பங்குசத்தையில் நாம் பங்குகளை வாங்கிய விலைக்கு கீழ் நம் பங்குகளை விற்றால் நாம் மூலதன நட்டம் ( CAPITAL LOSS ) அடையவும் வாய்ப்பு உண்டு ..
பங்கு முதலீடு என்பது நான்கு வகையான லாபங்களை கொண்டது .,
1., ஒரு நிறுவன பங்கை நாம் வாங்கும் போது , நாம் அந்த நிறுவனத்தின் பங்குதாரராக ஆகிறோம் அதனால் நாம் அந்த நிறுவனத்தின் லாபங்களில் பங்கு பெற கூடியவர் ., ஒவ்வொரு வருடமும் நிறுவன லாபத்தில் நமது பகுதி பிரித்து அளிக்க படும் ..( இது ஒவ்வொரு நிறுவனத்தை பொறுத்தது )
2., பங்குகளின் விலை உயர்வதால் நமக்கு ஏற்படும் லாபம் .. நான் ஒரு பங்கு விலை உயர்வு ., ஒவ்வொரு பங்குதாரரின் லாபத்தையும் உயர்த்தும் ..
3., ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்து ஒரு வருடம் கழித்து எடுக்கும் லாபத்திற்கு எந்த வித வரியும் கிடையாது .. ( நிலம் ., ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளில் மிகையான வரிவித்துப்புகள் உண்டு )
4., ( LIQUIDATION ) .. மற்ற எந்த வகையான முதலீடுகளை விட ., பங்கு முதலீட்டில் ., விற்று பணமாக மாற்றுவது மிக எளிது உதாரணமாக ஒரு வாங்கிய நிலத்தை விற்று பணமாக்க சில மாதம் ஏன் வருடமே கூட பிடிக்கும் .. ஆனால் பங்கு முதலீட்டில் 2 நாட்களில் பணம் நாம் கையில் ...
பங்கு சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கு அழைக்கவும்...
9842799622
9842746626