** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 18 February 2015

 ஒரு தத்துவம்..
உண்மையை பேசினால் சில நேரங்களில் உபத்திரவங்களும் வருகிறதே ?
நல்லவனாக இருக்கலாம் ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.
சுத்தமான தங்கத்தால் ஆபரணங்கள் செய்ய முடியாது. அதில் சிறிது செம்பு உலோகத்தை கலந்தால்தான் கண்ணை கவரும் விதத்தில் நகைகளை உருவாக்க முடியும். உண்மை பேசுவது என்பதும் அப்படிப் பட்ட ஒன்று தான்.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்"
என்று வள்ளுவர் எப்போதோ சொல்லி விட்டு போய்விட்டார்.
நீங்கள் பேசும் உண்மையால் உபத்திரவங்கள் வருகிறதென்றால் அந்த உண்மையை சொல்வதற்கு முன் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.
காயங்களை ஏற்படுத்தும் உண்மைகளை விட குணப்படுத்தும் பொய்கள் மேலானது என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும்.