** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 7 June 2017

7/6/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில தினங்களாக புதிய உச்சத்தை எட்டிய நிலையில் (ஜூன் 6-ம் தேதி) காலையும் புதிய உச்சத்தை எட்டின. குறிப்பாக நிப்டி முதன்முறையாக 9700 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. ஆனால் இந்த உச்சம் சில மணிநேரங்கள் தான் நீடித்தது, சற்றுநேரத்திலேயே பங்குச்சந்தைகள் சரிந்தன. கடந்த நாட்களில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால்  வர்த்தகம் சரிவுடன் முடிந்தன
நேற்றைய நிப்டி 38 புள்ளிகள் சரிவுடன் 9637 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 47 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9657  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பஜாஜ் எலெக்ட்ரிகல்ஸ் நிகர லாபம் 9% உயர்வு
பஜாஜ் எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு நிகர லாபம் 9.2 சதவீதம் அதிகரித்து ரூ.38.42 கோடியாக உள்ளது. 2015-16ம் ஆண்டில் இதே காலத்தில் ஈட்டியிருந்த நிகர லாபம் ரூ.35.24 கோடியாகும். 4-வது காலாண்டில் செயல்பாடுகளின் மூலமான வருமானம் ரூ.1,278.06 கோடியாகும்.
இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.1,363.98 கோடியாகும். 2016-17 நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.107.66 கோடியாகும். இது 2015-16 நிதி ஆண்டில் ரூ.110.34 கோடி என்று கூறியுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் இதன் பங்குகள் 3.47 சதவீதம் வரை வர்த்தக சரிவைக் கண்டு, 348.70 ரூபாயில் முடிவடைந்துள்ளது.
பேங்க் ஆப் இந்தியா நிகர நஷ்டம் ரூ.1,045 கோடி
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவின் ஒட்டுமொத்த நிகர நஷ்டம் கடந்த நிதி ஆண்டில் ரூ.1,045.54 கோடியாக உள்ளது. 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது ரூ.3,587.11 கோடியாக இருந்தது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் 8.35 சதவீதம் அதிக ரித்து ரூ.12,335.71 கோடியாக இருக் கிறது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் மொத்த வருமானம் ரூ.11,384.91 கோடியாக இருந்தது.
நான்காவது காலாண்டில் வங்கி யின் செயல்பாட்டு லாபம் 11 சத வீதம் அதிகரித்து ரூ.3,127.48 கோடியாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டின் நான்காவது காலாண்டில் ரூ.1,464.19 கோடியாக இருந்தது.
கடந்த காலாண்டில் வங்கியின் வாராகடன் ரூ.4,483.53 கோடியாக குறைந்துள்ளது. 2016ம் ஆண்டின் இதே காலாண்டில் வாராக்கடன் ரூ.5,441.67 கோடியாக இருந்தது.
டிஐ நிறுவனத்தின் லாபம் ரூ.1,175 கோடி
முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மெண்ட் (டிஐ) நிறுவனம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ.4,416 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.4,212 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டைவிட வருமானம் 5% உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் லாபம் ரூ. 1,175 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 789 கோடியாக இருந்தது. தற்போது லாபம் 49 சதவீதம் அதிகரித்துள்ளது.
நான்காவது காலாண்டு வருமானம் 3 சதவீதம் அதிகரித்து ரூ.1,168 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,130 கோடியாக இருந்தது. காலாண்டு முடிவுகளை வெளியிட்டு பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எல்.ராம்குமார், பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் காலத்தில் சைக்கிள்கள் பிரிவு வளர்ச்சி பாதிப்படைந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஏற்றுமதி 56 சதவீதம் உயர்ந்துள்ளது என்றார்.
இரிஸ் லைப்சயன்சஸ் நிறுவனம்; பங்கு வெளியீட்டிற்கு ‘செபி’ அனுமதி
மருந்து துறை­யில் ஈடு­பட்­டுள்ள, இரிஸ் லைப்­ச­யன்­சஸ் நிறு­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான, ‘செபி’ அனு­மதி வழங்­கி­யுள்­ளது.
நிப்டி சப்போர்ட் 9608,9580
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9687,9738
7 june details
divident
---------
relults
----------
bonus
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM