** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 15 May 2015

15/05/2015... வெள்ளி... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று சரிவுடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் இறுதியில் சிறு சரிவுடன் முடிந்தன.முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்றதால் தொடக்கத்தில் அதிக சரிவு இருந்தன. ஆனால் ரூபாயின் மதிப்பில் காணப்பட்ட ஏற்றம், பணவீக்கம் சரிந்தது, அதன்காரணமாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பால் பங்குசந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டன. ஆனபோதும் இறுதியில் பங்குசந்தைகள் சிறு சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 11 புள்ளிகள் சரிந்து 8224 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 191 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8244 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இமாமி நிகர லாபம் 24% உயர்வு
எப்எம்சிஜி துறையை சேர்ந்த நிறு வனமான இமாமியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 24% உயர்ந்து ரூ.138 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.111 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
நிகர விற்பனை 24 சதவீதம் உயர்ந்து 553 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர விற்பனை 445 கோடி ரூபாயாக இருந்தது. உள்நாட்டு விற்பனை சிறப்பாக இருந்ததால் விற்பனை வளர்ச்சி நன்றாக இருந்ததாக இமாமி நிறு வனம் அறிக்கையில் தெரிவித் திருக்கிறது. அதேபோல மார்ச் காலாண்டில் வெளிநாட்டு விற் பனையும் 48% உயர்ந்திருக்கிறது.
மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 485 கோடி ரூபாயாக உள்ளது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் 402 கோடி ரூபாயாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர விற்பனை 2,217 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் 1,820 கோடி ரூபாயாக இருந்தது.
லுபின் நிகர லாபம் 1% சரிவு
மருந்து துறையில் முன்னணி நிறுவனமான லுபின் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 1 சதவீதம் சரிந்து 547 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 553 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் நிகர விற்பனை சிறிதளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 3,051 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 3,054 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் ஒட்டு மொத்த நிதி ஆண்டு நிகர லாபம் 30 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2013-14ம் நிதி ஆண்டில் 1,836 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம், 2014-15 நிதி ஆண்டில் 2,403 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
2013-14-ம் நிதி ஆண்டில் 11,086 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை, 2014-15 நிதி ஆண்டில் 12,599 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் ஒரு பங்குக்கு 7.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழுமம் பரிந்துரை செய்திருக்கிறது.
அதானி எண்டர்பிரைசஸ் நிகரலாபம் 74% சரிவு
அதானி குழுமத்தை சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 74% சரிந்து 737 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,847 கோடி ரூபாயாக இருந்தது.
மார்ச் காலாண்டில் மொத்த வரு மானத்தில் சிறிய சரிவு இருந்தது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 16,182 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 16,140 கோடி ரூபாயாக உள்ளது.
இந்த ஆண்டு எங்கள் குழுமம் வெள்ளி விழா கொண்டாடுகிறது. வருங்காலத்தில் எங்கள் குழுமம் தேசத்தின் வளர்ச்சிக்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யும் என்று நிறுவனத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்தார்.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் 12 சதவீதம் சரிந்தது. 2013-14-ம் மார்ச் காலாண்டில் 2,220 கோடி ரூபாயாக இருந்த நிகரலாபம் இப்போது சரிந்து 1,948 கோடி ரூபாயாக உள்ளது.
நிப்டி சப்போர்ட் 8199,8160,8100
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8230,8260,8300
Results
BF Utilities Ltd
Cadila Healthcare Ltd
Cox & Kings Ltd
Dena Bank
Edelweiss Financial Services Ltd
Future Consumer Enterprise Ltd
H T Media Ltd
Housing Development & Infrastructure Lt
IL&FS Transportation Networks Ltd
Jain Irrigation Systems Ltd
JK Lakshmi Cement Ltd
JSW Steel Ltd
Nestle India Ltd
Oracle Financial Services Software Ltd
Puravankara Projects Ltd
Schneider Electric Infrastructure Ltd
Tata Coffee Ltd
Torrent Pharmaceuticals Ltd
Videocon Industries Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.