** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 10 April 2015

10/04/2015...வெள்ளி... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வர்த்தகநேர துவக்கத்தில் ஏற்றத்துடனேயே துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 63 புள்ளிகள் உயர்ந்து 8778 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 56 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8798 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8750,8710,8680
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8790,8820,8850.
மார்ச் 2015 உடன் முடிந்த நிதி யாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட தயாராகி வருகின்றன இந்திய ஐடி நிறுவனங் கள்.
முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஏப்ரல் 24 ம் தேதி தனது காலாண்டு முடிவுகளை வெளி யிட உள்ளதாக அறிவித்துள்ளது. மற்றொரு முன்னணி நிறுவனமான டிசிஎஸ் தனது நான்காம் காலாண்டு முடிவுகளை ஏப்ரல் 16ம் தேதி அறிவிக்க உள்ளது.
ஏப்ரல் 24ம் தேதி இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் காலாண்டு முடிவு மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியிட உள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனம் ஏப்ரல் 21ல் தேதி தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது. இந்த நிறுவனம் 2014 ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் 29.8 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. அதுபோல டிசிஎஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமான வளர்ச்சி 31.2 சதவீதமாக இருந்தது.
விப்ரோ நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் தேதியை இன்னும் வெளியிடவில்லை.
10-Apr-2015Details
EGM
Strides Arcolab Ltd
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்த பின்னரும், வங்கிகள் வட்டியை குறைக்கவில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியதை அடுத்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலில் வட்டி விகிதத்தை குறைத்தது.
இதை தொடர்ந்து ஹெச்.டி.எப்.சி. வங்கியும், ஐசிஐசிஐ வங்கியும் வட்டி விகிதங்களை குறைத்தன.
எஸ்.பி.ஐ. மற்றும் ஹெச்.டி.எப்.சி. ஆகிய வங்கிகள் அடிப்படை வட்டி விகிதத்தை 0.15 சதவிதம் வரை குறைத்தன. ஐசிஐசிஐ வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரை குறைத்தது.
எஸ்.பி.ஐ. மற்றும் ஹெச்.டி.எப்.சி வங்கிகளின் வட்டி குறைப்பு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும். ஐசிஐசிஐ வங்கியின் வட்டி குறைப்பு ஏப்ரல் 13-ம் தேதி வரை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் நடுத்தர கால டெபாசிட்களுக்கான (ஒரு கோடி ரூபாய் வரை) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்திருக்கின்றன.
நாட்டின் மூன்றாவது பெரிய தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியும் நேற்று வட்டி குறைத்தது. அடிப்படை வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் வரை குறைத்தது. இப்போது 9.95 சதவீதமாக இந்த வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் இருக்கிறது. இந்த வட்டி குறைப்பு ஏப்ரல் 13-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்திருக்கிறது.
அதேபோல அனைத்து வகையான டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.
முக்கிய வங்கிகள் வட்டி குறைப்பு செய்ததை அடுத்த மற்ற வங்கிகளும் வட்டி குறைப்பில் ஈடுபடலாம் என்று தெரிகிறது.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.